கோவில் 1144 - இலங்கை புங்குடுதீவு கிழக்கு தல்லையப்பற்று முருகமூர்த்தி கோவில்

 🙏🙏

தினம் ஒரு முருகன் ஆலயம்-1144

வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தரும் இலங்கை புங்குடுதீவு கிழக்கு தல்லையப்பற்று முருகமூர்த்தி கோவில்

26.7.2024 வெள்ளி


அருள்மிகு முருகமூர்த்தி கோவில்

[அருள்மிகு சங்கரமூர்த்தி-முருகமூர்த்தி கோவில்]

தல்லையப்பற்று (Thallaiyapattu)

புங்குடுதீவு கிழக்கு (Pungudutivu East)

புங்குடுதீவு (Pungudutivu)

யாழ்ப்பாணம் மாவட்டம் (Jaffina)

வடக்கு மாகாணம் (Northern Province)

இலங்கை

இருப்பிடம்: யாழ்ப்பாணம் 26 கிமீ, மண்டைத்தீவு 28 கிமீ,


மூலவர்: முருகமூர்த்தி

உற்சவர்: முருகமூர்த்தி வள்ளி, தெய்வானை

தோற்றம்: 1892


தல மகிமை:

இலங்கை வடக்கு மாகாணம் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள 7 தீவுகளில் ஒன்றாகும். யாழ்ப்பாணம் நகரிலிருந்து நெடுஞ்சாலையின் மூலம் 26 கிமீ தொலைவில் உள்ள புங்குடுதீவு கிழக்கு 12-வது வட்டாரத்தில் வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தரும் தல்லையப்பற்று முருகமூர்த்தி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சங்கரமூர்த்தி முருகமூர்த்தி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. மண்டைத்தீவிலிருந்து 28 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் புங்குடுதீவு கிழக்கு தல்லையப்பற்று முருகமூர்த்தி கோவிலை அடையலாம். இக்கோவிலில் மூலவராக முருகமூர்த்தி வள்ளி, தெய்வானையுடன் அருளாட்சி புரிகின்றார்.


இக்கோவிலில் மாசி மகம் மஹோற்சவம் 12 நாட்கள் பெருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றது. கொடியற்றத்துடன் தினசரி சிறப்பு பூஜைகள், முருகமூர்த்தி சுவாமி தேவியருடன் திருவீதி உலா, 9-ம் நாள் தேரோட்டம், 10-ம் நாள் தீர்த்தோற்சவம், 11-ம் நாள் சங்காபிஷேகம், திருக்கல்யாணம் என்று வெகு சிறப்பாக நடைபெறுகின்றது. கந்த சஷ்டி திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது. 6-ம் நாள் மாலை சஷ்டி திருநாளில் சூரசம்ஹாரம் சிறப்பாக நடக்கிறது. பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை, திருக்கார்த்திகை, கிருத்திகை, சஷ்டி உள்ளிட்ட அனைத்து திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. மகா சிவராத்திரி, நவராத்திரி, பொங்கல், தீபாவளி, சித்திரை வருட பிறப்பு, விநாயக சதுர்த்தி, மார்கழி பூஜை என அனைத்து இந்து திருவிழாக்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.


பொன்கொடுதீவு என்ற பதம் திரிபடைந்து புங்குடுதீவு என்று வழங்கப்படுகிறது வரலாறு. அக்காலத்தில் புங்கை மரங்கள் நிறைந்த காடாக இவ்விடம் இருந்ததால் புங்குடுதீவு என பெயர் பெற்றதாகவும் வரலாறு. தமிழ்நாட்டில் உள்ள ‘புங்குடி’ என்னும் ஊர்ப் பெயரை புங்குடுதீவுடன் தொடர்புபடுத்தி பெயர் விளக்கம் கூறப்படுவதுமுண்டு. இசுலாமியரின் படையெடுப்பு தமிழகத்தில் ஏற்பட்டபோது அங்குள்ள பூங்குடி ஊரினர் தமது கன்னிப் பெண்களைப் பாதுகாக்க வேண்டிய அவல நிலையில் இங்கு தப்பி ஓடிவந்து குடியேறியதால் இத்தீவுக்கு ‘பூங்கொடி’ ‘திருப்பூங்கொடி’ எனும் பெயர்களை பெற்றதாயிற்று. இந்த வகையில் பூங்கொடித் தீவு என வழங்கி அது காலப்போக்கில் புங்குடுதீவு என மருவியதாயிற்று என்பர்

தல வரலாறு:

1892-ம் ஆண்டு புங்குடுதீவு மணியக்காரர் மகள் ராமாசிப் பிள்ளை வேல் ஒன்றை பிரதிஷ்டை செய்து கோவிலை உருவாக்கியதாக யாழ்ப்பாண பதிவேடு கூறுகின்றது. பின்னர் அருகிலுள்ள ஆதி விநாயகருடன், சங்கரமூர்த்தி-முருகமூர்த்தி கோவில் எழுப்பப்பட்டதாக வரலாறு. இக்கோவிலில் 1892-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் 1928, 1957, 1972. 1985 மற்றும் 2005-ம் ஆண்டுகளில் முருகமூர்த்தி கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. சமீபத்தில் 05.04.2023-ல் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேம் சிறப்பாக நடந்தேறியது.


தல அமைப்பு:

அழகிய அமைப்புடன் கூடிய இக்கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் பொலிவான கொடிமரம், மயில், பலிபீடம் உள்ளன. கருவறையில் முருகமூர்த்தி திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். தனி கருவறையில் வீற்றிருக்கும் வேல் வழிபாடும் பிரதான வழிபாடாக உள்ளது. மேலும் ஆதி விநாயகர், உற்சவர்கள், சிவபெருமான், அம்பாள், கோஷ்ட தெய்வங்கள், சண்டிகேஸ்வரர், பைரவர் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் இக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

மாசி மகம் மஹோற்சவம் (12 நாள்), கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை, திருக்கார்த்திகை, மகா சிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, தைப்பொங்கல், சித்திரை 1, ஆனி உத்திரம், மார்கழி பூஜை, நவராத்திரி, தீபாவளி, சங்கடஹர சதுர்த்தி கார்த்திகை, சஷ்டி


பிரார்த்தனை:

வேண்டுவோருக்கு வேண்டும் வரம் பெற்றிட, கல்வி, ஞானம் சிறக்க, திருமணம் நடைபெற. குழந்தை பாக்கியம் வேண்டி, துன்பங்கள் நீங்க, நோய்கள் குணமாக


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


கல்வி, ஞானம் சிறக்க அருளும் இலங்கை புங்குடுதீவு கிழக்கு தல்லையப்பற்று முருகமூர்த்தியை போற்றி வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

கோயம்புத்தூர் 25

🙏🙏


படம் 1 - 1144 வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தரும் இலங்கை புங்குடுதீவு கிழக்கு தல்லையப்பற்று முருகமூர்த்தி கோவில் வேல் பெருமான்


படம் 2 - 1144 கல்வி, ஞானம் சிறக்க அருளும் இலங்கை புங்குடுதீவு கிழக்கு தல்லையப்பற்று முருகமூர்த்தி கோவில் உற்சவர்

Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்