கோவில் 1241 - இலங்கை திருகோணமலை பாலையூற்று பாலமுருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1241
பிணிகள் யாவும் நீங்க அருளும் இலங்கை திருகோணமலை பாலையூற்று பாலமுருகன் கோவில்
31.10.2024 வியாழன்
அருள்மிகு பாலமுருகன் கோவில்
பாலையூற்று [Palaiyoothu]
திருகோணமலை [Trincomalee]
திருகோணமலை மாவட்டம் [Trincomalee]
கிழக்கு மாகாணம் [Eastern Province]
இலங்கை
இருப்பிடம்: திருகோணமலை பே. நி/ரயில் நிலையம் 5/4 கிமீ, திருகோணமலை கோணேஸ்வரர் கோவில் 7 கிமீ, திருகோணமலை வில்லூன்றி கந்தசுவாமி கோவில் 5 கிமீ, வெருகல் சித்திரவேலாயுத சுவாமி கோவில் 57 கிமீ, மட்டக்களப்பு 134 கிமீ, முல்லைத்தீவு 119 கிமீ, அனுராதபுரம் 107 கிமீ
மூலவர்: பாலமுருகன் & வேல்
தேவியர்: வள்ளி, தெய்வானை
தோற்றம்: 1968
தல மகிமை:
இலங்கை கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டம் தலைநகரம் திருகோணமலை மாநகர பேருந்து நிலையம்/ரயில் நிலையத்திலிருந்து 5/4 கிமீ தொலைவில் இருக்கும் பாலையூற்று பகுதியில் பிணிகள் யாவும் நீங்க அருளும் பாலையூற்று பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. நேர்மறை எண்ணங்களை உண்டாக்கும் திருகோணமலை கோணேஸ்வரர் கோவிலிலிருந்து 7 கிமீ தொலைவு அல்லது புகழ் பெற்ற திருகோணமலை வில்லூன்றி கந்தசுவாமி கோவிலிலிருந்து 5 கிமீ தொலைவு அல்லது வெருகல் சித்திரவேலாயுத சுவாமி கோவிலிலிருந்து 57 கிமீ தொலைவு அல்லது மட்டக்களப்பு மாநகரிலிருந்து 134 கிமீ தொலைவு அல்லது முல்லைத்தீவிலிருந்து 119 கிமீ தொலைவு அல்லது அனுராதபுரம் மாநகரிலிருந்து 107 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திருகோணமலை பாலையூற்று பாலமுருகன் கோவிலை அடையலாம். திருகோணமலை பாலையூற்று பாலமுருகன் போற்றி காவடி சிந்து பாடல்கள், திருவூஞ்சல் பாடல் உள்ளிட்ட பதிகங்கள் இயற்றப்பட்டுள்ளன.
திருகோணமலை பாலையூற்று பாலமுருகன் கோவிலில் ஆதியில் 1968-ல் கதிர்காமத்திலிருந்து ஒரு பாதயாத்திரை பக்தர் கொண்டு வந்த வேலை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். பின்னர் பாலமுருகன் சுவாமியை மூலவராக பிரதிஷ்டை செய்து, பக்தர்கள் வழிபட ஆரம்பித்தனர். இக்கோவிலுக்கும் பாலையூற்று பாலமுருகன் கோவில் என்ற பெயர் வந்தது. இக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் 11.09.2016-ல் சிறப்பாக நடைபெற்றது. இக்கோவில் மஹோற்சவத்திற்காக சித்திரத் தேர் செய்யப்பட்டு 18.01.2018-ல் வெள்ளோட்டம் நடைபெற்றது. 25.02.2018-ல் சத்ரு சம்ஹார ஞானவேல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. வைகாசி தீர்த்தோற்சவத்திற்கு முந்தைய நாள் நடைபெறும் இக்கோவில் ரதோற்சவம் இப்பகுதியில் மிகவும் சிறப்பு பெற்ற நிக்ழ்வாகும். மேலும் வள்ளி, தெய்வானை, துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி சிலைகளை பிரதிஷ்டை செய்து 23.10.2024-ல் பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் வைகாசி விசாகத்தையொட்டி (பௌர்ணமி) 11 நாட்கள் வருடாந்திர மஹோற்சவ பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. முதல் நாள் கொடியேற்றம் நடைபெற்று, தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்று சுவாமி தேவியருடன் இரு வேளையும் உள்வீதி உலா வருவார். 6-ம் நாள் கற்பூரச்சட்டி திருவிழா, 7-ம் நாள் மாம்பழ திருவிழா, 10-ம் நாள் தேரோட்டத் திருவிழா மற்றும் 11-ம் நாள் சுவாமிக்கு சமுத்திர தீர்த்தோற்சவத் திருவிழா நடைபெறுகின்றன. அன்று மாலை கொடியிறக்கம் விசேஷ பூஜைகளுடன் நடைபெறுகின்றன. மேலும் 12-ம் நாள் மாலை பூங்காவனம் திருவிழா மற்றும் 13-ம் நாள் பைரவர் பூஜையுடன் வருடாந்திர திருவிழா முடிவடைகின்றது. கந்த சஷ்டி திருவிழா 7 நாட்கள் விமரிசையாக நடைபெறுகிறது. தினமும் காலை 8 மணி மற்றும் மாலை 3.3. மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு தீபாரதனைகள் நடைபெறும். 