பதுவு 250 - அந்தமான் போர்ட் பிளேர் வெற்றிமலை முருகன் கோவில்

 🙏🙏                                                                                                                                                              தினம் ஒரு முருகன் ஆலயம்-250

மாசி மாத பிறப்பன்று தொடர்ந்து 250-வது நாளில் அந்தமான் போர்ட் பிளேர் வெற்றிமலை முருகன்  கோவில்

13.2.2022 ஞாயிறு

அருள்மிகு வெற்றிமலை முருகன்  திருக்கோவில்

போர்ட் பிளேர்-744106 

அந்தமான் & நிக்கோபார் தீவுகள் 

இருப்பிடம்: போர்ட் பிளேர் பேருந்து நிலையம் 750 மீ, ஏர்போர்ட் 3.5 கிமீ


மூலவர்: வெற்றிமலை முருகன் 

தேவியர்: வள்ளி, தெய்வானை


தலமகிமை:

சிறப்பு மிக்க முருகப்பெருமான் கோவில், தலைநகர் போர்ட் பிளேரின் மையத்தில் ஆளுநர் மாளிகைக்கு பின்னால் அமைந்துள்ளது. வெற்றிமலை முருகன் கோயில் என்றழைக்கப்படும் இந்த கோவில், அந்தமான் தீவில் மிகவும் பிரபலமான வழிபாட்டுத் தலமாகும்.  


கோவிலின் கட்டுமானம் திராவிட பாணியின் அமைந்துள்ளது சிறப்பாகும். கோபுரத்தில் மிகவும் அழகான ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. கோவில் மிகவும் பழமையானதாக இருந்தாலும், சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கோவிலின் கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு சென்னை கந்தக்கோட்டம் கோவிலை போன்றே உள்ளது.


இந்த புகழ்பெற்ற கோவில் பெரும்பாலும் தொண்டு வேலைகளில் ஈடுபட்டுள்ளது, இதில் முதன்மையாது அன்னதானம். தமிழர்களின் முக்கிய விழாக்களான கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம் அன்று கோவிலுக்கு வரும் பல்லாயிர கணக்கான பக்தர்களுக்கு உணவளிப்பது மிக சிறப்பு. நேர்மறை ஆற்றல் நிறைந்த தலம் 


கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சுமார் 6,000 பேர் கலந்து கொள்ளும் பிரகாஷ் யாத்ரா என்ற மாபெரும் மெழுகுவர்த்தி பேரணியைக் காணலாம். பலதரப்பட்ட மக்கள் வசிக்கும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் இந்தியாவின் மத மற்றும் கலாச்சார பன்முகத்தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு.


தல வரலாறு:

1932-ம் ஆண்டு ரோஸ் தீவுகளில் ஆங்கிலேயர்களின் தலைமையகத்தில் இந்த கோவில் முதலில் கட்டப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு நிர்வாகம், ராஸ் தீவுகளில் இருந்து போர்ட் பிளேயருக்கு மாற்றினர்.. 1966-ம் ஆண்டு இந்த முருகன் கோவில் போர்ட் பிளேயருக்கு மாற்றப்பட்டது. ஸ்ரீ வெற்றிமலை முருகன் தலம் ஆன்மீக பயணம் மற்றும் சுற்றுலா போன்ற அற்புதமான இடத்திற்கு பயணிக்கும் சிறந்த அனுபவத்தை வழங்குகிறது.  


தல அமைப்பு:

இக்கோவில் கருவறையில் முருகப்பெருமான், தேவியர் சமேதமாக நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். பிரகாரங்களில் விநாயகர், சிவப்பெருமான், பார்வதி ஆகிய ஆற்றல் மிக்க தெய்வங்களும் அருளுகின்றனர்.   


திருவிழா:

பங்குனி உத்திரம். கந்த சஷ்டி, தைப்பூசம்


பிரார்த்தனை:

நேர்மறை எண்ணங்கள் நிறைவேற, 


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 5-12 மாலை 4-9


நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும் அந்தமான் போர்ட் பிளேர் வெற்றிமலை முருகனை பிரார்த்தித்து பலனடைவோம்!

 !

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🙏




படம் 1 - நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும் அந்தமான் போர்ட் பிளேர் வெற்றிமலை முருகன்



படம் 2 - மத மற்றும் கலாச்சார பன்முகத்தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டான அந்தமான் போர்ட் பிளேர் வெற்றிமலை முருகன்  கோவில்

Comments

Popular posts from this blog

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1201 - கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்