கோவில் 315 - சென்னை மடிப்பாக்கம் வாணுவம்பேட்டை தங்கமுருகன் கோவில்

 🙏🙏                                                                                                                                                              தினம் ஒரு முருகன் ஆலயம்-315

21 அடி விஸ்வரூப விநாயகரும் 74 அடி முருகனும் அருளும் சென்னை மடிப்பாக்கம் வாணுவம்பேட்டை தங்கமுருகன் கோவில் 

19.4.22 செவ்வாய்

அருள்மிகு (பழண்டியம்மன்) தங்கமுருகன் திருக்கோவில்

வாணுவம்பேட்டை 

மடிப்பாக்கம்

சென்னை-600091 

இருப்பிடம்: மடிபாக்கம்-கோவில் 3 கிமீ, கோயம்பேடு 15 கிமீ, சென்டரல் 19 கிமீ

மூலவர்: தங்கமுருகன், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், பழண்டியம்மன்


தல மகிமை: 

சென்னை மடிப்பாக்கம் அருகில் உள்ள வாணுவம்பேட்டை பழண்டியம்மன் கோவிலில், மலேசியா பத்துமலை முருகனைப் போலவே, சென்னையிலேயே உய்ரமான 74 அடி உயர தங்கமுருகன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்லது. மேலும், கோவிலுக்குள் நுழைந்தவுடன் 21 அடி உயர விஸ்வரூப விநாயகப்பெருமான் சிலை இருப்பது சிறப்பு. 100 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில், பழண்டியம்மன் கிராம தேவதையாக வணங்கப்படுகிறார். 


கோவில் கோபுரம் அருகில் சென்னையிலேயே உயரமான இந்த முருகப்பெருமான் தலை மீது மேகங்கள் நகர்வது கண்ணுக்கு அழகு மற்றும் சிறப்பு. தற்போது முருகனால் சிறப்புப் பெற்ற இக்கோவிலுக்கு கூட்டம் கூட்டமாக பக்தர்கள் வருகின்றனர்.  


தல வரலாறு:

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோவிலில், பழண்டியம்மன் பிராதான தெய்வமாக வணங்கப்பட்டார். 21 அடி உயர விஸ்வரூப விநாயகர், அகத்திய முனிவர் உட்பட 18 சித்தர்கள் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. பின்னர் 74 அடி உயர முருகப்பெருமான் சிலை வடிக்கப்பட்டு 16.9.21-ல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது தங்க முருகன் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. 


தல அமைப்பு:

கோவில் ராஜகோபுரத்தில் விநாயகர் மற்றும் முருகனுக்கு நடுவில் பழண்டியம்மன் சுதை சிற்பங்கள் பக்தர்களுக்கு ஆன்மீக அதிர்வுகளை உண்டாக்குகின்றன,


கருவறையில் பழண்டியம்மன் அழகிய பொலிவுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அம்மனுக்கு எதிரில் திரிசூலம் உள்ளது. கோவிலின் கொடிமரம் நெடியதாக இருக்கின்றது. திருக்கோவில் பின்புறம் வலம்புரி விநாயகர், சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன், தட்சிணாமூர்த்தி, மகாலட்சுமி சமேத லட்சுமி நாராயணர், ஆஞ்சயநேயர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், தர்மசாஸ்தா, நவக்கிரகங்கள் முதலான தெய்வங்கள் தனிதனி சந்நிதிகளில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.


கோவில் நுழைவு வாயிலில் விஸ்வரூப விநாயகப்பெருமான் பிரம்மாண்டமாக வீற்றிருந்து அருள்கின்றார். கணபதிக்கு பின்புறம் 18 சித்தர் பெருமான்கள் சிலைகள் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி சித்தர்கள் குடியிருப்பு என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த சமயத்தில் பக்தர் ஒருவர் கனவில் வந்த அம்மன் தன் இன்னொரு மகனான முருகனுக்கும் பிரம்மாண்டமாக சிலை அமைக்க சொன்னதாக சொல்லப்படுகிறது. தாயாரின் விருப்பப்படியே 74 அடி உயர முருகன் சிலை நிர்மானிக்கப்பட்டு, அம்மனைப் போலவே முருகப்பெருமானும் ஆற்றல் முகுந்தவராக பக்தர்களுக்கு அருள்பாலிகின்றார்.      


திருவிழா

முருகன், விநாயகர் மற்றும் அம்மனுக்குரிய விசேஷ நாட்கள்


பிரார்த்தனை:

நேர்மறை ஆற்றல் அதிகரிக்க வேண்டி, நினைத்தது நிறைவேற, திருமணம் கைக்கூட, தீராத நோய்கள் தீர


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்புப் பூஜைகள், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 7.30-10 மாலை 4.30-8


நேர்மறை ஆற்றலை அதிகரித்து அருளும் வாணுவம்பேட்டை தங்கமுருகனை வேண்டி எல்லா நலன்களும் பெற்றிடுவோம்!                                                                                                                                                                                  

 

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🙏



படம் 1 - நேர்மறை ஆற்றலை அதிகக்க அருளும்  வாணுவம்பேட்டை தங்கமுருகன்



படம் 2 - சங்கடங்களை தீர்க்கும் விஸ்வரூப விநாயகர், சென்னை மடிப்பாக்கம் வாணுவம்பேட்டை (பழண்டியம்மன்)   தங்கமுருகன் கோவில்

Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்