கோவில் 1048 - சென்னை அழிஞ்சிவாக்கம் சிங்காரவேலர் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1048
சிக்கல்கள் தீர்க்கும் சென்னை அழிஞ்சிவாக்கம் சிங்காரவேலர் கோவில்
21.4.2024 ஞாயிறு
அருள்மிகு சிங்காரவேலர் திருக்கோவில்
அழிஞ்சிவாக்கம்
செங்குன்றம் அருகில்
சென்னை-600052
திருவள்ளூர் மாவட்டம்
இருப்பிடம்: செங்குன்றம் 800 மீ, புழல் 5 கிமீ, கோயம்பேடு/சென்ட்ரல் 18 கிமீ, திருவள்ளூர் 41 கிமீ
மூலவர்: சிங்காரவேலர்
தேவியர்: வள்ளி, தெய்வானை
தல மகிமை:
சென்னை மாநகரில் உள்ள செங்குன்றத்திலிருந்து (Redhills) 800 மீ அருகில் இருக்கும் அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் சிக்கல்கள் தீர்க்கும் சிங்காரவேலர் கோவில் அமைந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இத்திருக்கோவிலில் மூலவர் சிங்காரவேலர் வள்ளி, தெய்வானை சகிதம் அருளாட்சி செய்கின்றார். அருகில் இருக்கும் புறநகர் பகுதி புழலிலிருந்து 5 கிமீ பிரயாணம் செய்தாலும் அல்லது கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து அல்லது சென்னை சென்ட்ரலிலிருந்து 18 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் அல்லது மாவட்ட தலைநகரம் திருவள்ளூரிலிருந்து 41 கிமீ பிரயாணம் செய்தாலும் சிறப்பு மிக்க அழிஞ்சிவாக்கம் சிங்காரவேலர் கோவிலை அடையலாம்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் இக்கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இத்திருக்கோவிலில் முருகப்பெருமானின் திருவிழாக்கள் அனைத்தும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
தல வரலாறு:
மிகவும் பழமையான சிங்காரவேலர் கோவில் சுமார் 5 வருடங்களுக்கு முன்னர் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தேறியது.
தல அமைப்பு:
இக்கோவில் கருவறையில் மூலவராக முருகப்பெருமான் சிங்காரவேலர் என்ற திருப்பெயருடன் வீற்றிருந்து வள்ளி, தெய்வானை சமேதராக அருள்பாலிக்கின்றார். விநாயகர் உட்பட பிற தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, கார்த்திகை, சஷ்டி, செவ்வாய்
பிரார்த்தனை:
சிக்கல்கள் தீர, நேர்மறை எண்ணங்கள் உண்டாக, மனமகிழ்ச்சி கிட்ட, திருமணம் நடைபெற, குழந்தைப்பேறு உண்டாக, சகல நன்மைகளும் கிடைக்க
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல்
நேர்மறை எண்ணங்களை உண்டாக்கும் சென்னை அழிஞ்சிவாக்கம் சிங்காரவேலரை சிரம் தாழ்த்தி வணங்கிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
Comments
Post a Comment