கோவில் 236 - குஜராத் அஹமதாபாத் ஹத்கேஷ்வர் பாலமுருகன் கோவில்

 🙏🙏         

தினம் ஒரு முருகன் ஆலயம்-236

துக்கங்களை நீக்கியருளும் குஜராத் அஹமதாபாத் ஹத்கேஷ்வர் பாலமுருகன் கோவில்

30.01.2022 ஞாயிறு 

அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில்

ஹத்கேஷ்வர்

அஹமதாபாத்-380026 

குஜராத்

இருப்பிடம்: அஹமதாபாத் பேருந்து நிலையத்திலிருந்து கோவில் 5.7 கிமீ 


மூலவர்: பாலமுருகன்

தேவியர்: வள்ளி, தெய்வானை


தலமகிமை:

குஜராத் மாநிலம் அஹமதாபாத் மாநகரில் உள்ள ஹத்கேஷ்வர் என்ற இடத்தில் அமைந்துள்ள பாலமுருகன் கோவில் பிரசித்தி பெற்றது. வருடம் முழுவதும் முருகனுக்குரிய விசேஷ தினங்களில் சிறப்பு பூஜைகள் நடக்கும். திருவிளக்கு பூஜை, ஆன்மீக சொற்பொழிவு, கச்சேரி முதலியன சிறப்பாக நடைபெறும். இங்கு கொண்டாடப்படும் பங்குனி உத்திர 14 நாட்கள் பெருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. 


பங்குனி உத்திரத்தன்று பார்வதி-பரமேஸ்வரனுக்கும் மற்றும் முருகன்- தெய்வானைக்கும் திருமணம் நடக்கிறது என்பது சைவர்களின் நம்பிக்கை. பங்குனி உத்திரம் திருவிழா அன்று உத்திரம் நட்சத்திரமும் பவுர்ணமி திதியும் ஒன்றாக வருவதால் இந்த நாள் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த திருநாளில் குஜராத் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான தமிழர்கள் அஹமதாபாத் பாலமுருகன் கோவிலுக்கு திரளாக வந்துக் கலந்து கொண்டு  விழாவைக் கொண்டாடுவார்கள். 


ஒவ்வொரு வருடமும் 14 நாட்கள் விழா நடைபெறுவது விசேஷம். முதல் நாள் கணபதி ஹோமம். பின்பு கொடியேற்றம். தினமும் பாலமுருகனுக்கு மகா அபிஷேகம் நடைபெறுகின்றது. உத்திரத்தன்று திருக்காவடிகள் (பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி) புறப்பாடு, பால்குடம், பன்னீர்குடம் புறப்பாடு, அலகு குத்துதல்,  508 லிட்டர் பாலாபிஷேகம் நடைபெறுவது சிறப்பு. மாலையில் பாலமுருகன் வள்ளி, தெய்வானையுடன் பெரிய தேரில் பவனி வருவது விசேஷம். இந்தக் கோவிலுக்கு வந்து முருகப்பெருமானை மனமுருகி வேண்டினால், வேண்டும் பக்தர்களின் பாவங்கள் அனைத்தும் நீங்கும். துன்பங்கள் பறந்தோடிவிடும். இந்த வருடம் (2022) 56-வது வருட பங்குனி உத்திரம் திருவிழா வருகின்றது.


தலவரலாறு:

குஜராத் வாழ் தமிழர்கள் சேர்ந்து கட்டிய கோவில் இது. இந்தக் கோவிலின் அமைப்பு தமிழ்நாட்டில் அமைந்துள்ள முருகன் கோவில் போல் அமைந்திருப்பது சிறப்பு.  


தல அமைப்பு:

முருகப்பெருமான் இக்கோவில் கருவறையில் பாலமுருகன் என்ற திருநாமத்துடன் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் வள்ளி, தெய்வானை, பாலகணபதி, நீலகண்டேஸ்வரர், திரிபுரசுந்தரி, இடும்பன், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, ஐயப்பன், பைரவர், நவகிரகங்கள் முதலிய தெய்வங்களும் அருள்புரிந்து வருகின்றனர். கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள் முழுவதும் கோவில் சுவரில் எழுதப்பட்டுள்ளது.  


திருவிழா:

பங்குனி உத்திரம் பெருவிழா (14 நாள்), சித்திரை மாத பிறப்பு, வைகாசி விசாகம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம்


பிரார்த்தனை:

பாவங்கள் அகல, துன்பங்கள் நீங்க


நேர்த்திக்கடன்:

பால்குடம் எடுத்தல், காவடி சுமத்தல், அலகு குத்துதல், பாலாபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 8-12 மாலை 5-9


குஜராத் அஹமதாபாத் பாலமுருகனை மனமுருகி வேண்டினால், பாவங்கள் அனைத்தையும் அகற்றிடுவார்! 

 

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🙏



படம் 1 - பங்குனி உத்திர பெருவிழா பகதர்கள் காவடி, பால்குடங்களுடன் சிறப்பாக நடைபெறும் குஜராத் அஹமதாபாத் ஹத்கேஷ்வர் பாலமுருகன் கோவில்



படம் 2 - துக்கங்கள், பாவங்கள் அனைத்தும் நீக்கியருளும் குஜராத் அஹமதாபாத் ஹத்கேஷ்வர் பாலமுருகன்



Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்