கோவில் 161 - வேலூர் மாவட்டம் ஈசன் மலை சுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🙏

தினம் ஒரு முருகன் ஆலயம்-161

ஈ வடிவில் சித்தர்கள் உலா வரும் வேலூர் மாவட்டம் ஈசன் மலை சுப்ரமணிய சுவாமி கோவில்

16.11.21 செவ்வாய்

அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில்

ஈசன் மலை–632514

காட்பாடி வட்டம்

வேலூர் மாவட்டம்

இருப்பிடம்: ராணிப்பேட்டை 26 கிமீ


மூலவர்: சுப்பிரமணிய சுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை

தீர்த்தம்: மருந்து சுனை


தலமகிமை:

வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டத்தில், தெங்கால் கிராமத்தில் ஈ வடிவில் சித்தர்கள் உலா வரும் ஈசன் மலை சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது ராணிப்பேட்டையிலிருந்து பொன்னை-சித்தூர் சாலையில் 26 கிமீ தொலைவில் ஈசன் மலை சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. மலையடிவாரத்தில் சிவப்பெருமானும், மலையில் முருகப்பெருமானும் பக்தர்களின் மனப்பிணி, உடற்பிணிகளை தீர்க்கும் அதிசயங்கள் நிறைந்தது ஈசன் மலை திருத்தலம்.


‘சந்திரகாந்த பாறைகள் உள்ள ஈசன் மலையில் உள்ள பேய் மிரட்டி, பேராமுட்டி, புளியாரை, புளி நாரை, நிலப்பனங்கிழங்கு, தண்ணீர்விட்டான் கிழங்கு, இடி தாங்கி, என நூற்றுக்கணக்கான அபூர்வ மூலிகைகளால் நம் உடற்பிணிகளும், மனப்பிணிகளும் நீங்கும். கருங்காலி, வலம்புரி, பாதிரி, வெண்நாவல், தவிட்டான் ஆகிய விருட்சங்களும் உள்ளன. ஈசன் மலைக்குச் சென்றால் `இயற்கையும் இறைவனும் வேறு வேறு அல்ல; எங்கும் எதிலும் இறைவனே நிறைந்திருக்கிறான்' எனும் பேருண்மை எளிதில் புரியும்.


`பெரும்பாலும் இது போன்ற குளிர் அதிகமுள்ள இடங்களில் ஈக்கள் இருக்காது. ஆனால் இங்கு ஒற்றை `ஈ' வருகை தந்து அடியார்களைச் சிலிர்ப்பில் ஆழ்த்துகிறது. இங்கு சூட்சுமமாய் வசிக்கும் சித்தர் பெருமகன் ஸ்ரீகாளப்ப சுவாமியே ஈ வடிவில் வருவதாக நம்பிக்கை. தகுதியானவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் தியானம் புரியும் தருணம் வந்து வலம் புரிந்து ஆசீர்வதிக்கிறார் என்பது நம்பிக்கை'. பாலைச் சித்தர், மௌனகுரு சுவாமிகள், வள்ளிமலை சுவாமிகள், திருப்புகழ்ச் சித்தர் போன்றோர் தவமிருந்த இடம் இந்த மலை. ஆகவே அதீத சாந்நித்தியம் கொண்டு திகழ்கிறது இந்தமலை.


தலவரலாறு:

மலையடிவாரத்தில் சுவையான மருந்து சுனை ஒன்று உள்ளது. அதனருகிலிருக்கும் வெண்நாவல் மரத்தினடியில் ஜம்புகேஸ்வரர் உள்ளார். ஜம்பு என்றால் நாவல் மரம். பிரசித்தி பெற்ற முருகப்பெருமான்ன் தலமான வள்ளிமலை அருகில், அதன் ஈசான்ய மூலையில் அமைந்திருப்பதால், ஈசானிய மலை என்றும், சித்தர்கள் வழிபடும் ஜம்புகேஸ்வரர், சித்தேஸ்வரர் என்ற லிங்க மூர்த்தங்களாக ஈசன் அருள்பாலிக்கும் மலை ஆதலால் ஈசன் மலை என்றும் திருப்பெயர். ஈசன் மலை என்று பெயர்பெற்றிருந்தாலும் தற்போது முருகன் ஆலயமே புகழ் பெற்று விளங்குகிறது. முருகனும் சிவத்தில் உதித்த ஆறுமுக சிவம்.


தல அமைப்பு:

மலையடிவாரத்தில் வெண்நாவல் மரத்தினடியில் ஜம்புகேஸ்வரர் எழுந்தருளி உள்ளார்.. அவரை மனதார வணங்கி மலையேற வேண்டும். மலையின் மீதுள்ள ஆலயத்தின் கருவறையில் குறமகள் வள்ளியோடும், வானவர்கோன் திருமகளாம் தெய்வானையுடனும் முருகன் சுப்பிரமணிய சுவாமியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். பிரகாரத்தில் விநாயகர் அருள்கின்றார். முருகப்பெருமானின் ஆலயத்துக்கு சற்றே பின்புறம் சித்தர் பெருமகன் ஸ்ரீகாளப்ப சுவாமியின் அதிஷ்டானம் உள்ளது. அற்புத லீலைகளைப் புரிந்த இந்தச் சித்தரை இங்கு வந்த பலரும் ஒளி ரூபமாக தரிசித்து வரங்களைப் பெற்றிருக்கிறார்கள் என்கிறார்கள்.


திருவிழா:

ஆடிக்கிருத்திகை, கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம் வைகாசி விசாகம், மகா சிவராத்திரி, பிரதோஷம், கிருத்திகை, சஷ்டி

பிரார்த்தனை:

உடற்பிணி, மனப்பிணிகளை போக்க


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 8 முதல் இரவு 8 வரை


வேலூர் மாவட்டம் ஈசன் மலை சுப்ரமணிய சுவாமியையும் சிவபெருமானையும் தரிசித்தால் குருவருள் பெற்று அனைத்துப் பிணிகளும் நீங்கி பயனடையலாம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

  🙏🙏



படம் 1 - மனப்பிணி உடற்பிணிகளை போக்கியருளும் வேலூர் மாவட்டம் ஈசன் மலை முருகப்பெருமான்



படம் 2 - ஈ வடிவில் சித்தர் வந்து முருகப்பெருமானின் திருவருளால் பக்தர்களை காக்கும்  மூலிகைகள் நிறைந்த வேலூர் மாவட்டம் ஈசன் மலை திருத்தலம்

Comments

  1. Veloore Isanmalai Murugaperumanuku Arohara. Thanks for this post Iya.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்