கோவில் 325 - நியுசிலாந்து வெலிங்க்டன் குறிஞ்சி குமரன் கோவில்

 🙏🙏                                                                                                                                                            தினம் ஒரு முருகன் ஆலயம்-325

குறை தீர்க்கும் நியுசிலாந்து வெலிங்க்டன் குறிஞ்சி குமரன் கோவில் 

29.4.22 வெள்ளி

அருள்மிகு குறிஞ்சி குமரன் திருக்கோவில்

நியுலேண்ட்ஸ் (Newlands)

வெலிங்க்டன் (Wellington) 6037 

நியுசிலாந்து


மூலவர்: குறிஞ்சி குமரன்

தேவியர்: வள்ளி, தெய்வானை


தல மகிமை:

குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருப்பான் என்று சொல்வது வழக்கம் கடல் கடந்து அயல் தேசங்களின் குன்றுகளிலும் குமரன் குடிகொண்டு அருள்பாலிக்கிறான். நியூசிலாந்து தேசத்தின் தலைநகரம் வெல்லிங்டன். நகருக்கு அருகில் உள்ள நியூலேண்ட்ஸ் பகுதியில் வெலிங்க்டன் குறிஞ்சி குமரன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவில் இலங்கை மற்றும் தென்னிந்திய தமிழர்களால் அமைக்கப்பட்டிருக்கிறது இவ்வாலயத்தில் குடிக்கொண்டுள்ள முருகப்பெருமான், குறிஞ்சி குமரன் என்ற திருப்பெயருடன் வீற்றிருப்பது கண்கொள்ளா அழகு.  குறிஞ்சி குமரன் வள்ளி மற்றும் தேவயானியுடன் அருள்பாலிக்கின்றார்.


இத்திருக்கோவில், நவீன முறையில் சிறந்த கலைப்பாடுகளுடன் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. முருகப்பெருமானுடன், அனைத்து தெய்வங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். இக்கோவிலுக்கு தமிழர்கள் மட்டுமின்றி, வட இந்தியர்கள் மற்றும் இதர தேச மக்களும் பக்தியுடன் வருகை தந்து முருகப்பெருமானை வேண்டி, அவனது அருளைப் பெற்று செல்கின்றனர். அனைத்து முருகபெருமான் விழாக்களும், இதர இந்து திருவிழாக்களும் கோலாகாலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.


தலவரலாறு:

நியூஸிலாந்தின் தலைநகரம் வெலிங்டனில் வாழும் இந்திய தமிழர்கள் மற்றும் இலங்கை தமிழர்கள் அனைவரும் சேர்ந்து 1992-ம் ஆண்டில் இந்துக்கள் குழு என்ற சங்கத்தை முருக வழிபாடு மற்றும் இதர தெய்வ வழிபாடு செய்வதற்காக ஆரம்பித்து 1993-ல் முறையாக பதிவு செய்தனர். முதன்முதலாக அக்டோபர் 1992-ல் கந்த சஷ்டி விழா இங்குள்ள தமிழர்களால் ஆறு நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 1995-ம் ஆண்டு பக்தர்களின் பொருளுதவியுடன் புதிய கோவிலைக் கட்டுவதற்கு நியூலேண்ட்ஸ் பகுதியில் நிலம் வாங்கப்பட்டது. கோவில் திருப்பணிகள் தொடங்கப்பட்டு, மார்ச் 1999-ம் ஆண்டு கோவில் வழிபாட்டுக்கு தொடங்கப்பட்டது. விரைவில் வெங்கடேச பெருமாளுக்காக தனி ஆலயம் அமைக்க உள்ளார்கள்.

 

தல அமைப்பு:

கோவிலின் கருவறையில் குறிஞ்சி குமரன் அழகிய தோற்றத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துக்கொண்டிருக்கின்றார். மேலும், விநாயகப்பெருமான், சிவப்பெருமான், அம்மன், துர்க்கை, ஆஞ்சநேயர், பெருமாள், லட்சுமி, நவக்கிரகங்கள் என அனைத்து தெய்வங்களும் இக்கோவிலில் பக்தர்களுக்கு அருளுகின்றனர். முருகப்பெருமான் மட்டுமல்லாது அனைத்துத் தெய்வங்களின் உற்சவ சிலைகள் இருப்பது இக்கோவிலின் சிறப்பு. அனைத்து வித  பூஜைகளும், விசேஷங்களும் மிகச்சிறப்பான முறையில் நடத்தப்படுகின்றன. 

   

திருவிழா:, 

கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், விநாயகர் சதுர்த்தி, தமிழ் வருட பிறப்பு, பிரதி சஷ்டி, கார்த்திகை, பிரதோஷம்,   


பிரார்த்தனை:

குறைகள் தீர, மன அமைதி வேண்டி, நினைத்த காரியம் நடந்தேற


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், பிரசாதம்


திறக்கும் நேரம்:

காலை 8.30-10.30 மாலை 6.30-8.30


நினைத்த காரியம் நடந்தேற அருளுகின்ற நியுசிலாந்து வெலிங்க்டன் குறிஞ்சி குமரனை வெள்ளிக்கிழமையன்று வேண்டி பிரார்த்திப்போம்!                                                                                                                                                                                  

 

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🙏


படம் 1 - குறை தீர்க்கும் நியுசிலாந்து வெலிங்க்டன் குறிஞ்சி குமரன்



படம் 2 - நினைத்த காரியம் நிறைவேற்றும் நியுசிலாந்து வெலிங்க்டன் குறிஞ்சி குமரன்

Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்