கோவில் 1057 - செங்கல்பட்டு எலப்பாக்கம் பாலமுருகன் கோவில்

 🙏🏻🙏🏻                                                                                                       

தினம் ஒரு முருகன் ஆலயம்-1057

ஆனந்தம் அருளும் செங்கல்பட்டு எலப்பாக்கம் பாலமுருகன் கோவில் 

30.4.2024 செவ்வாய்


அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில் [TM003634]

[சின்மய விநாயகர் & பாலமுருகன் திருக்கோவில்] 

எலப்பாக்கம்-603201

மதுராந்தகம் வட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் 

இருப்பிடம்: செங்கல்பட்டு 42 கிமீ, மதுராந்தகம் 29 கிமீ, மேல்மருவத்தூர் 15 கிமீ, அச்சரபாக்கம் 12 கிமீ


மூலவர்: பாலமுருகன்

பழமை: 100 ஆண்டுகளுக்கும் மேல்


தல மகிமை:

செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு நகரிலிருந்து 42 கிமீ தொலைவில் மதுராந்தகம் வட்டத்தில் உள்ள எலப்பாக்கம் கிராமத்தில் ஆனந்தம் அருளும் பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. மதுராந்தகத்திலிருந்து 29 கிமீ தூரமும், மேல்மருவத்தூரிலிருந்து 15 கிமீ தூரமும் பிரயாணம் செய்தால் இக்கோவிலை அடையலாம். இக்கோவிலில் பாலமுருகன் அருள்பாலிக்கின்றார். இக்கோவிலின் அருகில் சிறப்பு மிக்க எலப்பாக்கம் வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.


இத்திருத்தலம் நான்கு புறமும் சிறப்பு மிக்க திருத்தலங்கள் இருப்பது சிறப்பம்சம். [பார்வை: முருகன் ஆலயம் 1056]. 63 வருடங்களாக சித்திரை மாத கிருத்திகை நன்னாளில் பெருவிழா (2 நாட்கள்) மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மூலவர் சந்நிதியில் சின்மய விநாயகர் மற்றும் பாலமுருகனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. திருநாளன்று காலை 8 மணிக்கு பக்தர்கள் பால்குடம், பால் காவடி, வேல் காவடி ஏந்தி முக்கிய வீதிகளை கடந்து கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். பங்குனி உத்திரம், தைப்பூசம் உள்ளிட்ட திருவிழாக்களும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. கார்த்திகை, சஷ்டி திருநாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.

       

தல வரலாறு:

பழமையான இக்கோவில் ஒரு காலத்தில் சிவன் கோவிலாக இருந்து வந்ததாகவும், பிற்காலத்தில் அந்த இடத்தில் சின்மய விநாயகரை பிரதிஷ்டை செய்ததாகவும் செவி வழி செய்தி. பாலமுருகன் பிரதான மூர்த்தியாக உள்ளதாலும், பாலமுருகனுக்கு அனைத்து விசேஷங்களும் கொண்டாடப்படுவதால் இக்கோவில் பாலமுருகன் கோவில் என்றும், சின்மய விநாயகர் & பாலமுருகன் கோவில் என்றும் அழைக்கபடுகின்றது. தற்போது இக்கோவில் இந்து அறநிலையத் துறை மூலம் நிரவகிக்கப்படுகிறது.  


தல அமைப்பு:

புனரமைக்கப்பட்ட இக்கோவில் கருவறையில் மூலவரான பாலமுருகன் சிறிய மூர்த்தியாக பொலிவுடன் கேயில் வேல் கொண்டு நின்ற நிலையில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். சின்மய விநாயகரும் மற்றொரு மூலவராக வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். மேலும் பிற தெய்வங்களும் இக்கோவிலில் திருக்காட்சி தந்து அருள்பாலிக்கின்றனர்.    


திருவிழா:

சித்திரை கிருத்திகை, பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, ஆடிக்கிருத்திகை, கார்த்திகை, சஷ்டி, செவ்வாய்


பிரார்த்தனை:

ஆனந்தம் பெற, எண்ணியது ஈடேற, கல்வி, ஞானம் சிறக்க, வியாபாரம்/தொழில் மேம்பட, விவசாயம் செழிக்க, மன மகிழ்ச்சி கிடைக்க 


நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


எண்ணியது ஈடேற அருளும் செங்கல்பட்டு எலப்பாக்கம் பாலமுருகனை தொழுதிடுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1057 ஆனந்தம் அருளும் செங்கல்பட்டு எலப்பாக்கம் பாலமுருகன்


படம் 2 - 1057 எண்ணியது ஈடேற அருளும் செங்கல்பட்டு எலப்பாக்கம் பாலமுருகன் 63-வது சித்திரை கிருத்திகை பெருவிழா [ஏப்ரல் 2024]



Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்