கோவில் 685 - வேலூர் பேரிப்பேட்டை பேரி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-685
சகல சௌபாக்கியங்கள் அருளும் வேலூர் பேரிப்பேட்டை பேரி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்
24.4.2023 திங்கள்
அருள்மிகு பேரி சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
B S S Temple
பேரி கிருஷ்ணப்பா சாலை
வேலூர்-632004
இருப்பிடம்: வேலூர் பழைய பேருந்து நிலையம் 700 மீ, வேலூர் புதிய பேருந்து நிலையம் 2.2 கிமீ
மூலவர்: சிவசுப்பிரமணிய சுவாமி
தேவியர்: வள்ளி, தெய்வானை
தலமகிமை:
வேலூர் மாநகரம் வேலூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து அருகில் (700 மீ) B.S.S Temple என்று சிறப்பு பெயரில் பேரி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மூலவராக சிவசுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலிக்கின்றார். 2021-ல் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இக்கோவிலுக்கு அருகில் புகழ் பெற்ற ஜலகண்டேஸ்வரர் ஆலயம் மற்றும் CMC மருத்துவமனை உள்ளது சிறப்பம்சம்.
இக்கோவிலில் ஆடிக்கிருத்திகை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. கந்த சஷ்டி மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கிருத்திகை, சஷ்டி தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. பக்தர்கள் அதிக அளவில் வந்து வழிபடுகின்றனர்.
தல வரலாறு:
மிகவும் பழமையான சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலை உள்ளூர் முருக பக்தர்கள் மற்றும் புரவலர்களின் பேருதவியுடன் புனரமைத்து 22.02.2021-ல் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
தல அமைப்பு:
ஆகம விதிகள் படி கட்டிய இத்திருக்கோவிலின் கருவறையில் சிவசுப்பிரமணிய சுவாமி நின்ற கோலத்தில் வள்ளி, தெய்வானை சமேதராக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், சிவபெருமான், பார்வதி, தட்சிணாமூர்த்தி, துர்க்கை, பைரவர், நவக்கிரகங்கள் தனித்தனி சந்நிதிகளில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்கள். கோவில் முழுக்க அழகிய தெய்வீக சிற்பங்கள்
திருவிழா:
ஆடிக்கிருத்திகை, கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம், கிருத்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
சகல சௌபாக்கியங்கள் அருள, தீராத நோய்கள் தீர, தொழில் சிறக்க, வியாபாரம் விருத்தியடைய
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்
தீராத நோய்களை தீர்த்தருளும் வேலூர் பேரிப்பேட்டை பேரி சிவசுப்பிரமணிய சுவாமியை வணங்கி பலன் பெற்றிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 685 சகல சௌபாக்கியங்கள் அருளும் வேலூர் பேரிப்பேட்டை பேரி சிவசுப்பிரமணிய சுவாமி
படம் 2 - 685 தீராத நோய்களை தீர்த்தருளும் வேலூர் பேரிப்பேட்டை பேரி சிவசுப்பிரமணிய சுவாமி
Comments
Post a Comment