கோவில் 1334 - சேலம் எடப்பாடி சக்தி முருகன் கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1334

கேட்கும் வரங்களை அள்ளி வழங்கும் சேலம் எடப்பாடி சக்தி முருகன் கோவில்

1.02.2025 சனி


அருள்மிகு சக்தி முருகன் திருக்கோவில்

வீட்டு வசதி வாரியம் [Housing Board]

பூலாம்பட்டி ரோடு

எடப்பாடி 637101

எடப்பாடி வட்டம்

சேலம் மாவட்டம்

இருப்பிடம்: சேலம் புதிய பேருந்து நிலையம் 43 கிமீ, எடப்பாடி பே. நி. 2 கிமீ, சங்ககிரி 17 கிமீ, தாரமங்கலம் 24 கிமீ, மேட்டூர் 28 கிமீ, மேச்சேரி 34 கிமீ, ஒமலூர் 35 கிமீ

மூலவர்: சக்தி முருகன்

செல்: திரு. சண்முகம் 92452 50108


தல மகிமை:

சேலம் மாவட்டம் சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 43 கிமீ தொலைவில் உள்ள எடப்பாடி நகரம் பூலாம்பட்டி சாலையில் வீட்டு வசதி வாரியம் [Housing Board] பகுதியில் கேட்ட வரங்களை அள்ளி வழங்கும் எடப்பாடி சக்தி முருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் எடப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவு அல்லது சங்ககிரி பேருந்து நிலையத்திலிருந்து 17 கிமீ தொலைவு அல்லது தாரமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து 24 கிமீ தொலைவு அல்லது மேட்டூர் 28 கிமீ தொலைவு அல்லது மேச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து 34 கிமீ தொலைவு அல்லது ஒமலூர் பேருந்து நிலையத்திலிருந்து 35 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சேலம் மாவட்டம் எடப்பாடி சக்தி முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சக்தி முருகன் கருணை பொங்க அருளாட்சி செய்கின்றார்.


எடப்பாடி சக்தி முருகன் கோவிலில் முக்கிய திருவிழாவாக தைப்பூசம் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.


தல வரலாறு:

எடப்பாடி நகர் வாழ் வன்னிய குல க்ஷத்திரிய சமூகத்தினரால் சக்தி முருகன் கோவில் கட்டப்பட்டு, சீரிய முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.


தல அமைப்பு:

எடப்பாடி சக்தி முருகன் கோவில் கருவறையில் மூலவராக சக்தி முருகன் கையில் வேலுடன் வீற்றிருந்து ஆற்றலுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், சிவபெருமான் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளும் இக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கார்த்திகை


பிரார்த்தனை:

கேட்கும் வரங்கள் கிடைக்க, செல்வம் பெருக, பிணிகள் நீங்க, குழந்தைப்பேறு கிட்ட, எதிரிகள் தொல்லை அகல, உடல் ஆரோக்கியம் வேண்டி, தொழில் வெற்றியடைய, விவசாயம் செழிக்க


நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


செல்வம் பெருக அருளும் சேலம் எடப்பாடி சக்தி முருகனை மனமுருகி வேண்டிடுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1334 கேட்கும் வரங்களை அள்ளி வழங்கும் சேலம் எடப்பாடி சக்தி முருகன்


படம் 2 - 1134 செல்வம் பெருக அருளும் சேலம் எடப்பாடி சக்தி முருகன்


Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 1201 - கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்