கோவில் 1332 - சேலம் எடப்பாடி அருள்ஞான முருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1332
ஞானம் அருளும் சேலம் எடப்பாடி அருள்ஞான முருகன் கோவில்
30.01.2025 வியாழன்
அருள்மிகு அருள்ஞான முருகன் திருக்கோவில்
எடப்பாடி 637101
எடப்பாடி வட்டம்
சேலம் மாவட்டம்
இருப்பிடம்: சேலம் புதிய பேருந்து நிலையம் 42 கிமீ, எடப்பாடி பே. நி. 500 மீ, சங்ககிரி 16 கிமீ, தாரமங்கலம் 23 கிமீ, மேட்டூர் 30 கிமீ, மேச்சேரி 33 கிமீ, ஒமலூர் 33 கிமீ
மூலவர்: அருள்ஞான முருகன்
தல மகிமை:
சேலம் மாவட்டம் சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 42 கிமீ தொலைவில் உள்ள எடப்பாடி நகரின் மையத்தில் ஞானம் அருளும் எடப்பாடி அருள்ஞான முருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் எடப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து 500 மீ தொலைவு அல்லது சங்ககிரி பேருந்து நிலையத்திலிருந்து 16 கிமீ தொலைவு அல்லது தாரமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து 23 கிமீ தொலைவு அல்லது மேட்டூர் 30 கிமீ தொலைவு அல்லது மேச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து 33 கிமீ தொலைவு அல்லது ஒமலூர் பேருந்து நிலையத்திலிருந்து 33 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சேலம் மாவட்டம் எடப்பாடி அருள்ஞான முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் வீற்றிருக்கும் அருள்ஞான முருகன் அருளாட்சி செய்கின்றார். 2023-ம் ஆண்டு முதல் புதியதாக நிர்மாணிக்கப்பட்ட முத்துரதம் திரு உலா வருவது இக்கோவிலின் சிறப்பம்சம்
எடப்பாடி அருள்ஞான முருகன் கோவிலில் வருடந்தோறும் தைப்பூசம் முக்கிய திருவிழாவாக சிறப்பு பூஜைகளுடன் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. 2023-ம் ஆண்டு முத்துரதத்தில் அருள்ஞான முருகன் வலம் வருவதை ஏராளமான பக்தர்கள் தரிசித்து பலன் பெற்று செல்கின்றனர். மேலும் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் விமரிசையாக நடைபெறுகின்றன. சஷ்டி, கார்த்திகை நன்னாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
எடப்பாடி வாழ் முருக பக்தர்கள் மற்றும் கருணை மிகுந்த புரவலர்களின் பேருதவியுடன் நகரின் மையப் பகுதியில் ஞானமே வடிவான அருள்ஞான முருகன் கோவில் கட்டப்பட்டது.
தல அமைப்பு:
அழகிய அமைப்புடன் கூடிய எடப்பாடி அருள்ஞான முருகன் கோவில் கருவறையில் மூலவராக அருள்ஞான முருகன் கையில் வேலுடன் வீற்றிருந்து தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மூலவர் அருள்ஞான முருகன் ஞானமே வடிவாக, கருணை மிகுந்த பார்வையுடன் இடது கையை இடுப்பில் ஒயிலாக வைத்துக்கொண்டும், வலது கையில் அபய முத்திரை அளித்தும் திருக்காட்சி அருள்கின்றார். மூலவர் அருள்ஞான முருகன் ராஜ அலங்காரத்தில் அருள்பாலிப்பது கண்கொள்ளா காட்சியாகும். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன, மேலும் விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கார்த்திகை
பிரார்த்தனை:
ஞானம் மேம்பட, பிணிகள் நீங்க, கல்வி சிறக்க, தொழில் விருத்தியடைய, விவசாயம் செழிக்க, குடும்ப ஒற்றுமை ஓங்க, உடல் ஆரோக்கியம் வேண்டி, நல்லன நடைபெற, மன நிம்மதி கிடைக்க, நேர்மறை எண்ணங்கள் உண்டாக, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
பிணிகள் யாவையும் நீக்கி அருளும் சேலம் எடப்பாடி அருள்ஞான முருகன் அருளை பெற்றிட வேண்டி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1332 ஞானம் அருளும் சேலம் எடப்பாடி அருள்ஞான முருகன்
படம் 2 - 1332 பிணிகள் யாவையும் நீக்கி அருளும் சேலம் எடப்பாடி அருள்ஞான முருகன்
Comments
Post a Comment