கோவில் 154 - மலேசியா ஈப்போ கல்லுமலை சுப்ரமணியன் கோவில்

 🙏🙏     

                                                                                                                                                            தினம் ஒரு முருகன் ஆலயம்-154

2021 கந்த சஷ்டி திருநாளில் (6-ம் நாள்) கேட்டதையெல்லாம் அள்ளித்தரும் மலேசியா ஈப்போ கல்லுமலை சுப்ரமணியன் கோவில்

9.11.21 செவ்வாய்

                                                                                                                                         

அருள்மிகு ஈப்போ (Ipoh) கல்லுமலை சுப்ரமணியன் திருக்கோவில்

ஈப்போ (Ipoh)-30300

பேராக் மாகாணம் (Perak State)

மலேசியா (Malaysia)

இருப்பிடம்: கோலாலம்பூரிலிருந்து வடக்கே 200 கிமீ 

மூலவர்: சுப்ரமணியன்


தலமகிமை:

தமிழகத்தில் முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடுகள் உள்ளதைப் போல், மலேசிய நாட்டிற்கு மூன்றுபடை வீடுகள் புகழ்பெற்றவையாக விளங்குகின்றன. அவை கோலாலம்பூர் பத்துமலை (6.11.21 பதிவு), பினாங்கு தண்ணீர்மலை (நேற்றைய பதிவு 8.11.21) ஈப்போ கல்லுமலை ஆகும் (இன்றைய பதிவு 9.11.21). திருவிழாக்களில் தமிழர்கள் மட்டுமன்றி மலேயர்களும், சீனர்களும் அதிக அளவில் கலந்து கொண்டு வழிபாடு செய்கிறார்கள் 


இவ்வாலயத்தில் தைப்பூசம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்து, அலகுக் குத்தி, காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். தைப்பூசத்தன்று, மகாமாரியம்மன் கோவிலிலிருந்து ஈப்போ கல்லுமலை வரை நடக்கும் தேரோட்டம் மிக சிறப்பானது.  


தலவரலாறு: 

மலேசியா தலைநகரான கோலாம்பூரில் இருந்து வடக்கே சுமார் 200 கிமீ தொலைவில் அமைந்துள்ள முக்கிய நகரம் ஈப்போ. பேராக் மாநிலத்தின் தலைநகரான ஈப்போ, கோடீஸ்வரர்களின் பூமி என்று அழைக்கப்படுகிறது. கிந்தா என்ற நதியும், சுங்கை பிங்கி, சுங்கை பாரி என்ற துணைநதிகளும் பாயும் ஊர் இது. சுண்ணாம்புக் குன்றுகள் மற்றும் வெள்ளீயம் நிறைந்த நகரம். 


