கோவில் 1205 - இலங்கை நுவரெலியா ராகலை சென்லியனாட்ஸ் கதிர்வேலாயுத சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1205
இகபர சுகமருளும் இலங்கை நுவரெலியா ராகலை சென்லியனாட்ஸ் கதிர்வேலாயுத சுவாமி கோவில்
25.9.2024 புதன்
அருள்மிகு கதிர்வேலாயுத சுவாமி கோவில்
சென்லியனாட்ஸ் [Anuradhapura]
ராகலை [Ragala]
[இராகலை]
நுவரெலியா மாவட்டம் [Nuwara Eliya]
மத்திய மாகாணம் [Central Province]
இலங்கை
இருப்பிடம்: ராகலை 1 கிமீ, நுவரெலியா 20 கிமீ, கொழும்பு 220 கிமீ, கண்டி 77 கிமீ, மாத்தளை 99 கிமீ, பதுளை 77 கிமீ
மூலவர்: கதிர்வேலாயுத சுவாமி & வேல்
உற்சவர்: கதிர்வேலாயுத சுவாமி, வள்ளி, தெய்வானை
தல மகிமை:
இலங்கை மத்திய மாகாணம் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ராகலை (இராகலை) பேருந்து நிலையத்திலிருந்து 1 கிமீ அருகாமையில் இருக்கும் சென்லியனாட்ஸ் பகுதியில் இகபர சுகமருளும் ராகலை சென்லியனாட்ஸ் கதிர்வேலாயுத சுவாமி கோவில் அமைந்துள்ளது. நுவரெலியா மாவட்டம் தலைநகரம் நுவரெலியா நகரிலிருந்து 20 கிமீ தொலைவு அல்லது இலங்கை தலைநகரம் கொழும்பு மாநகரிலிருந்து 220 கிமீ தொலைவு அல்லது கண்டி மாநகரிலிருந்து 77 கிமீ தொலைவு அல்லது மாத்தளை நகரிலிருந்து 99 கிமீ தொலைவு அல்லது பதுளை நகரிலிருந்து 77 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் நுவரெலியா மாவட்டம் ராகலை சென்லியனாட்ஸ் கதிர்வேலாயுத சுவாமி கோவிலை அடையலாம். இக்கோவிலில் மூலவராக கதிர்வேலாயுத சுவாமி அருளாட்சி செய்கின்றார். கடந்த 07.02.2020 அன்று இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இலங்கையிலேயே மிக உயரமான முருகன் சிலை நுவரெலியா மாவட்டம் மலையகத்தில் நிறுவப்பட்டுள்ளது. இங்கு முருகப்பெருமான் 60 அடி உயரத்துடன், கையில் 35 அடி வேலுடன் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். திர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டே 60 அடி உயரத்தில் இத் திருவுருவச்சலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்தியாவின் மாமல்லபுரத்திலிருந்து அசோக்குமார் தலைமையிலான சிற்பாச்சாரிகள் வரவழைக்கப்பட்டிருந்தனர். இக்கோவிலில் சயனநிலையிலுள்ள விஷ்னு சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.
ராகலை சென்லியனாட்ஸ் கதிர்வேலாயுத சுவாமி கோவிலில் ஒவ்வொரு வருடமும் கந்த சஷ்டி திருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சூரசம்ஹாரம் இக்கோவில் திருவிழாவில் சிறப்பு நிகழ்வாகும். முருகப்பெருமானின் ஏனைய திருவிழாக்கள், வரலட்சுமி விரதம் உட்பட இதர் பரிவார மூர்த்திகளின் திருவிழாக்களும் விமரிசையாக நடைபெறுகின்றன. இக்கோவில் தெப்பத் தேர் திருவிழா மிகவும் சிறப்பான நிகழ்வாகும்.
தல வரலாறு:
இந்திய தமிழர்கள் வாழும் மலையக மாவட்டமான நுவரெலியாவில் ராகலை பகுதியில் புரவலர்கள் மற்றும் சைவ பெருமக்கள் பேருதவியுடன் இக்கோவில் மகா கும்பாபிஷேகம் 07.02.2020 வெள்ளிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது.
தல அமைப்பு:
இக்கோவிலில் உயரமான முருகபெருமான் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். கருவறையில் கதிர்வேலாயுத சுவாமி மற்றும் வேல் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். எதிரில் மயில், பலிபீடம் உள்ளன, மேலும் விநாயகர், உற்சவர் மூர்த்திகள், சிவபெருமான். அம்பாள், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, விஷ்ணு, லட்சுமி, பைரவர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்து தெயவங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, வைகாசி விசாகம், வரலட்சுமி விரதம், பிரதோஷம், கார்த்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
இகபர சுகம் வேண்டி, கஷ்டங்கள் தீர, மன மகிழ்ச்சி கிடைக்க, வேண்டுவது கிடைக்க, குடும்பம் சிறக்க
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
கஷ்டங்கள் யாவற்றையும் தீர்க்கும் இலங்கை நுவரெலியா ராகலை சென்லியனாட்ஸ் கதிர்வேலாயுத சுவாமி திருவடிகள் பணிந்து வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1205 இகபர சுகமருளும் இலங்கை நுவரெலியா ராகலை சென்லியனாட்ஸ் கதிர்வேலாயுத சுவாமி
படம் 2 - 1205 கஷ்டங்கள் யாவற்றையும் தீர்க்கும் இலங்கை நுவரெலியா ராகலை சென்லியனாட்ஸ் கதிர்வேலாயுத சுவாமி கோவில் 60 அடி உயர முருகன்
Comments
Post a Comment