கோவில் 158 - கோயம்புத்தூர் போத்தனூர் அருள்முருகன் கோவில்

 🙏🙏  

தினம் ஒரு முருகன் ஆலயம்-158

மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் கோயம்புத்தூர் போத்தனூர் அருள்முருகன் கோவில்

13.11.21 சனி

அருள்மிகு அருள்முருகன் திருக்கோவில்

போத்தனூர்

கோயம்புத்தூர்-641023

இருப்பிடம்: கோயம்புத்தூர் காந்திபுரம் 11 கிமீ, உக்கடம் 5 கிமீ

மூலவர்: அருள்முருகன்


தலமகிமை:

கோயம்புத்தூர் காந்திபுரத்திலிருந்து 11 கிமீ தொலைவில் மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் கோயம்புத்தூர் போத்தனூர் அருள்முருகன் கோவில் அமைந்துள்ளது, உக்கடம் பேருந்து நிலையத்திலிருமிருந்து 5 கிமீ பயணம் செய்தால் இக்கோவிலை அடையலாம். இவ்வாலயத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா இங்குள்ள அனைத்து மதத்தினராலும் உற்சாகமாக கொண்டாடுகிறது. இந்த கோவில் வளர்ச்சிக்கு இஸ்லாமியர்கள் மற்றும், கிறிஸ்தவர்களும் பங்களிப்பது மகிழ்ச்சிக்கும், மத நல்லிணக்கத்திற்க்கும் உரியது என கூறுகின்றனர். மனிதனுக்காகதான் மதம், மதத்திற்காக மனிதன் அல்ல என்பதை உணர்த்தும் அருள்முருகன் ஆலயத்தின் சிறப்புகள் ஏராளம்.


பழனி முருகனைப் போல இங்குள்ள அருள்முருகன் மேற்கு நோக்கி அருளுகின்றார். ராஜகோபுரம், மூலவர் கோபுரங்களில் சிற்பங்கள் இல்லை. பழனிக்கு பாதயாத்திரை செல்பவர்கள் இத்தலத்தில் இளைப்பாறி, முருகப்பெருமானை தரிசித்து விட்டே செல்கிறார்கள்.

தலவரலாறு:

இத்தலத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய கல்லை வழிபாடு செய்து வந்தனர். ஒரு பக்தரின் கனவில் முருகன் வந்து இவ்விடத்தில் கோவில் கட்டி வழிப்பாடு செய்தால் அனைவருக்கும் அனைத்து அருளும் கிடைக்கும் என்று கூறி மறைந்தார். பக்தர்களால் ஜம்பொன் சிலை அமைக்கப்பட்டு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை அன்னதானம் விமர்சையாக நடைபெற்று வந்தது, முருக பக்தர்களால் அருள்முருகன் வழிபாட்டு சங்கம் அமைக்கப்பட்டு, அருள்முருகன் மூலவர் சிலை பிரதிஷ்டை செய்து 1982-ல் கும்பாபிஷேகம் நடந்தது. மீண்டும் 2019-.ல் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தேறியது.


தல அமைப்பு:

மூன்று நிலை ராஜகோபுரம் உடைய இத்திருக்கோவிலில் கருவறையில் மூலவர் அருள்முருகன் பழனி தண்டாயுதபாணி போல மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் கம்பீரமாக பக்தர்களுக்கு கருணை வள்ளளாக அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகப்பெருமான் மற்றும் இதர தெய்வங்களும் வீற்றிருந்து அருளுகின்றனர்.

.

திருவிழா:

தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி, ஆடிப்பெருக்கு, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை, கிருத்திகை, சங்கடஹர சதுர்த்தி

பிரார்த்தனை:

பிரச்னைகளை தீர்த்தருள, மத நல்லிணக்கம் வேண்டி

,

நேர்த்திக்கடன்:

பால்குடம், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், புது வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 5-12.30 மாலை 5-8.30


பிரச்னைகளை தீர்த்தருளம் கோயம்புத்தூர் போத்தனூர் அருள்முருகனை தாள் பணிந்து வணங்கிடுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25 

 🙏🙏  


படம் 1 - அனைத்துவிதப் பிரச்னைகளுக்கும் தீர்வு கொடுத்து அருளும் கோயம்புத்தூர் போத்தனூர் அருள்முருகன்


படம் 2 -  மதநல்லிணக்கத்தை அதிகரிக்க உதவும் கோயம்புத்தூர் போத்தனூர் அருள்முருகன்


Comments

  1. Koyamuthoor pothanoor arulmuruganuku arohara. Thanks for this post Iya.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்