கோவில் 1237 - இலங்கை யாழ்ப்பாணம் மீசாலை கரும்பி மாவடி கந்தசுவாமி கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1237

ஐஸ்வர்யம் பெருக அருளும் இலங்கை யாழ்ப்பாணம் மீசாலை கரும்பி மாவடி கந்தசுவாமி கோவில்

27.10.2024 ஞாயிறு


அருள்மிகு கரும்பி மாவடி கந்தசுவாமி கோவில்

மீசாலை [Meesalai]

யாழ்ப்பாணம் மாவட்டம் [Jaffina]

வட மாகாணம் [Northern Province]

இலங்கை

இருப்பிடம்: யாழ்ப்பாணம் 21 கிமீ, மீசாலை 1 மீ, சாவகச்சேரி 7 கிமீ, சங்காத்தனை 3 கிமீ, கொடிகாமம் 6 கிமீ, கச்சாய் 7 கிமீ, நல்லூர் கந்தசுவாமி கோவில் 20 கிமீ

மூலவர்: மாவடி கந்தசுவாமி]

தேவியர்: வள்ளி, தெய்வானை


தல மகிமை:

இலங்கை வட மாகாணம் யாழ்ப்பாணம் மாவட்டம் தலைநகரம் யாழ்ப்பாணம் மாநகரத்திலிருந்து யாழ்ப்பாணம்-கண்டி சாலையில் 21 கிமீ தொலைவில் இருக்கும் மீசாலை நகரின் அருகில் ஐஸ்வர்யம் பெருக அருளும் கரும்பி மாவடி கந்தசுவாமி கோவில் அமைந்துள்ளது. மீசாலை பேருந்து நிலையத்திலிருந்து 1 கிமீ தொலைவு அல்லது சாவகச்சேரி நகரிலிருந்து 6 கிமீ தொலைவு அல்லது சங்காத்தனை கிராமத்திலிருந்து 3 கிமீ தொலைவு அல்லது கொடிகாமம் நகரிலிருந்து 6 கிமீ தொலைவு அல்லது கச்சாய் கிராமத்திலிருந்து 7 கிமீ தொலைவு அல்லது சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலிலிருந்து 20 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள மீசாலை கரும்பி மாவடி கந்தசுவாமி கோவிலை அடையலாம். இக்கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத கந்தசுவாமி மூலவர் அருள்புரிகின்றார்.


இக்கோவிலில் ஆலய வருடாந்திர மஹோற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது. கந்த சஷ்டி திருவிழா யாழ் பகுதி முருகன் கோவில்களை போலவே தினசரி பூஜைகள் மற்றும் சூரசம்ஹாரம் என விமரிசையாகக் கொண்டாடபடுகிறது. முருகப்பெருமானின் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை திருவிழாக்களும் விசேஷ பூஜைகளுடன் நடக்கின்றன.


தல வரலாறு:

மீசாலை வாழ் தமிழ் ஆன்றோர்களால் மாவடி கந்தசுவாமி கோவில் நிறுவப்பட்டது. ஆலய பரிபாலன சபையினரால் கோவில் நிர்வகிக்கப்படுகின்றது.

தல அமைப்பு:

மிகவும் பழமையான கோவிலில் கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மூலஸ்தானத்தில் கந்தசுவாமி மூலவராக வள்ளி, தெய்வானையுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். மேலும் விநாயகர், பைரவர், நவக்கிரகங்கள் மற்றும் பரிவார தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

ஐஸ்வர்யம் பெருக, நினைத்தது நடைபெற, குடும்பம் சிறக்க, பிணிகள் நீங்க, நல்லன நடக்க, தோஷங்கள் விலக


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


நினைத்தது நடைபெற அருளும் இலங்கை யாழ்ப்பாணம் மீசாலை கரும்பி மாவடி கந்தசுவாமி திருவடிகள் பணிந்து பிரார்த்திப்போம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1237 ஐஸ்வர்யம் பெருக அருளும் இலங்கை யாழ்ப்பாணம் மீசாலை கரும்பி மாவடி கந்தசுவாமி கோவில்


படம் 2 - 1237 நினைத்தது நடைபெற அருளும் இலங்கை யாழ்ப்பாணம் மீசாலை கரும்பி மாவடி கந்தசுவாமி கோவில்

Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்