கோவில் 1206 - இலங்கை நுவரெலியா ராகலை டெல்மார் மத்திய பிரிவு கதிர்வேலாயுத சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1206
வேண்டிய வரம் தரும் இலங்கை நுவரெலியா ராகலை டெல்மார் மத்திய பிரிவு கதிர்வேலாயுத சுவாமி கோவில்
26.9.2024 வியாழன்
அருள்மிகு கதிர்வேலாயுத சுவாமி கோவில்
Nuwara Eliya-Uda Pussellawa Road
டெல்மார் மத்திய பிரிவு [Delmar]
ராகலை [Ragala]
[இராகலை]
நுவரெலியா மாவட்டம் [Nuwara Eliya]
மத்திய மாகாணம் [Central Province]
இலங்கை
இருப்பிடம்: ராகலை 8 கிமீ, நுவரெலியா 28 கிமீ, கொழும்பு 225 கிமீ, கண்டி 83 கிமீ, மாத்தளை 83 கிமீ, பதுளை 65 கிமீ
மூலவர்: கதிர்வேலாயுத சுவாமி
தேவியர்: வள்ளி, தெய்வானை
தல மகிமை:
இலங்கை மத்திய மாகாணம் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ராகலை (இராகலை) பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவில் இருக்கும் டெல்மார் மத்திய பிரிவு [Delmar] பகுதியில் வேண்டிய வரம் தரும் ராகலை டெல்மார் மத்திய பிரிவு கதிர்வேலாயுத சுவாமி கோவில் அமைந்துள்ளது. நுவரெலியா மாவட்டம் தலைநகரம் நுவரெலியா நகரிலிருந்து 28 கிமீ தொலைவு அல்லது இலங்கை தலைநகரம் கொழும்பு மாநகரிலிருந்து 225 கிமீ தொலைவு அல்லது கண்டி மாநகரிலிருந்து 83 கிமீ தொலைவு அல்லது மாத்தளை நகரிலிருந்து 83 கிமீ தொலைவு அல்லது பதுளை நகரிலிருந்து 65 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் நுவரெலியா மாவட்டம் ராகலை டெல்மார் மத்திய பிரிவு கதிர்வேலாயுத சுவாமி கோவிலை அடையலாம். இக்கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத கதிர்வேலாயுத சுவாமி மூலவராக அருள்புரிகின்றார். இக்கோவிலில் கடந்த 04.09.2015-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ராகலை டெல்மார் மத்திய பிரிவு கதிர்வேலாயுத சுவாமி கோவிலில் ஆடி மஹோற்சவம் வருடாந்திர திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. கொடியேற்றம், தினசரி சிறப்பு பூஜைகள், சப்பர திருவிழா, பூக்குழி, பறவைக் காவடி, மகோற்சவம் தினமன்று முத்தேர் பவனி, தீர்த்தோற்சவம், அன்னதானம் என திருவிழா விமரிசையாக நடக்கின்றன. மேலும் கந்த சஷ்டி பெருவிழா (7 நாட்கள்), தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, வைகாசி விசாகம், மகா சிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, என அனைத்து திருவிழாக்களும் விமரிசையாக நடைபெறுகின்றது. பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, கார்த்திகை, சஷ்டி முதலான திருநாட்களில் விசேஷ பூஜைகள் உண்டு. தேய்பிறை அஷ்டமி தினத்தில் பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
மலையக பிரதேசத்தில் ராகலை நகருக்கருகில் இருக்கும் டெல்மார் தோட்டம் மத்திய பிரிவு பகுதியில் உள்ள பழமையான வள்ளி, தெய்வானை சமேத கதிர்வேலாயுத சுவாமி கோவில் 2004-ல் டெல்மார் தோட்டம் தமிழர்கள் பேருதவியுடன் இந்தியாவிலிருந்து சிற்பிகள் வரவழைக்கப்பட்டு, மேலும் பல சுவாமி விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கதிர்வேலாயுத சுவாமி கோவில் புதியதாக கட்டப்பட்டது. அடுத்து 2015-ல்இக்கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 04.09.2015-ல் மகா கும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற்றது.
தல அமைப்பு:
ஆகம விதிமுறைகள் படி கட்டப்பட்ட இக்கோவில் கருவறையில் கதிர்வேலாயுத சுவாமி கையில் வேலுடன் வள்ளி, தெய்வானை சமேதராக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன். இக்கோவிலில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சிவபெருமான், அம்பாள், பைரவர், நவக்கிரகங்கள் மற்றும் மேலும் பரிவார தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, வைகாசி விசாகம், மகா சிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, தேய்பிறை அஷ்டமி, கார்த்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
வேண்டியது கிடைக்க, சங்கடங்கள் தீர, பிணிகள் அகல, வினைகள் போக்க, திருமணம், குழந்தை வரம் வேண்டி, நல்லன அருள, உடல் ஆரோக்கியம் பெற்றிட, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, பறவை காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
சங்கடங்கள் யாவும் தீர்க்கும் இலங்கை நுவரெலியா ராகலை டெல்மார் மத்திய பிரிவு கதிர்வேலாயுத சுவாமியை பணிந்து தொழுதிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1206 வேண்டிய வரம் தரும் இலங்கை நுவரெலியா ராகலை டெல்மார் மத்திய பிரிவு கதிர்வேலாயுத சுவாமி
Comments
Post a Comment