கோவில் 1146 - இலங்கை புங்குடுதீவு பெருங்காடு கிராஞ்சியம்பதி கந்தசுவாமி கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-1146
அல்லல்கள் அகற்றும் இலங்கை புங்குடுதீவு பெருங்காடு கிராஞ்சியம்பதி கந்தசுவாமி கோவில்
28.7.2024 ஞாயிறு
அருள்மிகு கிராஞ்சியம்பதி கந்தசுவாமி கோவில்
பெருங்காடு (Thallaiyapattu)
புங்குடுதீவு மேற்கு (Pungudutivu East)
புங்குடுதீவு (Pungudutivu)
யாழ்ப்பாணம் மாவட்டம் (Jaffina)
வடக்கு மாகாணம் (Northern Province)
இலங்கை
இருப்பிடம்: யாழ்ப்பாணம் 29 கிமீ, மண்டைத்தீவு 32 கிமீ,
மூலவர்: கந்தசுவாமி
தேவியர்: வள்ளி, தெய்வானை
தோற்றம்: 1853
தல மகிமை:
இலங்கை வடக்கு மாகாணம் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள 7 தீவுகளில் புங்குடுதீவு ஒன்றாகும். யாழ்ப்பாணம் நகரிலிருந்து நெடுஞ்சாலையின் மூலம் 29 கிமீ தொலைவில் உள்ள புங்குடுதீவு மேற்கில் உள்ள பெருங்காடு கிராமத்தில் அல்லல்கள் அகற்றும் கிராஞ்சியம்பதி கந்தசுவாமி கோவில் அமைந்துள்ளது. மண்டைத்தீவிலிருந்து 32 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் புங்குடுதீவு மேற்கு பெருங்காடு கிராஞ்சியம்பதி கந்தசுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவராக கந்தசுவாமி வள்ளி, தெய்வானை சகிதம் அருள்பாலிக்கின்றார்.
இத்திருக்கோவிலில் வைகாசி மஹோற்சவம் பெருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது. கொடியற்றத்துடன் தினசரி சிறப்பு பூஜைகள், சுவாமி சப்பர உலா, தேரோட்டம் என்று மிக விமரிசையாக நடைபெறுகின்றது. கந்த சஷ்டி திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சஷ்டி திருநாளில் சூரசம்ஹாரம் சிறப்பாக நடக்கிறது. கந்தசுவாமி பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
பொன்கொடுதீவு என்ற பதம் திரிபடைந்து புங்குடுதீவு என்று வழங்கப்படுகிறது வரலாறு. அக்காலத்தில் புங்கை மரங்கள் நிறைந்த காடாக இவ்விடம் இருந்ததால் புங்குடுதீவு என பெயர் பெற்றதாகவும் வரலாறு. இக்கோவிலுக்கு தெற்கில் பிரசித்தி பெற்ற சிவன் கோவிலும், தென் கிழக்கே மாரியம்மன் கோவில் இருப்பது சிறப்பம்சமாகும்.
தல வரலாறு:
1853-ம் ஆண்டில் காசிநாதன் சின்னதுரை என்ற முருக பக்தரால் பெருங்காடு கிராஞ்சியம்பதி கந்தசுவாமி ஆலயம் கட்டப்பட்டது. பின்னர் அன்னார் சந்நிதியினர் கந்தசுவாமி கோவிலை நிர்வகித்து வந்தனர்.
தல அமைப்பு:
இக்கோவில் கருவறையில் கந்தசுவாமி மூலவராக கையில் வேலுடன் வீற்றிருந்து வள்ளி, தெய்வானை சமேதராக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். உற்சவ மூர்த்திகள் பொலிவான தோற்றத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். மேலும் விநாயகர், சிவபெருமான், பைரவர் மற்றும் பரிவார மூர்த்திகளும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
வைகாசி மஹோற்சவம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம், கார்த்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
அல்லல்கள் அகல, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க, நோய்கள் குணமாக, வல்வினைகள் நீங்க, , கேட்டது கிடைக்க, குடும்ப ஒற்றுமை ஓங்க
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க அருளும் இலங்கை புங்குடுதீவு பெருங்காடு கிராஞ்சியம்பதி கந்தசுவாமியை மனக்கண்ணால் தரிசித்து பயன்பெறுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - 1146 அல்லல்கள் அகற்றும் இலங்கை புங்குடுதீவு பெருங்காடு கிராஞ்சியம்பதி கந்தசுவாமி
Comments
Post a Comment