கோவில் 1110 - ஈரோடு மாக்கினாங்கோம்பை வெள்ளிமலை ஆண்டவர் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1110
வினைகளை விலக்கும் ஈரோடு மாக்கினாங்கோம்பை வெள்ளிமலை ஆண்டவர் கோவில்
22.6.2024 சனி
அருள்மிகு வெள்ளிமலை ஆண்டவர் திருக்கோவில் [TM012297]
வெள்ளிமலை
மாக்கினாங்கோம்பை-638454
சத்தியமங்கலம் வட்டம்
ஈரோடு மாவட்டம்
இருப்பிடம்: சத்தியமங்கலம் 11 கிமீ, கோபிசெட்டிப்பாளையம் 19 கிமீ, ஈரோடு 54 கிமீ
செல்: ராஜசேகர்: 98423 85108 & சக்திவேல்: 88383 97600
மூலவர்: வெள்ளிமலை ஆண்டவர்
பழமை: 65 ஆண்டுகள்
தல மகிமை:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து 11 கிமீ தொலைவில் இருக்கும் மாக்கினாங்கோம்பை கிராமத்தில் வினைகள் யாவும் விலக்கும் வெள்ளிமலை ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. கோபிசெட்டிப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 19 கிமீ தொலைவு அல்லது ஈரோடு மாநகரம் பேருந்து நிலையத்திலிருந்து 54 கிமீ தூரம் பிரயாணம் செய்தாலும் மாக்கினாங்கோம்பை வெள்ளிமலை ஆண்டவர் கோவிலை அடையலாம். இக்கோவிலில் முருகப்பெருமான் வெள்ளிமலை ஆண்டவராக அருள்புரிகின்றார். சித்தர்கள் பலரும் வெள்ளிமலையில் இருக்கும் பாறைகளில் முருகப்பெருமானை நோக்கி இன்றும் தவமிருப்பதாக ஊர்ப் பெரியவர்கள் கூறுகின்றனர்.
சுமார் 65 வருடங்கள் பழமையான சத்தியமங்கலம் அருகே அமைந்துள்ள வெள்ளிமலை ஆண்டவர் கோவிலில் இந்து அறநிலையத் துறை அனுமதியுடன் முருகன் கோயிலில் கும்பாபிஷேக திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது. சுற்று வட்டார 10 கிராம மக்கள் இணைந்து கோவில் புனரமைப்பு பணிகளுக்கு பேருதவி புரிந்து வருகின்றனர். கோவில் திருப்பணிக்கு உதவி செய்ய விரும்பும் முருக பக்தர்கள் திருக்கோயில் நிர்வாகத்தினரை [தொடர்பு எண்: Raja Sekar: 98423 85108 & Sakthivel: 88383 97600] கொண்டு, பணம் அல்லது பொருளுதவிகள் செய்யலாம்.
இக்கோவிலில் தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், சித்திரை முதல் நாள் உள்ளிட்ட திருவிழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. மேலும் கார்த்திகை, சஷ்டி, செவ்வாய்க்கிழமை போன்ற திருநாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
1950 வாக்கில் இப்பகுதியை சேர்ந்த காளியண்ண கவுண்டர் என்ற ஆகச் சிறந்த முருக பக்தர் ஒருவர் பழனி முருகனை தரிசித்து வரும் போது வெள்ளிக் கொலுசு ஒன்று கிடைத்த்தாகவும், அதை இங்கு சுயம்புவாக கற்சிலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு அணிவித்து, இக்கோவிலில் அருள்பாலிக்கும் முருகப்பெருமானுக்கு வெள்ளிமலை ஆண்டவர் என்ற திருப்யரிட்டு வழிபட ஆரம்பித்தார். மேலும் இம்மலைக்கு வெள்ளிமலை என்றும் பெயரிட்டதாக வரலாறு. தற்போது இக்கோவிலை இந்து அறநிலையத் துறை நிர்வக்கித்து வருகிறது. திருக்கோவில் புனரமைப்பு வேலைகள் நடைபெற்று வருகிறது. திருப்பணி வேலைகள் நடைபெற்று முடிந்த உடன் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
தல அமைப்பு:
வெள்ளிமலை அடிவாரத்தில் பழனியில் இருப்பதைப் போலவே பாத விநாயகர் தனி சந்நிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். வெள்ளிமலை ஆண்டவர் கோவிலுக்கு செல்வதற்கு அழகிய படிக்கட்டுகள் உள்ளன. இலகு வாகனங்கள் செல்வதற்கு தற்போது மண் சாலை உள்ளது. ஏறும் வழியில் இருக்கும் ஆலமரம் அடியில் இடும்பன் குடியமர்ந்து அருள்கின்றார். வழியெங்கும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக அதிக அளவில் வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன். மலை ஏறியவுடன் வலப்பக்கம் உச்சி பிள்ளையார் தனி சந்ந்தியில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். இடப்பக்கம் பண்ணாரி அம்மன் தனி சந்நிதியி குடியமர்ந்து அருள்பாலிக்கின்றார். கருவறையில் கற்சிலையாக வெள்ளிமலை ஆண்டவர் வேலுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் சனீஸ்வரர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், சித்திரை 1, ஆடி 18, கார்த்திகை, சஷ்டி, செவ்வாய்
பிரார்த்தனை:
வினைகள் யாவும் விலக, நேர்மறை அதிர்வுகள் உண்டாக, நினத்த்து நடைபெற, மன அமைதி உண்டாக, தீராத நோய்கள் குணமாக
நேர்த்திக்கடன்:
வேல் பிரதிஷ்டை, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல்
நேர்மறை அதிர்வுகள் உண்டாக்கும் ஈரோடு மாக்கினாங்கோம்பை வெள்ளிமலை ஆண்டவர் திருப்பாதங்கள் போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
good
ReplyDelete