கோவில் 1053 - தர்மபுரி குத்தலஹள்ளி முருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1053
மன அமைதி தந்தருளும் தர்மபுரி குத்தலஹள்ளி முருகன் கோவில்
26.4.2024 வெள்ளி
அருள்மிகு முருகன் திருக்கோவில்
குத்தலஹள்ளி-636808
[குத்தலஅள்ளி]
பாலக்கோடு வட்டம்
தர்மபுரி மாவட்டம்
இருப்பிடம்: தர்மபுரி 16 கிமீ, பாலக்கோடு 10 கிமீ
மூலவர்: முருகன்
தேவியர்: வள்ளி, தெய்வானை
தல மகிமை:
தர்மபுரி மாவட்டம் தலைநகர் தர்மபுரி நகரிலிருந்து 16 கிமீ தொலைவில் இருக்கும் குத்தலஹள்ளி கிராமத்தில் மன அமைதி தந்தருளும் முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத முருகன் அருள்புரிகின்றார். பாலக்கோடு நகரிலிருந்து 10 கிமீ பிரயாணம் செய்தாலும் இத்திருக்கோவிலை அடையலாம்.
இத்திருக்கோவிலில் பங்குனி உத்திரம் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் வெகு விமரிசையாக நடைபெறுகின்றன.
தல வரலாறு:
பழமையானதாக கருதப்படும் குத்தலஹள்ளி முருகன் கோவில் சமீபத்தில் புனரமைக்கப்பட்டு 2021-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தல அமைப்பு:
இக்கோவில் நுழைவு வாயில் முன் பெரிய நந்தி உள்ளது. கோவில் கருவறையில் மூலவர் முருகன் கயில் வேல் கொண்டு வள்ளி, தெய்வானை சமேதராக நின்ற கோலத்தில் திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் கணபதி, சிவபெருமான் உள்ளிட்ட தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, கார்த்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
மன அமைதி உண்டாக, பிணிகள் யாவும் தீர, திருமணபேறு வேண்டி, சந்தான பாக்கியம் கிட்ட, வினைகள் அகல
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல்
பிணிகள் யாவும் தீர்க்கும் தர்மபுரி குத்தலஹள்ளி முருகன் முன் பணிந்து வேண்டுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
Comments
Post a Comment