கோவில் 1510 - கேரளா கொல்லம் கண்ணம்கோடு சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1510
வினைகளை விலக்கும் கேரளா கொல்லம் கண்ணம்கோடு சுப்பிரமணிய சுவாமி கோவில்
27.07.2025 ஞாயிறு
அருள்மிகு கண்ணம்கோடு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
[அ/மி வெட்டிக்காவல சுப்ரமணிய சுவாமி திருக்கோவில்]
வெட்டிக்காவல-பனவெல்லி சாலை
[Vettikavala-Panavelli Road]
கண்ணம்கோடு 691538 [Kannamkodu]
கொல்லம் மாவட்டம் [Kollam District]
கேரளா மாநிலம் [Kerala]
இருப்பிடம்: கொல்லம் 33 கிமீ, புனலூர் 16 கிமீ, சாத்தன்னூர் 24 கிமீ, பரவூர் 34 கிமீ, திருவனந்தபுரம் 62 கிமீ
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
தல மகிமை:
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் கொல்லம் நகரிலிருந்து 33 கிமீ தொலைவில் இருக்கும் கண்ணம்கோடு கிராமத்தில் வினைகளை விலக்கும் கொல்லம் கண்ணம்கோடு சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் வெட்டிக்காவல சுப்ரமணிய சுவாமி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் புனலூரிலிருந்து 16 கிமீ தொலைவு அல்லது சாத்தன்னூரிலிருந்து 24 கிமீ தொலைவு அல்லது பரவூரிலிருந்து 34 கிமீ தொலைவு அல்லது கேரள தலைநகரம் திருவனந்தபுரத்திலிருந்து 62 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கொல்லம் கண்ணம்கோடு சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். சுப்பிரமணிய சுவாமி இத்திருக்கோவிலில் மூலவராக வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்.
கேரளா கொல்லம் கண்ணம்கோடு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூசத் திருவிழா [தைப்பூயம்] விமரிசையாக நடைபெறுகிறது. பக்தர்கள் தைப்பூசத் திருவிழாவில் காவடி ஏந்தி வருவது இக்கோவிலின் சிறப்பம்சமாகும். இந்த கோவிலின் ஆண்டு திருவிழா "கண்ணம்கோடு மகா தைப்பூயம்" என்று அழைக்கப்படுகிறது. மேலும் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம் போன்ற முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்புப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை நாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன. இக்கோவிலில் நடைபெறும் ஆயில்யம் பூஜை மிகவும் பிரசித்திப் பெற்றது. இப்பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்கள் பல்வேறு நோய்களிலிருந்து, குறிப்பாக பாம்புகள் அல்லது பாம்புகள் தொடர்பானவற்றிலிருந்து (நாகதோஷம்) நிவாரணம் அளிக்கும் என்றும் உறுதி செய்யும் என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள்.
தல வரலாறு:
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கண்ணம்கோடு சுப்பிரமணிய சுவாமி கோவில் தெற்கு கேரளப் பகுதியில் பிரசித்திப் பெற்றக் கோவிலாகும்.
தல அமைப்பு:
அழகிய அமைப்புடன் கூடிய கொல்லம் கண்ணம்கோடு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பொலிவான சிற்பங்கள் மற்றும் கொடிமரம் உள்ளன. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் திருக்காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் இக்கோவிலில் விநாயகர், யோகேஸ்வரர், நாகராஜர், சாஸ்தா, நாராயண குருதேவன் உள்ளிட்ட எல்லா தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், சஷ்டி, கிருத்திகை, ஆயில்யம்
பிரார்த்தனை:
வினைகள் விலக, வேண்டியதை பெற்றிட, பிணிகள் நீங்க, குழந்தை பாக்கியம் வேண்டி, குடும்ப ஒற்றுமை ஓங்க, நோய்கள் குணமாக, சங்கடங்கள் தீர, மன அமைதி கிட்ட, நல்வாழ்வு பெற, தோஷங்கள் அகல
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 5.30-10 மாலை 5-7.30
வேண்டியதை தந்தருளும் கேரளா கொல்லம் கண்ணம்கோடு சுப்பிரமணிய சுவாமியை மனமுருகி பிரார்த்திப்போம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ சித்தாந்தச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1510 வினைகளை விலக்கும் கேரளா கொல்லம் கண்ணம்கோடு சுப்பிரமணிய சுவாமி கோவில்
Comments
Post a Comment