6-ம் நாள் மாலை சூரசம்ஹார நிகழ்வு சிறப்பாக நடைபெறும். 7-ம் நாள் காலை பாறணை பூஜை (பௌர்ணமி), தொடர்ந்து சங்காபிஷேகம் நடைபெறும். மாலை பாலமுருகன் வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்று திருவூஞ்சல் விழா நடைபெறும்.
மேலும் முருகப்பெருமானின் தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை உள்ளிட்ட திருவிழாக்களும் மற்றும் மகா சிவராத்திரி, ஆடிப்பெருக்கு, நவராத்திரி, வரலட்சுமி விரதம், விநாயகர் சதுர்த்தி, பொங்கல், தீபாவளி, தமிழ், ஆங்கில புது வருட பிறப்பு, பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி திருநாட்களிலும் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கதிர்காமம் கந்தன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று வந்த முருக பக்தரால் கொண்டு வரப்பட்ட வேலை 1968-ல் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பக்தர்கள் வழிபட்டு வந்தனர். பின்னர் பரிபாலன சபையின் ஆலோசனையின் படி கோ19வில் கட்டப்பட்டு 1993-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மீண்டும் 2005-லும், அடுத்து 11.09.2016-லும் மகா கும்பாபிஷேகங்கள் சிறப்பாக நடைபெற்றன. 18.01.2018-ல் சித்திரத் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. 25.02.2018-ல் சத்ரு சம்ஹார ஞானவேல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 23.10.2024-ல் வள்ளி, தெய்வானை, துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி சிலைகளை பிரதிஷ்டை செய்யப்பட்டன.
தல அமைப்பு:
அழகான இக்கோவிலின் ராஜகோபுரம் வழியே நுழைந்த உடன் கொடிமரம், வேல், மயில், பலிபீடம் உள்ளன. கருவறையில் பாலமுருகன் மூலவராக கையில் வேலுடன் மயில் பின் நிற்க வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் ஞானவேல், வள்ளி, தேய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி (பாலமுருகன்) வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். மேலும் விநாயகர், சிவபெருமான், துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி, தண்டாயுதபாணி, ஆறுமுகப்பெருமான், பைரவர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்து தேய்வங்களும் இக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
வைகாசி விசாகம் மஹோற்சவம், கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, மகா சிவராத்திரி, ஆடிப்பெருக்கு, நவராத்திரி, வரலட்சுமி விரதம், விநாயகர் சதுர்த்தி, பொங்கல், தீபாவளி, புது வருட பிறப்பு, பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
பிணிகள் நீங்க, நினைத்த காரியங்கள் வெற்றி அடைய, தீய சக்திகள் அழிய, லட்சுமி கடாட்சம் கிட்ட, மும்மலங்கள் அகல, எதிரிகள் ஒழிய, ஞானம் சிறக்க, குடும்ப வாழ்வு மேம்பட, நோய்கள் குணமாக
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், சத்ரு சம்ஹார யாகம், அன்னதானம்
நினைத்த காரியங்கள் வெற்றி அடைய அருளும் திருகோணமலை பாலையூற்று பாலமுருகனை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1241 பிணிகள் யாவும் நீங்க அருளும் இலங்கை திருகோணமலை பாலையூற்று பாலமுருகன்
படம் 2 - 1241 நினைத்த காரியங்கள் வெற்றி அடைய அருளும் திருகோணமலை பாலையூற்று பாலமுருகன்
Comments
Post a Comment