கோவில் 1331 - சேலம் சிலுவம்பாளையம் முருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1331
வல்வினைகளை தீர்த்தருளும் சேலம் சிலுவம்பாளையம் முருகன் கோவில்
29.01.2025 புதன்
அருள்மிகு முருகன் திருக்கோவில்
[பழனியாண்டவர் கோவில்]
சிலுவம்பாளையம் 637107
எடப்பாடி வட்டம்
சேலம் மாவட்டம்
இருப்பிடம்: சேலம் புதிய பேருந்து நிலையம் 56 கிமீ, எடப்பாடி 13 கிமீ, சங்ககிரி 28 கிமீ, மேட்டூர் 31 கிமீ, தாரமங்கலம் 36 கிமீ, மேச்சேரி 43 கிமீ, ஒமலூர் 46 கிமீ
மூலவர்: முருகன்
தல மகிமை:
சேலம் மாவட்டம் சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 56 கிமீ தொலைவில் உள்ள சிலுவம்பாளையம் கிராமம் காவிரிக்கரையருகில் வல்வினைகளை தீர்த்தருளும் சிலுவம்பாளையம் முருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் எடப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து 13 கிமீ தொலைவு அல்லது சங்ககிரி பேருந்து நிலையத்திலிருந்து 28 கிமீ தொலைவு அல்லது மேட்டூர் 31 கிமீ தொலைவு அல்லது தாரமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து 36 கிமீ தொலைவு அல்லது மேச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து 43 கிமீ தொலைவு அல்லது ஒமலூர் பேருந்து நிலையத்திலிருந்து 46 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டத்தில் உள்ள சிலுவம்பாளையம் முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் வீற்றிருக்கும் முருகன் மிகுந்த ஆற்றல் வாய்ந்தவராக அருள்பாலிக்கின்றார்.
சேலம் சிலுவம்பாளையம் முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மிகுந்த கோலாகலத்துடன் கொண்டாடப்படுகிறது. தைப்பூசத் திருநாளன்று பலவகை அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாரதனைகள் நடைபெறும், தங்களது நேர்த்திக்கடனை நிறைவற்ற, பக்தர்கள் பால்குடம், பலவித காவடிகள் ஏந்தி வந்து சிலுவம்பாளையம் முருகனை வணங்கி, நற்பலன்கள் பெற்று செல்கின்றனர். மேலும் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட அனைத்து திருவிழாக்களும் விமரிசையாக நடைபெறுகின்றன. சஷ்டி, கார்த்திகை திருநாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
எடப்பாடி அருகே முன்னாள் தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிசாமி முன்னோர்கள் மற்றும் அவரது முன்னோர்கள், முருக பக்தர்கள் பேருதவியுடன் பழனி பாதயாத்திரை செல்பவர்களுக்காகவும், பழனி தண்டாயுதபாணி கோவில் போன்றே இங்கு ஒரு கோவில் எழுப்ப வேண்டும் என முடிவு செய்து, இவ்வூரில் முருகன் எழுப்பப்ப்ட்டது.
தல அமைப்பு:
காவிரிக் கரையில் அமைந்துள்ள இந்த அழகிய கோவில் கருவறையில் முருகன் பழனி முருகப்பெருமானை போலவே சாநித்தியம் மிகுந்தவராக கையில் வேல் ஏந்தி நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் இக்கோவிலில் விநாயகர் உட்பட தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கார்த்திகை
பிரார்த்தனை:
வினைகள் தீர, மன நிம்மதி பெற, ஆயுள் கூட, பிணிகள் அகல, தொழில் விருத்தியடைய, விருப்பங்கள் நிறைவேற, குழந்தை வரம் வேண்டி, நோய்கள் போக்க, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
மன நிம்மதி தந்தருளும் சேலம் சிலுவம்பாளையம் முருகன் திருவடிகளை சென்னி பணிந்து வேண்டுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1331 வல்வினைகளை தீர்த்தருளும் சேலம் சிலுவம்பாளையம் முருகன்
படம் 2 - 1331 மன நிம்மதி தந்தருளும் சேலம் சிலுவம்பாளையம் முருகன்
Comments
Post a Comment