கோவில் 1052 - தர்மபுரி மோட்டுக்கொட்டாய் ஞானதண்டாயுதபாணி சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1052
துன்பங்களை நீக்கும் தர்மபுரி மோட்டுக்கொட்டாய் ஞானதண்டாயுதபாணி சுவாமி கோவில்
25.4.2024 வியாழன்
அருள்மிகு ஞானதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்
மோட்டுக்கொட்டாய்-635111
அடிலம் ஊராட்சி
பாலக்கோடு வட்டம்
தர்மபுரி மாவட்டம்
இருப்பிடம்: தர்மபுரி 40 கிமீ, பாலக்கோடு 22 கிமீ
மூலவர்: ஞானதண்டாயுதபாணி
தல மகிமை:
தர்மபுரி மாவட்டம் தலைநகர் தர்மபுரி நகரிலிருந்து 40 கிமீ தொலைவில் இருக்கும் மோட்டுக்கொட்டாய் கிராமத்தில் (அடிலம் ஊராட்சி, பாலக்கோடு வட்டம்) துன்பங்கள் நீக்கும் ஞானதண்டாயுதபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மூலவர் ஞானதண்டாயுதபாணி சுவாமி அருளாட்சி செய்கின்றார். பாலக்கோடு நகரிலிருந்து 22 கிமீ பிரயாணம் செய்தாலும் இக்கோவிலை அடையலாம். முருகப்பெருமானின் முக்கிய திருவிழாக்கள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
தல வரலாறு:
இக்கோவில் 2019-ல் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தேறியது.
தல அமைப்பு:
அழகிய தோரண வாயிலுடன் கூடிய இக்கோவில் கருவறையில் ஞானமே வடிவாக ஞானதண்டாயுதபாணி சுவாமி நின்ற கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், சிவபெருமான் உட்பட அனைத்து தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
கந்த சஷ்டி, வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், தைப்பூசம், கார்த்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
துன்பங்கள் நீங்க, சகல ஐஸ்வர்யங்கள் பெற்றிட, தொழில், வியாபாரம் மேம்பட, தீராத நோய்கள் குணமாக
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல்
சகல ஐஸ்வர்யங்களும் கிடைத்திட அருளும் தர்மபுரி மோட்டுக்கொட்டாய் ஞானதண்டாயுதபாணி சுவாமி மனமுருகி தொழுதிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1052 துன்பங்களை நீக்கும் தர்மபுரி மோட்டுக்கொட்டாய் ஞானதண்டாயுதபாணி சுவாமி
Comments
Post a Comment