கோவில் 1515 - கேரளா கொல்லம் நெடும்பனா பாலமுக்கு சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1515
வேண்டும் வரம் தரும் கேரளா கொல்லம் நெடும்பனா பாலமுக்கு சுப்பிரமணிய சுவாமி கோவில்
1.08.2025 வெள்ளி
அருள்மிகு பாலமுக்கு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
பாலமுக்கு [Palamukku]
நெடும்பனா 691576 [Nedumpana]
கொல்லம் மாவட்டம் [Kollam District]
கேரளா மாநிலம் [Kerala]
இருப்பிடம்: கொல்லம் 12 கிமீ, நெடும்பனா 2 கிமீ, பரவூர் 18 கிமீ, வர்கலா 28 கிமீ, கருநாகப்பள்ளி 35 கிமீ, புனலூர் 39 கிமீ, திருவனந்தபுரம் 59 கிமீ
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
தல மகிமை:
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் கொல்லம் நகரிலிருந்து 12 கிமீ தொலைவில் இருக்கும் நெடும்பனா கிராமத்தின் அருகில் இருக்கும் பாலமுக்கு பகுதியில் வேண்டும் வரம் தரும் கொல்லம் நெடும்பனா பாலமுக்கு சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. மேலும் நெடும்பனா கிராமத்திலிருந்து 2 கிமீ தொலைவு அல்லது பரவூரிலிருந்து 18 கிமீ தொலைவு அல்லது வர்கலாவிலிருந்து 28 கிமீ தொலைவு அல்லது கருநாகப்பள்ளியிலிருந்து 35 கிமீ தொலைவு அல்லது புனலூரிலிருந்து 39 கிமீ தொலைவு அல்லது கேரள தலைநகரம் திருவனந்தபுரத்திலிருந்து 59 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கொல்லம் நெடும்பனா பாலமுக்கு சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் சுப்பிரமணிய சுவாமி மூலவராக வீற்றிருந்து அருளாட்சி புரிகின்றார்.
கேரளா கொல்லம் நெடும்பனா பாலமுக்கு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசம் [தைப்பூயம்] சிறப்புப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகிறது. மேலும் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் விமரிசையாக நடைபெறுகின்றன. சஷ்டி, கிருத்திகை நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் நெடும்பனா பாலமுக்கு சுப்பிரமணிய சுவாமி கோவில் தமிழக கோவில் கட்டிடக் கலையமைப்புடன் கூடிய கோவிலாக உள்ளது.
தல அமைப்பு:
கொல்லம் நெடும்பனா பாலமுக்கு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அழகிய அமைப்புடன் கூடிய கோபுரங்கள், சிற்பங்கள் உள்ளன. இக்கோவிலில் கொடிமரம் உள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் சுப்பிரமணிய சுவாமி மூலவராக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் இக்கோவிலில் விநாயகர், ஐயப்பன், சிவபெருமான், பார்வதி மற்றும் அனைத்து தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
வேண்டும் வரம் பெற, நேர்மறை ஆற்றல் கிடைக்க, இரு வினைகள் விலக, பிணிகள் நீங்க, சந்தான பாக்கியம் வேண்டி, குடும்ப வாழ்வு சிறக்க, மன அமைதி கிட்ட, நோய்கள் குணமாக, தொல்லைகள் தீர, நல்லன அருள, தோஷங்கள் போக்க
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
நேர்மறை ஆற்றல் அதிகரிக்க அருளும் கேரளா கொல்லம் நெடும்பனா பாலமுக்கு சுப்பிரமணிய சுவாமி திருவடி பணிந்து போற்றுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ சித்தாந்தச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1515 வேண்டும் வரம் தரும் கேரளா கொல்லம் நெடும்பனா பாலமுக்கு சுப்பிரமணிய சுவாமி கோவில்
Comments
Post a Comment