கோவில் 1330 - சேலம் தாசநாயக்கன்பட்டி கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1330

சகல ஐஸ்வர்யங்களையும் அருளும் சேலம் தாசநாயக்கன்பட்டி கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவில்

28.01.2025 செவ்வாய்


அருள்மிகு கல்யாண சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

தாசநாயக்கன்பட்டி 636201

சேலம் வட்டம்

சேலம் மாவட்டம்

இருப்பிடம்: சேலம் புதிய பேருந்து நிலையம் 11 கிமீ, சேலம் பழைய பேருந்து நிலையம் 6 கிமீ, சேலம் ரயில் நிலைய சந்திப்பு 10 கிமீ, அயோத்தியாபட்டணம் 14 கிமீ, செவ்வாய்பேட்டை 9 கிமீ

மூலவர்: கல்யாண சுப்பிரமணிய சுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை


தல மகிமை:

சேலம் மாநகரம் சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 11 கிமீ தொலைவில் உள்ள தாசநாயக்கன்பட்டி பகுதியில் சகல ஐஸ்வர்யங்களையும் அருளும் சேலம் தாசநாயக்கன்பட்டி கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. மேலும் சேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 6 கிமீ தொலைவு அல்லது சேலம் ரயில் நிலைய சந்திப்பிலிருந்து 10 கிமீ தொலைவு அல்லது அயோத்தியாபட்டணம் பேருந்து நிலையத்திலிருந்து 14 கிமீ தொலைவு அல்லது செவ்வாய்பேட்டை 9 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் தாசநாயக்கன்பட்டி கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் வள்ளி, தெய்வானையுடன் கல்யாண சுப்பிரமணிய சுவாமி அருளாட்சி செய்கின்றார். இத்திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் 24.05.2023-ல் நடைபெற்றது.


சேலம் தாசநாயக்கன்பட்டி கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் கந்த சஷ்டி திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம் உள்ளிட்ட முருகப்பெருமான் திருவிழாக்கள் கோலமாக நடைபெறுகின்றது. சஷ்டி, கார்த்திகை நன்னாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.

தல வரலாறு:

சேலம் நகரம் வாழ் புரவலர்கள் மற்றும் முருக பக்தர்கள் பேருதவியுடன் சேலம் நகரம் தாசநாயக்கன்பட்டியில் கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவில் கட்டப்பட்டது. இத்திருக்கோவில் புனரமைக்கப்பட்டு 24.05.2023-ல் மகா கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.


தல அமைப்பு:

அழகிய கோபுர அமைப்புடன் கூடிய இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் கல்யாண சுப்பிரமணிய சுவாமி கல்யாண திருக்கோலத்தில் வள்ளி, தெய்வானையுடன் நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் செல்வ விநாயகர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, நந்திகேஸ்வரர், சண்டிகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, மகா லட்சுமி, சரஸ்வதி, நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்து பரிவார தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கார்த்திகை


பிரார்த்தனை:

சகல ஐஸ்வர்யங்கள் பெற்றிட, வேண்டிய வரங்கள் பெற்றிட, வினைகள் நீங்க, பிணிகள் போக்க, திருமணத்தடை அகல, குழந்தைப்பேறு கிட்ட, நோய்கள் குணமாக, தோஷங்கள் விலகிட


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


வேண்டிய வரங்களை அள்ளி வழங்கும் சேலம் தாசநாயக்கன்பட்டி கல்யாண சுப்பிரமணிய சுவாமியை போற்றி வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1330 சகல ஐஸ்வர்யங்களையும் அருளும் சேலம் தாசநாயக்கன்பட்டி கல்யாண சுப்பிரமணிய சுவாமி


படம் 2 - 1330 வேண்டிய வரங்களை அள்ளி வழங்கும் சேலம் தாசநாயக்கன்பட்டி கல்யாண சுப்பிரமணிய சுவாமி



Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 1201 - கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்