உயர்திரு. பாரிட் முனிசாமி உடையார் அவர்களிடம் வேலை பார்த்துவந்த கல் உடைக்கும் தொழிலாளி மாரிமுத்து என்பவர், தம் தொழிலின் நிமித்தம், குனோங் சீரோ, கல்லுமலைஅடிவாரத்தில் நடமாடிக் கொண்டிருக்கும்போது, "இங்கே வா, இங்கே வா" என்று யாரோ அழைப்பதுபோன்ற குரல் கேட்டு, திகைப்படைந்து நிற்கையில், மீண்டும் அதே போன்ற குரலொலி மலைப்பகுதியிலிருந்து வருவதைக் கண்டு மேலும் திகைப்படைந்து, தம்முடைய முதலாளியாகிய பாரிட் முனிசாமி உடையார் அவர்களிடம் போய் தகவலறிவித்தார். முதலில் அசட்டை செய்திட்ட. முனிசாமி உடையார் அதனைக் பார்த்துவிட வேண்டும் என்ற முடிவிற்கு வந்தவராய்த் தம்முடைய தொழிலாளார்கள் பலருடன் மலைப் பகுதியை ஆராய்ந்து அலசிப் பார்க்கத் தொடங்கினார். அப்போது, கும்மென்ற இருட்டுடன் கூடிய குகை தென்பட்டது. தீப்பந்தங்களை தயாரித்துக்கொண்டு, உள்ளே ஊடுருவிச்சென்று பார்த்தார்கள். கமகம என்று சாம்பிராணி, கற்பூரம், ஊதுபத்தி வாசனைகள் சேர்ந்து மணக்க அனைவரும் தங்களை அறியாமலேயே பக்தி வசப்பட்டு, மிக்க பயபக்தியுடன் மேற்கொண்டும் அங்குள்ள இரகசியத்தைக் கண்டுபிடிக்க முனைந்தார்கள். அப்போது திருமுருகன் சாயல் போன்ற அமைப்பு ஒன்றினை கல்லிலே கண்டு அதிசயித்தனர். அதனைத் தொடர்ந்து அக்குகை தூய்மை படுத்தப்பட்டு, திருமுருகன் குடிக்கொண்டுள்ள இடமாகக் கருதப்பட்டு, வழிபாட்டிற்குரிய ஒன்றாக மாற்றி அமைக்கப்பெற்றது. இதனைத் தொடார்ந்து, கல்லுமலைக் குகையில், அருள்மிகு சுப்பிரமணியர் கோவில், குனோங் சீரோவில்,1889-ம் ஆண்டில் அமைந்தது.


இங்கே மிகவும் பழைமையான சுப்பிரமணியர் ஆலயம், சென்ரோ மலைக்குகையில் இருந்து வந்தது. கி.பி. 1889-ல் நிலச்சரிவு விபத்தால் மலையடிவாரத்திற்கு கி.பி. 1930-ல் இடம் பெயர்ந்த இவ்வாலயம், இன்று கம்பீரமாய் எழுந்து நிற்கிறது.


தல அமைப்பு:

ஆலயம் கிந்தா நதிக்கரையில் ஏழுநிலை ராஜகோபுரத்துடன் ஏழு கலசங்களைத் தாங்கி பிரம்மாண்டமாய் காட்சியளிக்கிறது. உள்ளே விசாலமான பிரகாரம், நடுவில் பிரம்மாண்ட முன்மண்டபம் அமைந்துள்ளது. விநாயகர், அம்மன், நடராஜர் சபை, அரச மரத்தடி விநாயகர், தட்சிணாமூர்த்தி, பைரவர் சன்னிதிகள் ஒருங்கே அமைந்துள்ளன. மயில்கள் நிறைந்த தனிப்பகுதியும் இருக்கிறது.


ஆலயத்தின் நடுப்பகுதியில், கல்லுமலை சுப்பிரமணியர், திருச்செந்தில் நாதனின் மறுவடிவமாக சிரித்த முகத்துடன் காட்சி தருவது நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. இவரே ஈப்போ மக்களை காத்தருளும் இறைவன்.

.

திருவிழா:

தைப்பூசம் பெருவிழா, கந்த சஷ்டி திரு விழா, கிருத்திகை, சஷ்டி, விநாயகர் சதுர்த்தி

  

பிரார்த்தனை 

கேட்டதெல்லாம் கிடைக்க வேண்டி


நேர்த்திக்கடன்:

காவடி எடுத்தல், அல்கு குத்துதல்


திறக்கும் நேரம்:

காலை 4-12 மாலை 4.30-9 


2021 சஷ்டி 6-ம் நாளில் கந்தசஷ்டி திருவிழா நாளில் செந்திலாதிபன் சூரனை சூரசம்ஹாரம் செய்வதை மனதில் நிலை நிறுத்தி ஈப்போ கல்லுமலை சுப்ரமணிய சுவாமியை கும்பிட்டு கந்தனுக்கு பிடித்த கந்தசஷ்டி கவசத்தை 36 முறை படித்து எல்லா நலனும் பெறலாம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🙏



Comments

  1. Ipoh kallumalai subramania swamiku arohara. Thanks for this post Iya.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்