கோவில் 1145 - இலங்கை ஏழாலை அத்தியடி முருகமூர்த்தி கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-1145
துன்பங்கள் நீக்கும் இலங்கை ஏழாலை அத்தியடி முருகமூர்த்தி கோவில்
27.7.2024 சனி
அருள்மிகு ஏழாலை அத்தியடி முருகமூர்த்தி கோவில்
ஏழாலை [ஏழு ஆலயங்கள்] [Earlalai]
யாழ்ப்பாணம் மாவட்டம் (Jaffina)
வடக்கு மாகாணம் (Northern Province)
இலங்கை
இருப்பிடம்: யாழ்ப்பாணம் 14 கிமீ, கொக்குவில் 11 கிமீ, உடுவில் 6 கிமீ,
மூலவர்: முருகமூர்த்தி [சிவசுப்பிரமணிய சுவாமி]
தேவியர்: வள்ளி, தெய்வானை
உற்சவர்: முருகமூர்த்தி வள்ளி, தெய்வானை
தல மகிமை:
இலங்கை வடக்கு மாகாணம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ்ப்பாணம் நகரிலிருந்து காங்கேசந்துறை வீதியில் 14 கிமீ தொலைவில் உள்ள ஏழாலை கிராமத்தில் துன்பங்கள் நீக்கும் அத்தியடி முருகமூர்த்தி கோவில் அமைந்துள்ளது. கொக்குவில்லிலிருந்து 14 கிமீ தொலைவு அல்லது உடுவில் கிராமத்திலிருந்து 6 கிமீ பிரயாணம் செய்தாலும் ஏழாலை அத்தியடி முருகமூர்த்தி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவராக முருகமூர்த்தி [சிவசுப்பிரமணிய சுவாமி] வள்ளி, தெய்வானை சமேதராக அருள்புரிகின்றார்.
இத்திருக்கோவிலில் சித்திரை மாத பிறப்பு முதல் 10 நாட்கள் சித்திரை மஹோற்சவம் திருவிழாவாகக் நடைபெறுகின்றது. முதல் நாள் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தினசரி சிறப்பு பூஜைகள் நடக்கின்ரன. 5-ம் நாள் மாம்பலத் திருவிழா, 6-ம் நாள் திருப்புகழ் உற்சவம், 7-ம் நாள் பூந்தண்டிகை உற்சவம், 8-ம் நாள் சுவாமி சப்பர திருஉலா, 9-ம் நாள் தேரோட்டம், 10-ம் நாள் தீர்த்த உற்சவம் என விமரிசையாக சிறப்பாக நடைபெறுகின்றன. மேலும் ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டி பெருவிழா விமரிசையாக நடைபெறுகிறது. தினமும் இரு வேளை சிறப்பு பூஜைகள், மாலயில் சுவாமி வீதி உலா என்று சிறப்புற நடக்கின்றன. 6-ம் நாள் மாலை சூரசம்ஹாரம் நிகழ்வு சிறப்பாக நடக்கிறது. 7-ம் சுவாமி திருக்கல்யாணம், சுவாமி தேவியருடன் திருஉலா மற்றும் அன்னதானம் ந்டைபெறுகின்றன. முருகப்பெருமானின் ஏனைய திருவிழாக்களும் விசேஷ பூஜகளுடன் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
யாழ்ப்பாணம் மாவட்டதில் அமைந்துள்ள இந்த ஊரில் பிரசித்தி பெற்ற ஏழு ஆலயங்கள் உள்ளதால், இவ்வூர் ஏழாலை என்றழைக்கப்படுகிறது. அவற்றுள் அத்தியடி முருகமூர்த்தி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும்.
தல அமைப்பு:
அத்தியடி முருகமூர்த்தி கோவிலுக்கு அடுத்தடுத்து விநாயகர், புவேனேஸ்வரி அம்மன் மற்றும் சிவன் கோவில்கள் இருப்பது சிறப்பம்சாமகும். கருவறையில் மூலவராக முருகமூர்த்தி [சிவசுப்பிரமணிய சுவாமி] வீற்றிருந்து வள்ளி, தெய்வானையுடன் திருக்காட்சி அருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் இக்கோவிலில் விநாயகர், பைரவர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
சித்திரை மஹோற்சவம் (10 நாள்), கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம், கார்த்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
துன்பங்கள் நீங்க, ஐஸ்வர்யம் பெருகிட, வினைகள் அகல, எண்ணியது ஈடேற, குடும்ப வாழ்வு சிறக்க, ஆரோக்கியம் வேண்டி, நல்லன நடக்க
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
ஐஸ்வர்யம் பெருகிட அருளும் இலங்கை ஏழாலை அத்தியடி முருகமூர்த்தி திருவடிகள் பணிந்து தொழுதிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - 1145 இலங்கை ஏழாலை அத்தியடி முருகமூர்த்தி கோவில் கந்த சஷ்டி சூரசம்ஹார நிகழ்வில் உற்சவர் முருகமூர்த்தி
படம் 2 - 1145 ஐஸ்வர்யம் பெருகிட அருளும் இலங்கை ஏழாலை அத்தியடி முருகமூர்த்தி கோவில்
Comments
Post a Comment