கோவில் 327 - நியுசிலாந்து ஆக்லாந்து திரு சுப்பிரமணியர் கோவில்

 🙏🙏                                                                                                                                                              தினம் ஒரு முருகன் ஆலயம்-327

விக்னங்களை விலக்கி அருளும் நியுசிலாந்து ஆக்லாந்து திரு சுப்பிரமணியர்  கோவில் 

1.5.22 ஞாயீறு

அருள்மிகு திரு சுப்பிரமணியர்  திருக்கோவில்

மாங்கரே (Otahuhu)

ஆக்லாந்து (Auckland) 2022 

நியுசிலாந்து

மூலவர்: திரு சுப்பிரமணியர்  


தல மகிமை:

நியுசிலாந்து நாட்டி; ஆக்லாந்தின் மாங்கரே (Otahuhu) பகுதியில் அமைந்துள்ள திரு சுப்பிரமணியர்  திருக்கோவில்,  தென்னிந்திய வகை கோவில்களில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். இந்த இடத்தின் அழகும் அமைதியும் இணையற்றதாகக் கருதப்படுகிறது. நியூசிலாந்து முழுவதிலுமிருந்து மக்கள் இங்கு வந்து கடவுளை வணங்கி பிரசாதத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார்கள். இக்கோவில் நியூசிலாந்தில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் பிரபலமானது, ஏனெனில் பல்வேறு நாடுகள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு பிரார்த்தனை செய்வதையும், இந்த ஆலயத்தின் அழகில் வியந்து போவதையும் காணலாம்.


அனைத்துத் தெய்வங்களின் சிலைகளும் கிரானைட் கற்களால் செதுக்கப்பட்டவை என்பது இத்தலத்தின் சிறப்பு. சரஸ்வதி தேவி அருளும் ஒரே கோவில் என்பது சிறப்பு. இந்து மதத்தின் அனைத்து விழாக்களும் கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வருட பிறப்பு, செவ்வாய்க்கிழமைகளில் வேல் அபிஷேகம் மற்றும் அன்னதானம், கடைசி சனியன்று நவக்கிரக கலச பூஜை, ஹோமம் முதலான விசேஷங்கள் குறிப்பிட தக்கவை.


தலவரலாறு:

நியுசிலாந்து வாழ் தமிழர்கள் ஒன்றிணைந்து நியுசிலாந்து டெம்பிள் சொசைட்டி என்ற சங்கத்தை ஆரம்பித்தனர். முருகப்பெருமானிம் புகழைப் பாட ஆக்லாந்து நகரில் கோவில் கட்டுவதற்காக மாங்கரே என்னுமிடத்தில் 2005-ல் நிலம் வாங்கப்பட்டது. அன்பர்களின் பொருளுதவியுடன் முருகனை முன்னிலை தெய்வமாக முன்னிருத்தி கோவில் எழுப்பினர். மே, 2015-ல் கும்பாபிஷேகம் நடந்தது. 


தல அமைப்பு:

கோவில் கருவறையில் மூலவராக, முருகப்பெருமான் திரு சுப்பிரமணியர் என்ற திருநாமத்துடன், நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும், மிகவும் பெரிய விநாயகர், பெருமாள், சிவலிங்கம், புவனேஸ்வரி, சரஸ்வதி, கருடாழ்வார், ஆஞ்சநேயர், பைரவர், முனீஸ்வரன் மற்றும் மதுரை வீரன் போன்ற தெய்வங்கள் அருளுகின்றனர். மயில், எலி. மற்றும் நந்தி முதலானோர் அவரவர் தெய்வங்களுக்கு எதிரில் இருக்கின்றனர். .


திருவிழா:, 

பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, தைப்பூசம், வைகாசி விசாகம், விநாயகர் சதுர்த்தி, வருட பிறப்பு, பிரதி சஷ்டி, கார்த்திகை, பிரதோஷம், பவுர்ணமி, சதுர்த்தி, ஏகாதசி,    


பிரார்த்தனை:

துன்பங்கள் தீர, தோஷ நிவர்த்தி வேண்டி, மன நிம்மதி அடைய,


நேர்த்திக்கடன்:

காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், அன்னதானம்  


திறக்கும் நேரம்:

காலை 10-1 மாலை 6-9 


ஆக்லாந்து திரு சுப்பிரமணியரின் திருவடி சரணடைந்தால் மன நிம்மதி தந்தருளுவார்!                                                                                                                                                                                  

 

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🙏



படம் 1 - விக்னங்களை விலக்கி அருளும் ஆக்லாந்து திரு சுப்பிரமணியர்



படம் 2 - மன நிம்மதி தந்தருளும் ஆக்லாந்து திரு சுப்பிமணியர். 

Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்