கோவில் 598 - திருச்செந்தூர் திருவாவடுதுறை ஆதீனம் சண்முகர் கோவில்
🙏🏻🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-598
திருமணத்தடை நீங்க அருளும் திருச்செந்தூர் திருவாவடுதுறை ஆதீனம் சண்முகர் கோவில்
27.1.2023 வெள்ளி
அருள்மிகு சண்முகர் திருக்கோவில்
திருவாவடுதுறை ஆதீனம்
சந்நிதி தெரு
திருச்செந்தூர்-628205
தூத்துக்குடி மாவட்டம்
இருப்பிடம்: திருச்செந்தூர் ரயில் நிலையம்/பேருந்து நிலையம் 1.6 கிமீ, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் 0.5 கிமீ
மூலவர்: சண்முகர்
தேவியர்: வள்ளி, தெய்வானை
தலமகிமை:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் திருத்தலத்தில் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகில் உள்ள தூண்டுகை விநாயகர் வலப்புறம் உள்ள திருவாவடுதுறை ஆதீன மடத்து வளாகத்தில் திருவாவடுதுறை ஆதீனம் வள்ளி, தெய்வானை சமேத சண்முகர் திருக்கோவில் அமைந்துள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலைப் போல அனைத்து திருவிழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றனர். திருமணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும் திருவாவடுதுறை ஆதீனம் சண்முகர் வழிபட்டு தொடர்ந்து நெய் விளக்கு ஏற்றி வந்தால், முருகப்பெருமான் அருளால் திருமணத்தடை அகலும். சந்தான பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்
தல வரலாறு:
திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் தென்னிந்தியாவிலுள்ள சைவ ஆதிங்களில் முதன்மையான ஆதினமாகும். பல கோவில்களையும். பல்லாயிர கணக்கான நிலங்களையும் பராமரிக்கும் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு திருநெல்வேலி, மதுரை, காசி, காளஹஸ்தி, திருச்செந்தூர் உட்பட 50 கிளை மடங்கள் உள்ளன. திருச்செந்தூர் திருவாவடுதுறை ஆதீன மட வளாகத்தில் பழமையான வள்ளி, தெய்வானை சமேத சண்முகர் திருக்கோவில் 300 ஆண்டுகள் முன்னர் தொடங்கப்பட்டது.
தல அமைப்பு:
இந்த அழகிய சிறிய கோவில் கருவறையில் மூலவராக சண்முகர் ஆறுமுகங்களுடன் வேல் மற்றும் சேவற்கோடி ஏந்தி வள்ளி, தெய்வானை சமேதராக தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். தன்னைத் தேடி வரும் அன்பர்களுக்கு அள்ளி வழங்கும் வள்ளலாக முருகப்பெருமான் திகழ்கின்றார். தெற்கு நோக்கிய கோவிலுக்குள் நுழைந்தவுடன் இடப்புறத்தில் 300 ஆண்டுகள் பழமையான ஆதீன விநாயகர் மற்றும் காமதேனு சிவலிங்க மூர்த்தங்கள் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
கந்த சஷ்டி, வைகாசி விசாகம், மாசிமகம், பங்குனி உத்திரம், கிருத்திகை, சஷ்டி, செவ்வாய், வெள்ளி
பிரார்த்தனை:
திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் வேண்டி, கல்வி, செல்வம் பெருக
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், பூஜைகள், வஸ்திரம் சாத்துதல் அன்னதானம்
திறக்கும் நேரம்:-
காலை 7-10 மாலை 6-8
குழந்தை பாக்கியம் கிடைக்க அருளும் திருச்செந்தூர் திருவாவடுதுறை ஆதீனம் சண்முகரை உள்ள உருக வணங்கிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 598 திருமணத்தடை நீங்க அருளும் திருச்செந்தூர் திருவாவடுதுறை ஆதீனம் சண்முகர் கோவில்
படம் 2 - 598 குழந்தை பாக்கியம் அருளும் திருச்செந்தூர் திருவாவடுதுறை ஆதீனம் சண்முகர் கோவிலில் ஆதின விநாயகர், காமதேனு சிவலிங்கம்
Comments
Post a Comment