கோவில் 324 - ஆஸ்திரேலியா கான்பரா அறுபடை முருகன் கோவில்

 🙏🙏                                                                                                                                                              தினம் ஒரு முருகன் ஆலயம்-324

ஞானம் மேம்பட அருளும் ஆஸ்திரேலியா கான்பரா அறுபடை முருகன் கோவில் 

28.4.22 வியாழன்

அருள்மிகு அறுபடை முருகன் திருக்கோவில்

டோரன்ஸ் (Torrens) 

கான்பரா (Canberra) – ACT 2607

ஆஸ்திரேலியா

மூலவர்: ஆறுபடை முருகன் 


தல மகிமை:

ஆஸ்திரேலியா தலைநகரம் கான்பராவில் உள்ள டோரன்ஸ் (Torrens) ACT 2607-ல் பீஸ்லி தெருவில் முருகப்பெருமானின் சிறப்பு மிக்க கான்பரா அறுபடை வீடு முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் நிர்வாகத்தை இலங்கை மற்றும் தென்னிந்திய தமிழர்கள் இணைந்து ஆரம்பித்த கான்பரா சைவக்கோவில் மற்றும் கல்வி சங்கம் சிறப்பாக நடத்து வருகிறது. மேலும் இந்த சங்கம் சைவ மத முன்னேற்றத்திற்காக இந்து கலாசாரம் பரவ உதவுதல், கல்வி, நூலகம் மற்றும் ஆன்மீகப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. 


அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி, திருச்செந்தூர், சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை முருகனை போன்ற சிலைகளை வடித்து ஒரு பெரிய கருவறை மற்றும் 5 சிறிய கருவறைகள் என ஆறு தனித்தனி சந்நிதிகளில் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது இத்திருக் கோவிலின் சிறப்பாகும். இந்த அறுபடை வீடு முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, மேற்குறிப்பிட்ட முருகப்பெருமானின் ஆறுபடை தலங்களுக்குச் சென்று வழிபடும் பலனை தருகின்றது என்பது ஆன்றோர்களின் நம்பிக்கை.   


தலவரலாறு:

ஆஸ்திரேலியா வாழ் தமிழர்களின் முயற்சியால் கான்பரா சைவக்கோவில் மற்றும் கல்வி சங்கம் மூலம் தமிழகத்தில் உள்ளது போலவே அறுபடை வீடு முருகப்பெருமான் சிலைகள், வள்ளி, தெய்வானை, விநாயகர், சிவன் முதலான முக்கிய தெய்வங்களின் சிலைகளை தமிழக ஸ்தபதியைக் கொண்டு தத்ரூபமாக செய்து அறுபடை முருகன் கோவிலை எழுப்பி, 1997 நவம்பரில் முதல் கட்ட கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. மீண்டும் 2007-ல் கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடைப்பெற்றது.      


தல அமைப்பு:

இந்தத் திருகோவிலில் உள்ள பெரிய கருவறையில், மூலவராக திருத்தணி முருகப்பெருமான் கோவிலில் நடுநாயகமாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மற்ற 5 கருவறைகளில் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, பழமுதிர்சோலை தலங்களில் உள்ள முருகப்பெருமான் போன்ற வடிவில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 


முப்பெரும் தேவியர் துர்க்கை, மகாலட்சுமி, சரஸ்வதி முதலான தெய்வங்கள் பெரிய் சந்நிதிகளில் தனித்தனியே வீற்றிருந்து அருள்கின்றனர். மேலும், விநாகயப்பெருமான், சிவப்பெருமான், அம்பிகை, மகா விஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி, நடராஜர், சிவகாமசுந்தரி, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், பைரவர் முதலான முக்கிய தெய்வங்களும் தனி சந்நிதிகளில் அமர்ந்திருந்து அருளுகின்றனர். 

   

திருவிழா:, 

தைப்பூசம், கந்த சஷ்டி,  பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, மகா சிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, பிரதி சஷ்டி, கார்த்திகை, பவுர்ணமி, அமாவாசை   


பிரார்த்தனை:

ஞானம் மேம்பட, செல்வம் பெருக, தீவினைகள் அகல, நற்பலன்கள் கிடைக்க


நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள்


திறக்கும் நேரம்:

காலை 7.30-10 மாலை 5.3-8


கான்பரா அறுபடை முருகனை நம் மனக்கண்ணால் தரிசித்து அனைத்து நற்பலன்களையும் பெற்று மகிழ்ந்திடுவோம்!                                                                                                                                                                                  

 

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🙏



படம் 1 - செல்வம் பெருக அருளும் கான்பரா அறுபடை முருகன்



படம் 2 - ஞானம் மேம்பட அருளும்  கான்பரா அறுபடை முருகன் கோவில் உற்சவர்

Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்