கோவில் 160 - திருச்சி மாவட்டம் மணக்கால் சுப்பிரமணிய சுவாமி கோவில்

  🙏🙏

தினம் ஒரு முருகன் ஆலயம்-160

மாலவன் மருகன் காத்தருளும் திருச்சி மாவட்டம் மணக்கால் சுப்பிரமணிய சுவாமி கோவில்

15.11.21 திங்கள்

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

மணக்கால்-621703

திருச்சி மாவட்டம்

இருப்பிடம்: லால்குடி 1 கிமீ


மூலவர்: சுப்பிரமணிய சுவாமி,

தேவியர்: வள்ளி, தெய்வானை

உற்சவர்: சுப்பிரமணியர்


தலமகிமை:

திருச்சி மாவட்டம் லால்குடி கிழக்கே 1 கிமீ-ல் மாலவன் மருகன் காத்தருளும் திருச்சி மாவட்டம் மணக்கால் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. மணக்கால் சுப்பிரமணியரைக் கண்ணாரத் தரிசித்துப் பிரார்த்தித்தால், தீராத நோயும் தீரும். மனநோய்கள் குணமாகி, அங்காரகனின் பேரருளைப் பெறலாம் என்பது ஐதீகம்.


மணக்கால் கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோவிலும் உள்ளது. பிரணவப் பொருள் தெரியாத பிரம்மாவை சிறையில் அடைத்து, அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையனாகத் திகழும் சுப்பிரமணிய சுவாமியைத் தரிசிக்க திருமால் அங்கே சென்று, முருகப்பெருமான் கோவிலில் எழுந்தருள்வது காண்பதற்கு அரிதான ஒன்று. இத்திருத்தல வளாகத்தில் யஜுர் வேத பாடசாலை அமைத்திருப்பதால், எப்போதும் வேதமந்திர ஒலி இங்கே நிறைந்திருக்கிறது. அந்த மந்திரங்களின் அதிர்வு நாள் தோறும் இங்கு வரும் பக்தர்களின் உடற்பிணி, மனநோய்களைப் போக்குவது கண்கூடு. ஆராதிக்கும் அனைவருக்கும் மணக்கால் முருகன் தன் அருளை வாரி வழங்குவதில் வள்ளலாகவே திகழ்கிறான் என்று சொல்வது நிதர்சனமான உண்மை.


வைகாசி விசாக திருநாள் இங்கே கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. காவடிகள் எடுத்தும், பால்குடம் ஏந்தியும் பக்தர்கள் வந்து, வேண்டிச் செல்கின்றனர். இந்நாளில் முருகனைப் பிரார்த்தித்தால், நினைத்தது விரைவில் நடைபெறும்; வாழ்வில் ஏற்றங்களைக் காணலாம் என்கின்றனர் பக்தர்கள்.

.

தலவரலாறு:

சிவப்பெருமான். நெற்றிப் பொறியிலிருந்து தோன்றியவர் முருகன். ஒரு முறை பிரம்மனுக்கு “ஓம்” என்னும் பிரணவ மந்திரத்திற்கு பொருள் தெரியாததால் முருகன் அவரை சிறையில் அடைத்தார். அப்போது சிவபெருமான், முருகனிடம் பிரணவ மந்திரத்தின் பொருளை தனக்கு உபதேசிக்கும்படி கூறினார். முருகனும் தனது தந்தை சிவபெருமானின் காதில் உபதேசம் செய்தார். தான் அறிந்து கொண்ட உபதேசத்தை ஈசன் இவ்வுலகம் முழுவதும் அறிவித்தார். அதன்படி திருமாலும் பிரணவ மந்திரத்தின் பொருளைத் தெரிந்து கொண்டார். தனக்கு சிவன் மூலமாக மந்திர உபதேசம் செய்த முருகனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகப் பெருமாள் ஆவணித் திருவிழாவின் போது, இங்குள்ள முருகன் கோவிலுக்கு எழுந்தருளுகிறார் எனத் தலவரலாறு கூறுகிறது.


தல அமைப்பு:

கிழக்கு நோக்கிய கோவிலில் கருவறையில் மூலவராக, வள்ளி, தெய்வானை சமேதராக அழகு ததும்பத் தரிசனம் தந்து அருள்பாலிக்கும் சுப்பிரபிமணிய சுவாமியைப் நாள் முழுக்க பார்த்துக் கொண்டேஇருக்கலாம். மகா மண்டபத்தில் நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் உற்சவ மூர்த்தியும் கொள்ளை அழகு.


வரதராஜப்பெருமாள் கோவிலில், ஆவணி மாதம் திருவிழா நடைபெறும். அந்த விழாவின்போது ஸ்ரீதேவி, பூதேவி சகிதமாக, மருமகன் முருகப்பெருமானைப் பார்ப்பதற்காக இக்கோவிலுக்கு வந்து அனைவருக்கும் சேவை சாதிப்பார். அந்த நாளில், இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் காண அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் திரண்டு வந்து, தரிசிப்பார்கள்.


திருவிழா:

சித்திரை 1, வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை, கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம்.

பிரார்த்தனை:

உடற்பிணி, மனநோய்களை போக்க, நினைத்தது நிறைவேற, வாழ்வில் ஏற்றங்கள் காண


நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், புது வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 8-11 மாலை 5-6


உடற்பிணி மற்றும் மன நோய்களை குணமாக்கும் மணக்கால் சுப்பிரமணிய சுவாமியை மனமுருகி வேண்டி பயனடைவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

  🙏🙏



படம் 1 - உடற்பிணி மற்றும் மன நோய்களை குணமாக்கும் திருச்சி மாவட்டம் மணக்கால் சுப்பிரமணிய சுவாமி



படம் 2 - மாமன் மாலவனுடன் பக்தர்களை காத்தருளும் திருச்சி மாவட்டம் மணக்கால் சுப்பிரமணிய சுவாமி

Comments

  1. Manakaal Subramaniya Swamiku Arohara. Thanks for this post Iya

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்