கோவில் 234 - பஞ்சாப் படலா அச்சலேஷ்வர் தாம் கார்த்திகேயா கோவில்
🙏🙏
மறு பதிவு தினம் ஒரு முருகன் ஆலயம்-234
வேண்டுதல்களை நிறைவேற்றும் பஞ்சாப் படலா அச்சலேஷ்வர் தாம் கார்த்திகேயா கோவில்
28.01.2022 வெள்ளி
அருள்மிகு அச்சலேஷ்வர் தாம் கார்த்திகேயா திருக்கோவில்
படலா-143505
பஞ்சாப்
இருப்பிடம்: படலாவிலிருந்து கோவில் 7 கிமீ
மூலவர்: கார்த்திகேயா
தலமகிமை:
பஞ்சாப் மாநிலத்தில அமைந்துள்ள ஒரே முருகன் கோவில் படலா அச்சலேஷ்வர் தாம் கார்த்திகேயா கோவில் என்பது இத்தலத்தின் சிறப்பு. வட இந்தியாவில் உள்ள அரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகும். நாடேங்கும் இருந்து சரித்திரம் முக்கியம் கொண்ட இந்த கார்த்திகேயாவை தரிசிக்க பக்தர்கள் வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாத நவமி, தசமி அன்று 33 கோடி தெய்வங்கள் இத்தலத்திற்கு வருவார்கள் என்றும், கோவில் வளாகத்தில் உள்ள ஏரியில் நீராடுபவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் என்றும் சிவப்பெருமான் முருகப்பெருமானுக்கு இத்தலத்தில் வரம் அளித்தார்.
கோவிலுக்கு எதிரிலுள்ள அச்சல் குருத்துவாரா வரலாற்று முக்கியத்துவம் பெற்றது. வரலாற்றின் படி, சீக்கியர்களின் முதல் குருவான\ குரு நானக் தேவ், படாலாவின் அச்சலுக்கு வந்தார். இங்கு சித்தர்கள், யோகிகள் மற்றும் நாதர்களில் மூத்தவரான ஆகு பங்கர் நாத்துடன் ஒரு கருத்தரங்கு நடத்தினார். தன் எண்ணங்களை அவர் முன் வைத்தார். அதன் பிறகு குருத்வாரா சாஹிப் அங்கு கட்டப்பட்டது. அச்சலேஷ்வர் தாம் கோவிலுக்கு முன்பாக, குருநானக் தேவ்ஜியின் பாதங்கள் பட்ட இடத்தில் கட்டப்பட்ட குருத்வாரா, சீக்கிய சமூகத்திற்கு மிகவும் முக்கியமானது.
தலவரலாறு:
சத்யுக காலத்தில், போலே சங்கர் (சிவப்பெருமான்) தன் மைந்தர்களிடம், மூவுலகையும் மூன்று முறை சுற்றிவிட்டு முதலில் வருபவரே முதல் கடவுள் என்றும், அவரைத்தான் , முதலில் வணங்குவார்கள் என்றும் சொன்னார். தரையில் அமர்ந்து பரிகர்மாவுக்குப் புறப்பட்டாலும் கணேஷ்ஜி தனது எலியின் மீது அமர்ந்து போலே சங்கர் மற்றும் மாதா பார்வதி பரிக்ரமாவின் முதல் வழிபாட்டிற்குச் செல்வதற்கான உரிமையைப் பெறுகிறார், இதற்கிடையில் கார்த்திகேயாப் பெருமானுக்கு நாரதரால் கணேஷ்ஜி வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டது, உடனே முருகன் கோபமுற்று, நான் இந்த இடத்தில்தான் இருப்பேன் என்றும், கைலாயத்திற்கு வர மாட்டேன் என்று நாரதரிடம் சொன்னார், இந்தச் செய்தியை போலே சங்கரிடம் (சிவன்) நாரதர் சொன்னதும், ஈசன் உட்பட 33 கோடீஸ்வர தேவதைகள் அனைவரும் கார்த்திகேயாவைக் கொண்டாட வருகிறார்கள், ஆனால் முருகப்பெருமான் நம்பவில்லை, பின்னர் சிவன் முருகனிடம் ‘நீங்கள் கார்த்திகை மாதம் நவமி, தசமி (ஒன்பதாம், பத்தாம் நாள்) திருவிழாவை, இந்த இடத்தில் கொண்டாடுவீர்கள் என்று ஆசிர்வதித்தார்’. மேலும் முருகனுக்கு ‘அச்சலேஷ்வர் மகாதேவ்’ என்ற பட்டமும் கொடுத்தார். அப்போதிருந்து 33 கோடி தெய்வங்கள் கார்த்திகை மாதம் நவமி, தசமியில் இங்கு வந்து கார்த்திகேயாவை வணங்குவதாக நம்பப்படுகிறது. ஆனால் இந்த இடம் எங்கே என்று உங்கள் மனதில் ஒரு கேள்வி இருக்கலாம், இவ்வளவு பெரிய மற்றும் புனிதமான இடம் என்று தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். 33 கோடி தேவதைகள் வந்து வணங்குமிடம் பஞ்சாபில் படாலாவில் உள்ளது, இது படாலா நகரத்திலிருந்து 7 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த புனித இடம் அச்சலேஷ்வர் தாம் என்று அழைக்கப்படுகிறது..
தல அமைப்பு:
இந்த பழமையான திருக்கோவில் வெள்ளை பளிங்குக் கல்லிலானது. கருவறையில் இரண்டு லிங்கங்கள் உள்ளன. அவைகள் சிவப்பெருமான் மற்றும் மகன் கார்த்திகேயா இருவரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். விநாயகர் மற்றும் பிற தெய்வங்களும் அருளுகின்றனர். கோவில் வளாகத்தில் பெரிய மண்டபம் உள்ளது.
சரோவரில் ஒரு அழகான மற்றும் அரிய ருத்ரா கோயில் உள்ளது. ருத்ரா கோவிலில் 11 லிங்கங்கள் உள்ளன. ருத்ரா கோவிலை சுற்றி நான்கு திசைகளை குறிக்கும் நான்கு சிறிய ருத்ர கோவில்கள் உள்ளன. மொத்தம் ருத்திரன் ஐந்து கோவில்கள் இந்தியாவில் வேறு எங்குமே கிடையாது என்பது சிறப்பு..
திருவிழா:
கார்த்திகை மாதம் நவமி, தசமி (9,10-ம் நாள்)
பிரார்த்தனை:
வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற, கேட்டது கிடைக்க
மால்மருகன் பஞ்சாப் படலா அச்சலேஷ்வர் தாம் கார்த்திகேயனை மனமுருக தொழுதால், ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்! .
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25 🙏🙏
படம் 1 - வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றும் பஞ்சாப் படலா அச்சலேஷ்வர் தாம் கார்த்திகேயா சுவாமி
படம் 2 - சிவனும், கார்த்திகேயா சுவாமியும் லிங்க வடிவில் அருள்பாலிக்கும் பஞ்சாப் படலா அச்சலேஷ்வர் தாம் கார்த்திகேயா கோவில்
Comments
Post a Comment