கோவில் 1452 - நாமக்கல் பொத்தனூர் பச்சைமலை பாலதண்டாயுதபாணி கோவில்

 🙏🙏

தினம் ஒரு முருகன் ஆலயம்-1452

ஞானம் மேம்பட அருளும் நாமக்கல் பொத்தனூர் பச்சைமலை பாலதண்டாயுதபாணி கோவில்

30.05.2025 வெள்ளி


அருள்மிகு பச்சைமலை பாலதண்டாயுதபாணி திருக்கோவில் [TM009673]

பொத்தனூர் 638181

பரமத்தி வேலூர் வட்டம்

நாமக்கல் மாவட்டம்


இருப்பிடம்: நாமக்கல் 30 கிமீ, பரமத்தி வேலூர் 5 கிமீ, மோகனூர் 21 கிமீ, கரூர் 25 கிமீ, சேந்தமங்கலம் 39 கிமீ


மூலவர்: பாலதண்டாயுதபாணி

பரம்பரை அறங்காவலர் & அர்ச்சகர்: திரு சக்திவேல் 99942 55438


தல மகிமை:

நாமக்கல் மாவட்டம் நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து 30 கிமீ தொலைவில் இருக்கும் பொத்தனூர் கிராமத்தில் உள்ள பச்சைமலை என்ற சிறிய குன்றில் ஞானம் மேம்பட அருளும் பொத்தனூர் பச்சைமலை பாலதண்டாயுதபாணி கோவில் அமைந்துள்ளது. மேலும் பரமத்தி வேலூர் பேருந்து நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவு அல்லது மோகனூர் பேருந்து நிலையத்திலிருந்து 21 கிமீ தொலைவு அல்லது கரூர் பேருந்து நிலையத்திலிருந்து 25 கிமீ தொலைவு அல்லது சேந்தமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து 39 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம் பொத்தனூர் பச்சைமலை பாலதண்டாயுதபாணி கோவிலை அடையலாம். பாலதண்டாயுதபாணி இத்திருக்கோவிலில் மூலவராக மேற்கு நோக்கி வீற்றிருந்து பழனி தண்டாயுதபாணி போலவே ஆற்றலுடன் அருளாட்சி செய்கின்றார்.


நாமக்கல் மாவட்டம் பொத்தனூர் பச்சைமலை பாலதண்டாயுதபாணி கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூசம் திருவிழா சிறப்பு பூஜைகளுடன் விமரிசையாகக் நடைபெறுகின்றது.. இக்கோவிலில் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. கிருத்திகை திருநாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.


தல வரலாறு:

நாமக்கல் மாவட்டம் பொத்தனூர் பச்சைமலை பாலதண்டாயுதபாணி கோவில் செல்லும் வழியெங்கும் பசுமை நிறைந்த விவசாயம் செழிப்பாக உள்ளதால் இந்த சிறிய குன்றிற்கு பச்சைமலை என பெயர் வந்தாக பரம்பரை அறங்காவலும், அர்ச்சகருமான திரு சக்திவேல் கூறுகின்றார். அவர் தந்தை திரு நாகராஜன் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட சிறப்பு மிக்க திருக்கோவிலாகும். இந்து அறநிலையத் துறை வலைத்தளத்தில் இக்கோவில் இந்து அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழ் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


தல அமைப்பு:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம் பொத்தனூர் பச்சைமலை பாலதண்டாயுதபாணி கோவிலுக்கு செல்ல படிக்கட்டுகள் சீராக அமைந்துள்ளன. கோவிலை அடைந்த உடன் கருவறையை நோக்கி மயில், பலிபீடம் உள்ளன. வலது பக்கம் ராமபிரான் மற்றும் ஆஞ்சநேயர் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். இட்து பக்கம் சிவபெருமான், ராகு, கேது வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். திருக்கோவில் கருவறையில் பாலதண்டாயுதபாணி கையில் தண்டத்துடன் பழனி தண்டாயுதபாணி போல மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி அம்மன், சனீஸ்வரர் நவக்கிரகங்கள், வீரபாகு, இடும்பன் முதலான தெய்வங்கள் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

ஞானம் மேம்பட, கேட்டது கிடைக்க, வினைகள் விலக, பிணிகள் நீங்க, பிள்ளை வரம் வேண்டி, உடல் ஆரோக்கியம் உண்டாக, மன அமைதி கிட்ட, விவ்சாயம் செழிக்க, தொழில், வியாபாரம் சிறக்க, நல்லன அருள, நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்க, தோஷங்கள் அகல


திறக்கும் நேரம்:

காலை 6-10 மாலை 4.30-6.30 [கிருத்திகை, விசேஷ நாட்கள் காலை 6 முதல் மாலை 6.30 வரை]


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்,


கேட்டதை எல்லாம் தந்தருளும் நாமக்கல் பொத்தனூர் பச்சைமலை பாலதண்டாயுதபாணி திருப்பாதங்கள் பணிந்து வேண்டிடுவோம்!

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🙏


படம் 1 - 1452 ஞானம் மேம்பட அருளும் நாமக்கல் பொத்தனூர் பச்சைமலை பாலதண்டாயுதபாணி


படம் 2 - 1452 கேட்டதை எல்லாம் தந்தருளும் நாமக்கல் பொத்தனூர் பச்சைமலை பாலதண்டாயுதபாணி





Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1201 - கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்