கோவில் 1480 - சென்னை அண்ணாநகர் கிழக்கு ஓம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1480
வினைகள் நீக்கும் சென்னை அண்ணாநகர் கிழக்கு ஓம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
27.06.202 வெள்ளி
அருள்மிகு ஓம் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
குமரன் நகர்
அண்ணாநகர் கிழக்கு
சென்னை 600102
இருப்பிடம்: சென்னை சென்ட்ரல் 7 கிமீ, சென்னை கிளாம்பாக்கம் பே. நி 35 கிமீ, சென்னை எழும்பூர் 5 கிமீ, கோயம்பேடு 5 கிமீ, தி. நகர் 7 கிமீ, பெரம்பூர் 8 கிமீ
மூலவர்: ஓம் பாலசுப்பிரமணிய சுவாமி
தல மகிமை:
சென்னை மாநகரம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 7 கிமீ தொலைவில் அண்ணாநகர் கிழக்கு குமரன் நகரில் வினைகள் நீக்கும் சென்னை அண்ணாநகர் கிழக்கு ஓம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. மேலும் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 35 கிமீ தொலைவு அல்லது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவு அல்லது கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவு அல்லது தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து 7 கிமீ தொலைவு அல்லது பெரம்பூர் பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சென்னை அமைந்தகரை சிவசுப்பிரமணியர் கோவிலை அடையலாம். இக்கோவிலில் மூலவர் அண்ணாநகர் கிழக்கு ஓம் பாலசுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் வீற்றிருந்து அருள்கின்றார்.
சென்னை அண்ணாநகர் கிழக்கு ஓம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் கந்த சஷ்டி பெருவிழா சிறப்பு பூஜைகளுடன் நடைபெறுகின்றது. மேலும் முருகப்பெருமானின் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை உள்ளிட்ட அனைத்துத் திருவிழாக்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை நாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன. பிரதோஷம் மற்றும் சங்கடஹர சதுர்த்தி தினங்களில் சிறப்புப் பூஜைகள் உண்டு.
தல வரலாறு:
சென்னை அண்ணாநகர் கிழக்கு ஓம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் இப்பகுதி புரவலர்களால் 1978-ல் ஆரம்பிக்கப்பட்டது.
தல அமைப்பு:
அழகிய அமைப்புடைய சென்னை அண்ணாநகர் கிழக்கு ஓம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் கருவறையில் மூலவர் ஓம் பாலசுப்பிரமணிய சுவாமி பொலிவான தோற்றத்தில் கையில் வேலுடன் அபயக்கரம் நீட்டி, மயில் பின் நிற்க திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, துர்க்கை, கண்கண்டேஸ்வரர் (சிவபெருமான்), பார்வதி தேவி, நடராஜர், ஆஞ்சநேயர், கருமாரி அம்மன், வராஹி அம்மன், பைரவர், நவக்கிரகங்கள், சாய்பாபா உட்பட அனைத்து மூர்த்திகளும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். இக்கோவிலில் மேல் இருந்து ஒவ்வொரு நீர்த்துளியாக நீர் சிவபெருமான் தலை மீது விழுவது சிறப்பம்சம்.
திருவிழா:
கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, பிரதோஷம், சஷ்டி, கிருத்திகை, சங்கடஹர சதுர்த்தி
பிரார்த்தனை:
வினைகள் நீங்க, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க, பிணிகள் அகல, எண்ணியது ஈடேற, சந்தான பாக்கியம் வேண்டி, உடல் ஆரோக்கியம் கிடைக்க, மன அமைதி கிட்ட, நல்லன நடக்க, தொழில், வியாபாரம் மேம்பட, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 6.30-10.30 மாலை 5.30-8.30
நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும் சென்னை அமைந்தகரை அண்ணாநகர் கிழக்கு ஓம் பாலசுப்பிரமணிய சுவாமி போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1480 வினைகள் நீக்கும் சென்னை அண்ணாநகர் கிழக்கு ஓம் பாலசுப்பிரமணிய சுவாமி
Comments
Post a Comment