கோவில் 1207 - இலங்கை கண்டி புசல்லாவா கதிரேசன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1207
எண்ணியதை ஈடேற்றும் இலங்கை கண்டி புசல்லாவா கதிரேசன் கோவில்
27.9.2024 வெள்ளி
அருள்மிகு கதிரேசன் கோவில்
புசல்லாவா [Pussellawa]
கண்டி மாவட்டம் [Kandy]
மத்திய மாகாணம் [Central Province]
இலங்கை
இருப்பிடம்: கண்டி 35 கிமீ, கம்பளை 16, நுவரெலியா 41 கிமீ, கொழும்பு 139 கிமீ, மாத்தளை 59 கிமீ
மூலவர்: கதிரேசன் (வேல்)
உற்சவர்: கதிரேசன் வள்ளி, தெய்வானை
தோற்றம்:1885
தல மகிமை:
இலங்கை மத்திய மாகாணம் கண்டி மாவட்டம் தலைநகரம் கண்டி மாநகரிலிருந்து 35 கிமீ தொலைவில் இருக்கும் புசல்லாவா நகரில் எண்ணியதை ஈடேற்றும் புசல்லாவா கதிரேசன் கோவில் அமைந்துள்ளது. கம்பளை நகரிலிருந்து 16 கிமீ தொலைவு அல்லது நுவரெலியா நகரிலிருந்து 41 கிமீ தொலைவு அல்லது இலங்கை தலைநகரம் கொழும்பு மாநகரிலிருந்து 139 கிமீ தொலைவு அல்லது மாத்தளை நகரிலிருந்து 59 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கண்டி மாவட்டம் புசல்லாவா கதிரேசன் கோவிலை அடையலாம். இக்கோவிலில் வேல் வடிவில் கதிரேசன் அருளாட்சி செய்கின்றார். சுமார் 160 ஆண்டுகள் பழமையான இக்கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த 2016-ல் நடைபெற்றது.
இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வருடாந்திர மஹோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. கந்த சஷ்டி திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. தினசரி சிறப்பு பூஜைகள், 6-ம் நாள் சூரசம்ஹாரம், 7-ம் நாள் திருக்கல்யாணம் சிறப்பாக நடக்கின்றன. தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, வைகாசி விசாகம் உள்ளிட்ட திருவிழாக்களும் கொண்டாடப்படுகின்றன, கார்த்திகை, சஷ்டி நன்னாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கண்டி மாவட்டம் புசல்லாவா கதிரேசன் கோவில் 1885-ம் ஆண்டு கட்டப்பட்டது. இக்கோவில் புனரமைக்கப்பட்டு மார்ச் 2016-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இங்குள்ள கருவறையில் உள்ள புனிதமான 'வேல்' வடிவில் முருகப்பெருமான் திருக்காட்சியருள்கின்றார்.
தல அமைப்பு:
இக்கோவில் ராஜகோபுரத்தில் முருகர் சிலையாக வீற்றிருந்து அருள்கின்றார். கருவறையில் வேல் (கதிரேசன்) மூலவராக வீற்றிருந்து முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. தனி சந்நிதியில் கதிரேசன் வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், உற்சவ மூர்த்திகள், பைரவர் உள்ளிட்ட பல பரிவார தெய்வங்கள் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்.
திருவிழா:
கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, வைகாசி விசாகம், கார்த்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
எண்ணியது ஈடேற, வல்வினைகள் அகல, பாவங்கள் விலக, கல்வி சிறக்க, நோய்கள் குணமாக, நல்லன நடைபெற, பிரச்சினைகள் தீர, குடும்பம் வாழ்வு சிறக்க
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
வல்வினைகளை அகற்றும் இலங்கை கண்டி புசல்லாவா கதிரேசனை போற்றி பிரார்த்திப்போம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1207 எண்ணியதை ஈடேற்றும் இலங்கை கண்டி புசல்லாவா கதிரேசன் கோவில்
படம் 2 - 1207 வல்வினைகளை அகற்றும் இலங்கை கண்டி புசல்லாவா கதிரேசன் கோவில்
Comments
Post a Comment