கோவில் 1051 - தர்மபுரி பாலக்கோடு சக்திவேல் முருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1051
சகல நன்மைகள் அருளும் தர்மபுரி பாலக்கோடு சக்திவேல் முருகன் கோவில்
24.4.2024 புதன்
அருள்மிகு சக்திவேல் முருகன் திருக்கோவில் [TM006117]
[ஆறுபடை சக்திவேல் முருகன் திருக்கோவில்]
பாலக்கோடு-636808
தர்மபுரி மாவட்டம்
இருப்பிடம்: தர்மபுரி 28 கிமீ
மூலவர்: சக்திவேல் முருகன் [ஆறுபடை சக்திவேல் முருகன்]
தல மகிமை:
தர்மபுரி மாவட்டம் தலைநகர் தர்மபுரி நகரிலிருந்து 28 கிமீ தொலைவில் இருக்கும் பாலக்கோடு நகரம் பேருந்து நிலையம் எதிரே சகல நன்மைகள் அருளும் சக்திவேல் முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சக்திவேல் முருகன் மூலவராக அருள்புரிகின்றார். ஆறுபடை வீடும் ஒரே இடத்தில் அமைந்துள்ளதால் சக்திவேல் முருகன் கோவில் ஆறுபடை சக்திவேல் முருகன் திருக்கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.
இக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறும். தினமும் அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. கந்த சஷ்டி திருநாளன்று மூலவர் மற்றும் உற்சவருக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படுகின்றன. பின்னர் சூரசம்ஹாரம் சிறப்பான நடைபெறுகிறது. தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது. இத்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். முருகப்பெருமானின் இதர திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
தல வரலாறு:
மிகவும் சிறப்பு வாய்ந்த கோவில் தற்போது இந்து அறநிலையத் துறையினரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
தல அமைப்பு:
கோவிலுக்குள் நுழைந்தவுடன் கொடிமரம் உள்ளது கருவறையில் மூலவர் சக்திவேல் முருகன் (ஆறுபடை சக்திவேல் முருகன்) ஒரு கையில் வேல் கொண்டு, மற்றொரு கையை இடுப்பில் ஏந்தி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர் உட்பட அனைத்து தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
கந்த சஷ்டி, வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், தைப்பூசம், கார்த்திகை, சஷ்டி, செவ்வாய்
பிரார்த்தனை:
சகல நன்மைகள் கிடைக்க, தீவினைகள் அகல, கல்வி, ஞானம் சிறக்க, எண்ணியது ஈடேற, பிணிகள் தீர
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
தீவினைகள் அகல அருளும் பாலக்கோடு சக்திவேல் முருகனை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
Comments
Post a Comment