கோவில் 1148 - இலங்கை முல்லைதீவு புதுக்குடியிருப்பு கந்தசுவாமி கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-1148
வல்வினைகள் அகற்றும் இலங்கை முல்லைதீவு புதுக்குடியிருப்பு கந்தசுவாமி கோவில்
30.7.2024 செவ்வாய்
அருள்மிகு கந்தசுவாமி கோவில்
புதுக்குடியிருப்பு (Puthukkudiyiruppu)
முல்லைதீவு மாவட்டம் (Mullaitivu)
வடக்கு மாகாணம் (Northern Province)
இலங்கை
இருப்பிடம்: முல்லைதீவு 18 கிமீ, முள்ளிவாய்க்கால் 11 கிமீ, யாழ்ப்பாணம் 97 கிமீ
மூலவர்: கந்தசுவாமி & வேல்
உற்சவர்: கந்தசுவாமி, வள்ளி, தெய்வானை
தல மகிமை:
இலங்கை வடக்கு மாகாணம் முல்லைதீவு மாவட்டத்தில் முல்லைதீவு நகரிலிருந்து 18 கிமீ தொலைவில் இருக்கும் புதுக்குடியிருப்பு கிராமத்தில் வல்வினைகள் யாவும் அகற்றும் கந்தசுவாமி கோவில் அமைந்துள்ளது. சரித்திர புகழ் பெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து 11 கிமீ தொலைவு அல்லது யாழ் நகரிலிருந்து (யாழ்ப்பாணம்) 97 கிமீ தூரம் பிரயாணம் செய்தாலும் புதுக்குடியிருப்பு கந்தசுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் கந்தசுவாமி மற்றும் வேல் பெருமானும் (வேல்) பிரதானமாக வழிபடப்படுகின்றனர்.
இத்திருக்கோவிலில் ஆவணி மாதம் வருடாந்திர மஹோற்சவம் 11 நாட்கள் பெரிய திருவிழாவாக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. முதல் நாள் கொடியேற்றம், 5-வது நாள் வரலட்சுமி பூஜை, 6-வது திருவிழா மாம்பழ திருவிழா, 7-ம் நாள் வேட்டைத் திருவிழா, 8-ம் நாள் பெருமான் சப்பர உலா, 9-ம் நாள் தேரோட்ட திருவிழா, 10-வது திருநாள் தீர்த்தோற்சவம், பூங்காவனம், திருக்கல்யாணம், அன்னதானம் தினசரி சிறப்பு பூஜைகள் என்று மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன. கந்த சஷ்டி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சூரசம்ஹாரம் நிகழ்வு இத்திருவிழாவின் சிறப்பம்சமாகும். கந்தசுவாம்யி அனைத்து திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
தல வரலாறு:
மிகவும் பழமையான புதுக்குடியிருப்பு கந்தசுவாமி கோவில் ஆலய பரிபாலன குழுவினரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
தல அமைப்பு:
அழகிய ஆகம அமைப்புடன் கூடிய இக்கோவிலில் கொடிமரம், மயில் மற்றும் பலிபீடம் உள்ளன. கருவறையில் கந்தசுவாமி அழகிய திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். தனி கருவறையில் வேல் ஒன்றும் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபடபட்டு வருகிறது. மேலும் விநாயகர், உற்சவர்கள், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேஸ்வரர், சிவபெருமான், பைரவர், நவக்கிரகங்கள் மற்றும் பரிவார தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
ஆவணி வருடாந்திர மஹோற்சவம் (11 நாட்கள்), கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம், கார்த்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
வல்வினைகள் அகல, வேண்டிய வரங்கள் நிறைவேற, சிக்கல்கள் அனைத்தும் தீர, தொழில், வியாபாரம் வெற்றியடைய, திருமணம், குழந்தை வேண்டி, நல்லன நடைபெற
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
வேண்டிய வரங்களை நிறைவேற்றும் இலங்கை முல்லைதீவு புதுக்குடியிருப்பு கந்தசுவாமியை மனமுருகி பிரார்த்திப்போம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
கோயம்புத்தூர் 25
🙏🙏
Comments
Post a Comment