கோவில் 720 - புதுச்சேரி நாவற்குளம் பாலமுருகன் கோவில்
🙏🏻🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-720
நற்பலன்கள் நல்கும் புதுச்சேரி நாவற்குளம் பாலமுருகன் கோவில்
29.5.2023 திங்கள்
அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில்
நாவற்குளம்-605101
புதுச்சேரி மாநிலம்
இருப்பிடம்: புதுச்சேரி பேருந்து நிலையம் 6 கிமீ
மூலவர்: பாலமுருகன்
உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை
தலமகிமை:
புதுச்சேரி மாநிலம் புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து 6 கிமீ தொலைவில் உள்ள நாவற்குளத்தில் பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அருள்பாலிக்கும் முருகபெருமான், தன் பக்தர்களுக்கு நற்பலன்கள் நல்குகின்றார்.
இத்திருக்கோவிலில் 30-ம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா 5.4.23 அன்று சிறப்பாக நடைபெற்றது. பங்குனி உத்திரத்திற்கு முதல் நாள் காலை கணபதி பூஜையுடன் துவங்கும். அன்று மாலை 4 மணிக்கு பாலமுருகனுக்கு பொங்கல் வைத்து தீபாரதனை நடைபெறும். பின்னர் காப்பு கட்டி பூஜை நடக்கும். பங்குனி உத்திரமன்று காலை 9 மணிக்கு கடும்பாடி பாலமுத்து மாரியம்மன் கோவிலிலிருந்து பக்தர்கள் 108 பால்குடம், காவடி ஏந்தி வருகின்றனர். 11 மணிக்கு பல்வகை அபிஷேகங்கள், தீபாராதனை நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு பால விநாயகர் மற்றும் பாலமுருகனுக்கு சிறப்பு அலங்காரன் நடக்கும். மறுநாள் இரவு 7 மணிக்கு இடும்பன் பூஜையும், 9 மணிக்கு பால விநாயகர் மற்றும் பாலமுருகனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.
தல வரலாறு:
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் இக்கோவில் கட்டப்பட்டது என்கிறது வரலாறு.
தல அமைப்பு:
திருக்கோவில் மூலவராக பாலமுருகன் பாலகன் தோற்றத்தில் நின்ற கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருளை அள்ளி, அள்ளி வழங்குகின்றார். பால விநாயகர் தனி சந்நிதியில் அருள்கின்றார். மேலும் தட்சிணாமூர்த்து, துர்க்கை, சக்தி, ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள் தனித் தனியே வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். கோவிலில் உள்ள மரத்திலேயே பிள்ளையார் சிறப்பம் இருப்பதி சிறப்பம்சம். ஏராளமான பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர்.
.
திருவிழா:
பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, தைப்பூசம், கிருத்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
நற்பலன்கள் கிடைக்க, குழந்தை வரம், திருமண வரம் வேண்டி, தீவினைகள் அகல, என்ணியது நிறைவேற
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்
புத்திர பாக்கியம் அருளும் புதுச்சேரி நாவற்குளம் பாலமுருகனை மனம் மகிழ தரிசிப்போம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
Comments
Post a Comment