கோவில் 326 - நியுசிலாந்து ஆக்லாந்து நியுசிலாந்து திருமுருகன் கோவில்
🙏🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-326
திருப்பங்கள் தரும் நியுசிலாந்து ஆக்லாந்து நியுசிலாந்து திருமுருகன் கோவில்
30.4.22 சனி
அருள்மிகு நியுசிலாந்து திருமுருகன் திருக்கோவில்
ஒடாஹு (Otahuhu)
ஆக்லாந்து (Auckland) 1062
நியுசிலாந்து
மூலவர்: நியுசிலாந்து திருமுருகன்
தல மகிமை:
நியூசிலாந்து வாழ் தமிழர்களால் நியூசிலாந்து திருமுருகன் கோவில் 145, சர்ச் தெரு, ஒடாஹூ, ஆக்லாந்து என்னுமிடத்தில் கட்டப்பட்டது. இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா நாட்டிலிருந்தும் தமிழர்கள் இக்கோவிலுக்கு வருவது சிறப்பு.
நியூசிலாந்து திருமுருகன் கோவில் திருப்பணிச் சபை மூலம் முக்கிய திருவிழாக்கள் அனைத்தும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. ஒவ்வொரு வருட ஜனவரி மாதமும் இத்திருக்கோவிலின் முக்கிய நிகழ்வான வருட மஹோத்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது. கொடியேற்றத்துடன், ஹோமம், அபிஷேகங்கள், அலங்காரம், சிறப்பு பூஜைகள், காவடி, சுவாமி உலா, தேரோட்டம், அன்னதானம் என கோலாகலமாக நடைபெறும். இந்த கோவில் ஒன்பது கிரகங்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது சிறப்பு. பக்தர்கள் தங்கள் தோஷ நிவர்த்தி பெற இங்கு வருகின்றனர்.
தலவரலாறு:
1990-களில் இந்தியா, இலங்கை, மலேசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து நியூசிலாந்திற்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் தங்களது சைவ சமய நம்பிக்கை, கலாசாரம், மொழிப்பற்று, இறை நம்பிக்கை அடுத்து வரும் தலைமுறையிலும் தொடர வேண்டும் என்று எண்ணி தங்களுக்கென ஒரு கோவில் கட்ட முடிவு செய்தனர். முருகப்பெருமான் திருவருளால் 28.1.1999 தைப்பூசத்தை ஒரு அரங்கத்தில் (Mt.Albert War Memorial Hall) வைத்துக்கொண்டாடினார்கள்.
.நியூசிலாந்து திருமுருகன் கோயில் ஒருங்கிணைந்த சங்கத்தை (திருப்பணி சபை) பிப்ரவரி 2000-ம் ஆண்டு உருவாக்கினார்கள். அனைவரின் பொருளுதவியுடன் 2001-ல் மவுண்ட் வெலிங்க்டன் என்னுமிடத்தில் இடம் வாங்கப்பட்டது. 2001-ல் வைகாசி விசாகத்தன்று முருகபெருமானின் வேல் நிறுவப்பட்டது. 2002-ல் கோவிலுக்கு அடிக்கல் நாட்டி, முருகப்பெருமான், விநாயகர், அம்மன் முதலிய தெய்வங்களை பிரதிஷ்டை செய்து, 29.4.2002 அன்று கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. திருமுருகனின் திருவருளால், 28.9.2012-ல் 145, சர்ச் தெரு, ஒடாஹூ, ஆக்லாந்தில் புதிய இடம் வாங்கப்பட்டு, அனைத்து தெய்வங்களையும் நிறுவி 2014-ல் மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.
தல அமைப்பு:
திருக்கோவிலின் கருவறையில் மூலவராக திருமுருகன் எனும் திருப்பெயருடன், முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்து கொண்டிருக்கிறார். குமரனுக்குரிய எல்லா, விசேஷ நாட்களும் சிறப்பாக நடைபெறுகிறது. மேலும், விநாயகர், சிவப்பெருமான், ராஜ ராஜேஸ்வரி அம்மன், விஷ்ணு, தட்சிணாமூத்தி, ஆஞ்சனேயர் நவக்கிரகங்கள் முதலான தெய்வங்கள் அருள்கின்றனர். ,
திருவிழா:,
கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், விநாயகர் சதுர்த்தி, வருட பிறப்பு, பிரதி வெள்ளி, சஷ்டி, கார்த்திகை, பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி
பிரார்த்தனை:
வாழ்வில் திருப்பம் வேண்டி,தோஷ நிவர்த்தி வேண்டி, நேர்மறை எண்ணங்களை அதிகரிக்க
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள்
திறக்கும் நேரம்:
காலை 9.30-11.30 மாலை 6.30-8.30 [சனி, ஞாயிறு 9.30-12.30 மாலை 6.30-8.30]
நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும் நியுசிலாந்து திருமுருகனை அடிதொழுது வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - திருப்பங்கள் தரும் ஆக்லாந்து நியுசிலாந்து திருமுருகன்
படம் 2 - நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும் நியுசிலாந்து திருமுருகன்
Comments
Post a Comment