கோவில் 721 - கிருஷ்ணகிரி மாவட்டம் பாகிமானூர் பாலமுருகன் கோவில்

 🙏🏻🙏🏻                                                                                                                                                         தினம் ஒரு முருகன் ஆலயம்-721

கேட்டதை கொடுத்தருளும் கிருஷ்ணகிரி மாவட்டம் பாகிமானூர் பாலமுருகன் கோவில்

30.5.2023 செவ்வாய்


அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில்

பாகிமானூர்-635104

கிருஷ்ணகிரி மாவட்டம்

இருப்பிடம்: கிருஷ்ணகிரி 17 கிமீ, பர்கூர் 2 கிமீ

மூலவர்: பாலமுருகன்


தலமகிமை:

கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரியிலிருந்து 17 கிமீ தொலைவிலும், பர்கூரில் இருந்து 2 கிமீ தூரத்திலும் இருக்கும் பாகிமானூர் கிராமத்தில் இருக்கும் மலை குன்றின் மீது அழகிய பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. மூலவராக பாலமுருகன் அருள் புரிகின்றார். கோவில் அருகில் பசுமையான மரங்களும் தொலைதூர மலைத்தொடர்களும் மனதை மிகவும் கொள்ளை கொள்ளும் காட்சியாகும்.


ஒவ்வொரு வருடமும் ஆடிக்கிருத்திகை, தைப்பூசம் திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். முருகப்பெருமானின் விசேஷங்கள் அனைத்தும் சிறப்பு பூஜைகளுடன் நடைபெறுகின்றன. பாலமுருகனை வழிபடுவோருக்கு, கேட்டதை கொடுத்து அருளுகின்றார்.


தல வரலாறு:

சுமார் எண்பது வருடங்களுக்கு முன் இந்த கிராமத்தைச்சேர்ந்த நாரத கவுண்டர் என அழைக்கப்பட்ட முத்துசாமி என்ற பக்தரின் கனவில் தோன்றி, தான் இந்த மலையின்மீது குடிகொண்டிருப்பதாக கூறி தனக்கு கோவில் கட்ட சொல்லி மறைந்திருக்க, மறுநாள் காலை பக்தி மேலிட நாரத கவுண்டர் கையில் வேலுடன் ஊர் மக்கள் பின் தொடர அருள் கொண்டு மலை ஏறினார். இறை சக்தி உறைந்துள்ள இடத்தை கண்டவுடன், தன் கையிலிருந்த வேலை அங்கே நட்டு வைத்து பூஜை செய்தார். பின் காலப்போக்கில் இந்த சிறிய ஆலயம் கட்டப்பட்டது.


தல அமைப்பு:

அழகிய சிறிய பாலமுருகன் கோவிலுக்கு மலை அடிவாரத்தில் இருந்து செல்ல சற்று தூரம் வரை படிக்கட்டுகள் உள்ளது. அதன் பிறகு சரிவான மலை மீது ஏறிச் செல்ல வேண்டும். சிறிது தூரம் சென்றால், இடும்பன் தோளில் காவடி சுமந்தவாறு வரவேற்று அருள்பாலிக்கிறார். அவரை வணங்கி மேலே சென்றால் கோவில் அமைந்துள்ளது. முன்புறம் சிறிய மண்டபத்தில் நுழைந்தவுடன் கருவறையில் பாலமுருகன் கையில் வேலுடன் நின்றவாறு திருக்காட்சி அளித்து தேடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.


திருவிழா:

ஆடிக்கிருத்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி


பிரார்த்தனை:

கேட்டது கிடைக்க, குடும்ப வாழ்வு சிறக்க, குழந்தைப்பேறு வேண்டி, நோய்கள் குணமாக,


நேர்த்திக்கடன்:

பால்குடம், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்


குடும்ப வாழ்வு சிறக்க அருளும் கிருஷ்ணகிரி மாவட்டம் பாகிமானூர் பாலமுருகனின் தாள் பணிந்து வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 721 கேட்டதை கொடுத்தருளும் கிருஷ்ணகிரி மாவட்டம் பாகிமானூர் பாலமுருகன்


படம் 2 - 721 குடும்ப வாழ்வு சிறக்க அருளும் கிருஷ்ணகிரி மாவட்டம் பாகிமானூர் பாலமுருகன்



Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்