கோவில் 1210 - இலங்கை வவுனியா தாண்டிக்குளம் கந்தசுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1210
எண்ணியதை ஈடேற்றும் இலங்கை வவுனியா தாண்டிக்குளம் கந்தசுவாமி கோவில்
30.9.2024 திங்கள்
அருள்மிகு கந்தசுவாமி கோவில்
தாண்டிக்குளம் [Thandikulam]
வவுனியா மாவட்டம் [Vavuniya]
வடக்கு மாகாணம் [Northern Province]
இலங்கை
இருப்பிடம்: வவுனியா 4 கிமீ, முல்லைத்தீவு 72 கிமீ, கிளிநொச்சி 76 கிமீ, மன்னார் 79 கிமீ, யாழ்ப்பாணம் 135 கிமீ
மூலவர்: கந்தசுவாமி
தேவியர்: வள்ளி, தெய்வானை
தல மகிமை:
இலங்கை வடக்கு மாகாணம் வவுனியா மாவட்டம் தலைநகரம் வவுனியா மாநகரிலிருந்து 4 கிமீ தொலைவில் இருக்கும் தாண்டிக்குளம் பகுதியில் எண்ணியதை ஈடேற்றும் தாண்டிக்குளம் கந்தசுவாமி கோவில் அமைந்துள்ளது. முல்லைத்தீவு நகரிலிருந்து 72 கிமீ தொலைவு அல்லது கிளிநொச்சி நகரிலிருந்து 76 கிமீ தொலைவு அல்லது மன்னார் நகரிலிருந்து 79 கிமீ தொலைவு அல்லது யாழ்ப்பாணம் மாநகரிலிருந்து 135 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் வவுனியா மாவட்டம் தாண்டிக்குளம் கந்தசுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவராக கந்தசுவாமி தேவியருடன் வீற்றிருந்து அருளாட்சி செய்கின்றார். இவ்வாலயத்தின் கும்பாபிஷேகம் ஆவணி 2001-ல் விமரிசையாக நடைபெற்றது.
இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வருடாந்திர மஹோற்சவம் 10 நாட்கள் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. கொடியேற்றம், தினசரி பூஜைகள், சப்பரத் திருவிழா, தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறுகின்றன. ஆவணி மாத கிருத்திகை திருநாளன்று தீர்த்தோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். கந்த சஷ்டி பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சூரசம்ஹாரம் நிகழ்வு சிறப்பாக நடைபெறும். தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, வைகாசி விசாகம் போன்ற திருவிழாக்களும் சிறப்பாக ந்டைபெறுகின்றன. மேலும் கேதாரகௌரி விரதம் திருவிழா சிறப்பாக நடைபெறும்.
தல வரலாறு:
வவுனியா தாண்டிக்குளம் கந்தசுவாமி கோவில் மிகவும் பழமையான கோவிலாக கருதப்படுகிறது. இவ்வாலயத்தின் கும்பாபிஷேகம் ஆவணி மாதம் 2001-ல் வெகு சிறப்பாக நடைபெற்றது.
தல அமைப்பு:
அழகிய அமைப்புடன் கூடிய இக்கோவில் மூலஸ்தானத்தில் கந்தசுவாமி மூலவராக வீற்றிருந்து வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. இக்கோவிலில் விநாயகர், சிவபெருமான், பார்வதி, பைரவர் உட்பட பல பரிவாரத் தெய்வங்கள் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்.
திருவிழா:
ஆவணி மஹோற்சவம், கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, வைகாசி விசாகம், மகா சிவராத்திரி, நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, கேதாரகௌரி விரதம், பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, கார்த்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
எண்ணியது ஈடேற, நல்லன நடைபெற, சிக்கல்கள் யாவும் தீர, திருமணம், குழந்தை வேண்டி, பிணிகள் அகல, மன நிம்மதி கிடைக்க, கல்வி மேம்பட
நேர்த்திக்கடன்:
பால்குடம், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
நல்லன நடைபெற அருளும் இலங்கை வவுனியா தாண்டிக்குளம் கந்தசுவாமி திருபாதங்கள் பணிந்து வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1210 எண்ணியதை ஈடேற்றும் இலங்கை வவுனியா தாண்டிக்குளம் கந்தசுவாமி கோவில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம்
படம் 2 - 1210 நல்லன நடைபெற அருளும் இலங்கை வவுனியா தாண்டிக்குளம் கந்தசுவாமி கோவில்
Comments
Post a Comment