கோவில் 159 - நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையம் சிவசுப்ரமணிய சுவாமி கோவில்

  🙏🙏

தினம் ஒரு முருகன் ஆலயம்-159

சந்ததி செழிக்க அருளும் நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையம் சிவசுப்ரமணிய சுவாமி கோவில்

14.11.21 ஞாயிறு

அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோவில்

குருசாமிபாளையம்-637403

நாமக்கல் மாவட்டம்

இருப்பிடம்: ராசிபுரம் 10 கிமீ


மூலவர்: சிவசுப்ரமணிய சுவாமி, பாலதண்டாயுதபாணி (2 மூலவர்கள்)

தேவியர்: வள்ளி, தெய்வானை


தலமகிமை:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகரிலிருந்து 10 கிமீ தொலைவில் சந்ததி செழிக்க அருளும் குருசாமிபாளையம் சிவசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சிவசுப்ரமணியசுவாமி, பாலதண்டாயுதபாணி என இரண்டு மூலவர்கள் இருப்பது தனிச்சிறப்பு. பாலதண்டாயுதபாணியின் திருவிக்கிரகத்தை வைத்து, மனமுருகி வழிபட்ட தளபதி வீரபாகுவிற்கு முருகப்பெருமான் திருக்காட்சி அருளிய திருத்தலம் இதுவாகும்.


பங்குனி உத்திரத்தின்போது, முருகப்பெருமானுக்குத் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெறுகின்றது. இதன் ஒரு பகுதியாக, மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் இந்து முஸ்லிம் பெருமக்கள் இணைந்து கொண்டாடும் சந்தனம் பூசும் விழா 117-வது வருடமாக (2021) தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவில் இந்து முஸ்லிம் சகோதரர்கள் ஒருவொருக்கொருவர் சந்தனம் பூசிக்கொள்வர்.


இந்நாளில், பக்தர்கள் தங்கள் கையால் மாலை தொடுத்து. சுவாமிக்கு சார்த்தி வழிபட்டால், விரைவில் கல்யாண மாலை நிச்சயம் என்பது நம்பிக்கை. இங்கு வந்து பொங்கலிட்டு. அன்னதானம் செய்து முருகனை வழிபட்டால், அந்த வருடம் விளைச்சல் அமோகமாக இருக்கும்; சந்ததி செழிக்கும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் உள்ளவர்கள் 9 செவ்வாய்/வெள்ளி நெய் தீபமேற்றி வழிபாடு செய்து வந்தால், முருகப்பெருமான் வயிறு உபாதைகளை தீர்த்து வைப்பார் என்பது ஐதீகம்.


தலவரலாறு:

முருகப்பெருமானின் படை வீரர்களின் தளபதியாகத் திகழ்ந்த வீரபாகு இங்கே பாலதண்டாயுதபாணியின் திருவிக்கிரகத்தை வைத்து, மனமுருகி வழிபட்டார். இதில் மகிழ்ந்த முருகப்பெருமான் அவருக்கு இங்கு திருக்காட்சி தந்தார் என்றும் தெரிவிக்கிறது தல புராணம். வீரபாகுவின் வம்சத்தவர்கள் முருகப்பெருமான் தரிசனம் தந்த இடத்தில் கோவில் அமைத்து வழிபடத் துவங்கினர்.


தல அமைப்பு:

எங்குமில்லாத அதிசயமாக இக்கோவில் கருவறையில் சிவசுப்ரமணிய சுவாமி, பாலதண்டாயுதபாணி என இரண்டு மூலவர்கள் எழுந்தருளி பக்தபெருமக்களுக்கு அருள்பாலிக்கின்றனர். மேலும் வள்ளி, தெய்வானை, வல்லப கணபதி, ஏகாம்பரேஸ்வரர், துர்க்கை சனீஸ்வரர் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர்

.

திருவிழா:

பங்குனி உத்திரம், சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை, மாசிமகம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, செவ்வாய், வெள்ளி

பிரார்த்தனை:

விளைச்சல் செழிக்க, சந்ததி செழிக்க, திருமண பாக்கியம் பெற, தோஷங்கள் நீக்க, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் விலக 9 செவ்வாய்/வெள்ளி நெய்தீபமேற்றி வணங்க வேண்டும்

,

நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், புது வஸ்திரம் சாத்துதல், பொங்கல் வைத்தல், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 6-10 மாலை 5-8


நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையம் சிவசுப்ரமணியசுவாமி மனமுருக வேண்டி வணங்கினால் வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் அகலும்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

 🙏🙏



படம் 1 - நம் சந்ததி செழிக்க அருளும்  சிவசுப்ரமணியசுவாமி குருசாமிபாளையம் நாமக்கல் மாவட்டம்


படம் 2 - தோஷங்கள் நீக்கி திருமண பாக்கியம்  அருளும் சிவசுப்ரமணியசுவாமி குருசாமிபாளையம் நாமக்கல் மாவட்டம்


Comments

  1. Gurisamipalayam sivasubramaniyanuku arohara. Thanks for this post Iya.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்