கோவில் 1046 - சென்னை அம்பத்தூர் விநாயகபுரம் தென்பழனி ஆண்டவர் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1046
சந்தான பாக்கியம் அருளும் சென்னை அம்பத்தூர் விநாயகபுரம் தென்பழனி ஆண்டவர் கோவில்
19.4.2024 வெள்ளி
அருள்மிகு தென்பழனி ஆண்டவர் திருக்கோவில்
விநாயகபுரம்
அம்பத்தூர்
சென்னை-600053
சென்னை மாவட்டம்
இருப்பிடம்: கோயம்பேடு 13 கிமீ, சென்ட்ரல் 21 கிமீ, எழும்பூர் 17 கிமீ
மூலவர்: தென்பழனி ஆண்டவர்
தல மகிமை:
சென்னை மாநகரில் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 13 கிமீ தொலைவில் இருக்கும் அம்பத்தூர் விநாயகபுரத்தில் சந்தான பாக்கியம் அருளும் தென்பழனி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தென்பழனி ஆண்டவர் அருள்புரிகின்றார். சென்னை சென்ட்ரல்/எழும்பூரில் இருந்து 21/17 கிமீ பிரயாணம் செய்தாலும் அம்பத்தூர் விநாயகபுரம் தென்பழனி ஆண்டவர் கோவிலை அடையலாம்.
இக்கோவிலில் பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி உள்ளிட்ட திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. பக்தர்கள் பால்குடம், காவடி ஏந்தி வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். கந்த சஷ்டியையொட்டி சிறப்பு அபிஷேகம், தீபாரதனைகள் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
அம்பத்தூர் வாழ் முருக பக்தர்கள் மற்றும் புரவலர்களால் இக்கோவில் கட்டப்பட்டது.
தல அமைப்பு:
இக்கோவில் கருவறையில் மூலவர் தென்பழனி ஆண்டவர் கையில் தண்டம் ஏந்தி நின்ற திருக்கோலத்தில் பழனி முருகனை போலவே ஆற்றலுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சிவபெருமான், அம்பாள், சக்தி மிகுந்த அம்மன், நவக்கிரகங்கள் உள்ளிட்ட் தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர்.
.
திருவிழா:
பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, கார்த்திகை, சஷ்டி, செவ்வாய்
பிரார்த்தனை:
சந்தான பாக்கியம் வேண்டி, மன நிம்மதி கிடைக்க, வேண்டியது நிறைவேற, நோய்கள் குணமாக, நல்லன நடக்க
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 7-9 மாலை 6-8
மன நிம்மதி தந்தருளும் சென்னை அம்பத்தூர் விநாயகபுரம் தென்பழனி ஆண்டவர் திருவடிகள் பணிந்து வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
Comments
Post a Comment