கோவில் 1516 - கேரளா கொல்லம் பிராக்குளம் மணலில் சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1516
மங்கல வாழ்வு அருளும் கேரளா கொல்லம் பிராக்குளம் மணலில் சுப்பிரமணிய சுவாமி கோவில்
2.08.2025 சனி
அருள்மிகு மணலில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
[பிராக்குளம் குமாரமங்கலம் கோவில்/Prakkulam Sree Kumaramangalam Temple]
மணலில் [Manalil]
பிராக்குளம் 691602 [Prakkulam]
கொல்லம் மாவட்டம் [Kollam District]
கேரளா மாநிலம் [Kerala]
இருப்பிடம்: கொல்லம் 12 கிமீ, பரவூர் 26 கிமீ, கருநாகப்பள்ளி 29 கிமீ, வர்கலா 36 கிமீ, அடூர் 41 கிமீ, திருவனந்தபுரம் 72 கிமீ
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
தேவி: தெய்வானை
தல மகிமை:
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் கொல்லம் நகரிலிருந்து 12 கிமீ தொலைவில் இருக்கும் பிராக்குளம் கிராமத்தின் அருகில் இருக்கும் மணலில் பகுதியில் அஷ்டமுடி ஏரிக்கரையில் மங்கல வாழ்வு அருளும் கொல்லம் பிராக்குளம் மணலில் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் குமாரமங்கலம் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் பரவூரிலிருந்து 26 கிமீ தொலைவு அல்லது கருநாகப்பள்ளியிலிருந்து 29 கிமீ தொலைவு அல்லது 35 கிமீ வர்கலாவிலிருந்து 36 கிமீ தொலைவு அல்லது அடூரிலிருந்து 41 கிமீ தொலைவு அல்லது கேரள தலைநகரம் திருவனந்தபுரத்திலிருந்து 72 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கொல்லம் பிராக்குளம் மணலில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை சமேதராக வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்.
கேரளா கொல்லம் பிராக்குளம் மணலில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகம் விமரிசையாக நடைபெறுகிறது. கஜ மேளாவிற்குப் பெயர் பெற்ற திருக்கோவில் இதுவாகும். இந்த திருவிழா வைகாசி விசாகத் திருநாளில் நடைபெறும். மேலும் தைப்பூசம் [தைப்பூயம்], பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை முதலான திருநாட்களில் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பிராக்குளம் மணலில் சுப்பிரமணிய சுவாமி கோவில் அஷ்டமுடி ஏரிக்கரையில் ஸ்ரீ நாராயண குருவால் நிறுவப்பட்டது. இக்கோவில் கொல்லத்தின் புகழ் பெற்ற திருக்கோவிலாகும். பிராக்குளம் மணலில் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆனயூட்டு (கஜபூஜை) திருவிழா வெகுச் சிறப்பாக நடைபெறுகிறது.
தல அமைப்பு:
கொல்லம் பிராக்குளம் மணலில் சுப்பிரமணிய சுவாமி கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் மேற்கு நோக்கி ஆற்றலுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் இக்கோவிலில் விநாயகர் உள்ளிட்ட தெய்வங்கள் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
வைகாசி விசாகம், தைப்பூசம், திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
மங்கல வாழ்வு அருள, சங்கடங்கள் தீர, முன்னோருக்கு ப்ரீதி செய்தல், தெய்வீக உணர்வுகள் ஏற்பட, வினைகள் நீங்க, பிணிகள் விலக, திருமண பாக்கியம், குழந்திய பாக்கியம் வேண்டி, குடும்ப வாழ்வு சிறக்க, உடல் ஆரோக்கியம் உண்டாக, நல்லன அருள, மன அமைதி கிடைக்க, தோஷங்கள் அகல
நேர்த்திக்கடன்:
கஜபூஜை, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 5-10 மாலை 5-7.45
சங்கடங்கள் தீர்க்கும் கேரளா கொல்லம் பிராக்குளம் மணலில் சுப்பிரமணிய சுவாமியை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ சித்தாந்தச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1516 மங்கல வாழ்வு அருளும் கேரளா கொல்லம் பிராக்குளம் மணலில் சுப்பிரமணிய சுவாமி கோவில்
Comments
Post a Comment