கோவில் 1514 - கேரளா கொல்லம் துரயில்குன்னு சுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1514

நினைத்ததை நிறைவேற்றும் கேரளா கொல்லம் துரயில்குன்னு சுப்பிரமணிய சுவாமி கோவில்

31.07.2025 வியாழன்


அருள்மிகு துரயில்குன்னு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

துரயில்குன்னு 690573 [Thurayilkunnu]

[தூரயில்குன்னு]

அயனிவெளிகுளங்கரா [Ayanivelikulangara]

கொல்லம் மாவட்டம் [Kollam District]

கேரளா மாநிலம் [Kerala]

இருப்பிடம்: கொல்லம் 30 கிமீ, கருநாகப்பள்ளி 4 கிமீ, காயம்குளம் 20 கிமீ, மாவெலிக்கரா 28 கிமீ, அடூர் 34 கிமீ, திருவனந்தபுரம் 90 கிமீ


மூலவர்: சுப்பிரமணிய சுவாமி


தல மகிமை:

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் கொல்லம் நகரிலிருந்து 30 கிமீ தொலைவில் இருக்கும் அயனிவெளிகுளங்கரா கிராமத்தின் அருகில் இருக்கும் துரயில்குன்னு பகுதியில் நினைத்ததை நிறைவேற்றும் கொல்லம் துரயில்குன்னு சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. மேலும் கருநாகப்பள்ளியிலிருந்து 4 கிமீ தொலைவு அல்லது காயம்குளத்திலிருந்து 20 கிமீ தொலைவு அல்லது மாவெலிக்கராவிலிருந்து 28 கிமீ தொலைவு அல்லது அடூரிலிருந்து 34 கிமீ தொலைவு அல்லது கேரள தலைநகரம் திருவனந்தபுரத்திலிருந்து 90 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கொல்லம் துரயில்குன்னு சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். மூலவர் சுப்பிரமணிய சுவாமி இத்திருக்கோவிலில் அருளாட்சி செய்கின்றார்.


கேரளா கொல்லம் துரயில்குன்னு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசம் [தைப்பூயம்] முக்கியத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. திருக்கார்த்திகை திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது. மேலும் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன. சஷ்டி, கிருத்திகை நன்னாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.


தல வரலாறு:

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் துரயில்குன்னு சுப்பிரமணிய சுவாமி கோவில் கேரள பழமையான கோவிலாகக் கருதப்படுகிறது.

தல அமைப்பு:

கொல்லம் துரயில்குன்னு சுப்பிரமணிய சுவாமி கோவில் அழகிய அமைப்புடன் உள்ளது. திருக்கோவிலில் ஒரு கொடிமரம் உள்ளது. இக்கோவில் கருவறையில் சுப்பிரமணிய சுவாமி மூலவராக திருக்காட்சியருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், ஐயப்பன், சிவபெருமான், நாகர்கள் உள்ளிட்ட தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

நினைத்தது நிறைவேற, மன மகிழ்ச்சி தர, வினைகள் தீர, பிணிகள் அகல, குழந்தை வரம் வேண்டி, உடல் ஆரோக்கியம் வேண்டி, சங்கடங்கள் விலக, நல்லன அருள, தோஷங்கள் போக்க


நேர்த்திக்கடன்:

காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


மன மகிழ்ச்சி தந்தருளும் கேரளா கொல்லம் துரயில்குன்னு சுப்பிரமணிய சுவாமியை மனமுருகி தொழுவோம்!

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ சித்தாந்தச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1514 நினைத்ததை நிறைவேற்றும் கேரளா கொல்லம் துரயில்குன்னு சுப்பிரமணிய சுவாமி கோவில்


படம் 2 - 1514 மன மகிழ்ச்சி தந்தருளும் கேரளா கொல்லம் துரயில்குன்னு சுப்பிரமணிய சுவாமி கோவில்

Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1201 - கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்