கோவில் 323 - ஆஸ்திரேலியா பெர்த் பாலமுருகன் கோவில்
🙏🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-323
இகபர சௌபாக்கியங்கள் அருளும் ஆஸ்திரேலியா பெர்த் பாலமுருகன் கோவில்
27.4.22 புதன்
அருள்மிகு பெர்த் பாலமுருகன் திருக்கோவில்
Mandogalup
பெர்த் (Perth)
வெஸ்டெர்ன் ஆஸ்திரேலியா – WA 6167
ஆஸ்திரேலியா
மூலவர்: பாலமுருகன்
உற்சவர்: வள்ளி, தெய்வானை சமேத செல்வ முத்துக்குமார சுவாமி
தல மகிமை:
ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள பெர்த் நகரிலிருந்து 35 கிமீ தொலைவில் ஆற்றல் மிக்க அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில் அமைந்துள்ளது இக்கோவில் மேற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள சைவ மகாசபையால் 1996-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த சைவ மகா பை, மேற்கு ஆஸ்திரேலியாவில் வசிக்கும். இலங்கை, இந்தியா, மலேசியா மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த தமிழர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். கோவில் வளாகத்தில் மயில்கள் இருப்பது சிறப்பு.
பெர்த் பால முருகன் திருக்கோயில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் மாண்டோகலப் எனும் இடத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தமிழ் இசை மற்றும் தமிழக நடனங்கள் கற்பிக்கப்படுகின்றன இந்தியா இலங்கை, மலேசியா மற்றும் சிங்கப்பூர் தமிழர்களால் நடத்தப்படும் வகுப்புக்கள் தென்னிந்திய கலாச்சாரத்தை வளர்க்கும் விதமாக அமைந்துள்ளது. கோவிலில் நூலகம், கருத்தரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
கோவிலின் வருடாந்திர திருவிழா சித்திரை மாத பிறப்பிலிருந்து 13 நாட்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த வருட 14.4.2022 முதல் 26.4.2022 வரை சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. கந்த சஷ்டி திருவிழாவில் தினமும் ஹோமம், அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெறும். சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெறும். தைப்பூசம், பங்குனி உத்திரம் மற்றும் இதர திருநாள்களும் சிறப்பாக நடைபெறும். ஒவ்வொரு வெள்ளியன்றும் இறைவனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, வள்ளி, தெய்வானை சமேத செல்வ முத்துகுமார சுவாமி திருவீதி உலா வருவது சிறப்பு.
தலவரலாறு:
பெர்த் பாலமுருகன் கோவில் 1996-ம் ஆண்டு மேற்கு ஆஸ்திரேலியாவின் சைவ மகா சபையால் உருவாக்கப்பட்டது. மயில் வந்த அதிசயம்: இக்கோவிலுக்கு நிலம் கிடைத்தது ஒரு தெய்வீக நிகழ்வாகும். மகாசபை பக்தர்கள் முருகப்பெருமானை வழிபடும் நாட்களில் ஒரு ஆஸ்திரேலிய அன்பர் பக்தியுடன் வந்து செல்வாராம். அவரிடம் உள்ள நிலத்தின் ஒரு பகுதியை கோவில் கட்டுவதற்காக கேட்டப்போது அவர் தர மறுத்துவிட்டார். அன்றிரவே அவரது கனவில் முருகப்பெருமான் கையில் வேலுடனும், மயிலுடனும் காட்சியளித்தார். மேலும் மறுநாள் மதியம் அவரது நிலத்தில் அதிசயமாக மயிலொன்று வந்து வெகுநேரமாக தோகை விரித்து ஆடியதைக் கண்டு ஆஸ்திரேலிய பக்தரும், இதர மக்களும் மெய்சிலிர்த்து இருந்தனர். முருகனின் திருவருளால் அந்த பக்தர் தந்து முழு நிலத்தையும், முருகன் கோவில் கட்டுவதற்காக சகாய விலையில் கொடுத்தது அதிசய நிகழ்வாகும். இன்றும் அங்கு நிறைய மயில்கள் ஆடுவது இத்தல சிறப்பாகும்.
இந்த நிலத்தில் அனைத்து தமிழர்களின் பொருளுதவியுடன் கோவில் எழுப்பப்பட்டு, கோவில் கும்பாபிஷேகம் 11.5.2008-ல் நடந்தது. மீண்டும் 7.2.2020-ல் மிக சிறப்பாக கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. .
தல அமைப்பு:
கோவிலின் முன்புறம் உள்ள தோட்டத்தின் நடுவே நீரூற்றுடனான சிவன் சிலையை உடைய தியான அறை அமைக்கப்பட்டுள்ளது மேலும் இதன் அருகே பார்வதி தேவி, மகா விஷ்ணு முதலான தெய்வங்களூம், சரவணபொய்கை குளமும் அமைந்துள்ளது.
கந்தக்கோட்டம் என்றும் அழைக்கப்படும் இந்த திருத்தலத்தின் கருவறையில், முருகப்பெருமான், பாலமுருகன் என்ற திருப்பெயருடன் நின்ற கோலத்தில் காட்சி அளித்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் பால செல்வவிநாயகர், பொன்னம்பலவானேஸ்வரர், சொர்ணாபிகை, ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீமன்நாரயணர், ஆஞ்சநேயர், ஐயப்பன், ஆத்மலிங்கப்பெருமான், துர்க்கை, பைரவர், நவக்கிரகங்கள் முதலான தெய்வங்களும் சந்நிதிகளில் வீற்றிருந்து சிறப்பாக அருள்பாலிக்கின்றனர். உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத செல்வ முத்துக்குமார சுவாமி அழகு மிகுந்த தோற்றத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருளுவர்து சிறப்பு.
திருவிழா:,
சித்திரை வருடாந்திர திருவிழா, கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம், மாசிமகம், பொங்கல், தீபாவளி, ஆங்கில புத்தாண்டு, மகா சிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, பிரதி வெள்ளி, சஷ்டி, கார்த்திகை, பவுர்ணமி, ஏகாதசி
பிரார்த்தனை:
இகபர சௌபாக்கியம் வேண்டி, மன அமைதி வேண்டி, வேண்டுவன நிறைவேற
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள்
திறக்கும் நேரம்:
காலை 6-12 மாலை 6-9
பெர்த் பாலமுருகனை மனமுருக வேண்டிக்கொண்டால் மன நிம்மதியை தந்தருளுவார்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - இகபர சௌபாக்கியங்கள் அருளும் ஆஸ்திரேலியா பெர்த் பாலமுருகன்
Comments
Post a Comment