கோவில் 1047 - சென்னை புழல் சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1047
இன்னல்கள் யாவும் அகற்றும் சென்னை புழல் சுப்பிரமணிய சுவாமி கோவில்
20.4.2024 சனி
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் [TM042426]
121, ஒற்றை வாடை தெரு
புழல்
சென்னை-600066
சென்னை மாவட்டம்
இருப்பிடம்: கோயம்பேடு 13.5 கிமீ, சென்ட்ரல் 13.5 கிமீ, எழும்பூர் 15 கிமீ
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
தேவியர்: வள்ளி, தெய்வானை
பழமை: 1000 ஆண்டுகளுக்கு மேல்
தல மகிமை:
சென்னை மாநகரில் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 13.5 கிமீ தொலைவில் இருக்கும் புழல் பகுதியில் பக்தர்கள் இன்னல்கள் யாவும் அகற்றும் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி அருளாட்சி புரிகின்றார். சென்னை சென்ட்ரலிலிருந்து 13.5 கிமீ பிரயாணம் செய்தாலும் அல்லது எழும்பூரிலிருந்து 15 கிமீ பிரயாணம் செய்தாலும் புழல் சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம்.
இக்கோவிலில் பங்குனி உத்திரம், தைப்பூசம் திருவிழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. பக்தர்கள் பால்குடம், காவடி ஏந்தி வருகின்றனர். கந்த சஷ்டி பெருவிழா விமரிசையாக நடைபெறுகின்றது. கார்த்திகை, சஷ்டி தினங்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. செவ்வாய்க்கிழமைகளில் விசேஷ பூஜைகள் நடக்கிறது. செவ்வாய்க்கு அதிபதி முருகபெருமான் ஆவார். மேலும் இங்கு அங்காரகன் சந்நிதியும் உள்ளது. எனவே செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், திருமணத்தடை மற்றும் திருமணத்தில் பிரச்னை உள்ளவர்கள் அதிக அளவில் வந்து வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு குறைகள் நீங்கி செல்கின்றனர்.
தல வரலாறு:
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இத்திருக்கோவிலை இந்து அறநிலையத் துறை தற்போது நிர்வகித்து வருகிறது. சமீபத்தில் இக்கோவில் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற்றது.
தல அமைப்பு:
ஆகம அமைப்புடன் கூடிய இக்கோவில் கருவறையில் சுப்பிரமணிய சுவாமி வேலேந்தி நின்ற திருக்கோத்தில் வள்ளி, தெய்வானை சமேதராக திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். அழகிய உற்சவர்கள் அருள்பாலிப்பது சிறப்பம்சம். கருவறைக்கு வலப்பக்கம் தனி சந்நிதியில் மகாதேவர், உமா மகேஸ்வரி சமேதராக அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேஸ்வரர், அங்காரகன், பைரவர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் இக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, ஆடிக்கிருத்திகை, பிரதோஷம், கார்த்திகை, சஷ்டி, செவ்வாய்
பிரார்த்தனை:
இன்னல்கள் அகல, திருமணத்தடை போக்க, செவ்வாய் தோஷம் நீங்க, குழந்தை பாக்கியம் வேண்டி, மன அமைதி கிடைக்க, எண்ணியது ஈடேற
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 6.30-11.30 மாலை 4.30-8.30
செவ்வாய் தோஷம் நீங்க அருளும் சென்னை புழல் சுப்பிரமணிய சுவாமியை மனமுருகி வேண்டுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
Comments
Post a Comment