கோவில் 1800 - கள்ளக்குறிச்சி உ. கீரனூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1800

சகல செல்வங்களையும் அள்ளித் தந்தருளும் கள்ளக்குறிச்சி உ. கீரனூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

13.05.2026 புதன்


அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் [TM020560]

உ. கீரனூர் 680688

உளுந்தூர்பேட்டை PO

கள்ளக்குறிச்சி மாவட்டம்


இருப்பிடம்: கள்ளக்குறிச்சி 42 கிமீ, உளுந்தூர்பேட்டை 9 கிமீ, விருத்தாசலம் 24 கிமீ, விருத்தாசலம் 24 கிமீ, பண்ருட்டி 36 கிமீ, திருக்கோவிலூர் 45 கிமீ


மூலவர்: சுப்பிரமணிய சுவாமி

உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை


தல மகிமை:

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உ. கீரனூர் கிராமத்தில் சகல செல்வங்களையும் அள்ளித் தந்தருளும். கீரனூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.


கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து 42 கிமீ தொலைவு அல்லது உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து 9 கிமீ தொலைவு அல்லது விருத்தாசலம் பேருந்து நிலையத்திலிருந்து 24 கிமீ தொலைவு அல்லது, பண்ருட்டி பேருந்து நிலையத்திலிருந்து 36 கிமீ தொலைவு அல்லது திருக்கோவிலூர் பேருந்து நிலையத்திலிருந்து 45 கிமீ தொலைவு பிராயணம் செய்தாலும் உ. கீரனூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி பொலிவுடன் வீற்றிருந்து அருளுள் புரிகின்றார்.


கள்ளக்குறிச்சி உ. கீரனூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தைப்பூசம் சிறப்புப் பூஜைகளுடன் விமரிசையாக் நடைபெறுகின்றது. தங்கள் நேர்த்திக்கடனுக்காக பக்தர்கள் காவடி சுமந்து வருகின்றன. கந்த சஷ்டி திருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது. மேலும் முருகப்பெருமானின் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட அனைத்துத் திருவிழாக்களும் இத்திருக்கோவிலில் சிறப்பு வழிபாடுகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை போன்ற திருநாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.


தல வரலாறு:

கள்ளக்குறிச்சி உ. கீரனூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் நிர்வாகத்தை தற்போது இந்து அறநிலையத் துறை நிர்வகித்து வருலிறது..


தல அமைப்பு:

கள்ளக்குறிச்சி உ. கீரனூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கோபுரம் அழகிய அமைப்பில் முறையில் கட்டப்பட்டுள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் சக்தி விநாயகர், உற்சவர், இடும்பன், கடம்பன், மகாலட்சுமி, நவக்கிரங்கள் உள்ளிட்ட அனைத்துத் தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.

.

திருவிழா:

தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

சகல செல்வங்களையும் அள்ளித் தந்தருள, மன மகிச்சி கிட்ட, வினைகள் விலக, பிணி போக்க, திருமண வரன் வேண்டி, குழந்தைப் பேறு உண்டாக, நோய்கள் குணமாக, நேர்மறை எண்ணங்கள் உருவாக, அல்லல்கள் அகல, தோஷங்கள் விலக


நேர்த்திக்கடன்:

காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


திறந்திருக்கும் நேரம்:

காலை 5-10.30 மாலை 5.30-8.60


மன மகிழ்ச்சி தந்தருளும் கள்ளக்குறிச்சி உ. கீரனூர் சுப்பிரமணிய சுவாமியை முக்கரணங்களால் வாழ்த்தி வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

🙏🏻🙏🏻


படம் 1 - 1800 சகல செல்வங்களையும் அள்ளித் தந்தருளும் கள்ளக்குறிச்சி உ. கீரனூர் சுப்பிரமணிய சுவாமி


படம் 2 - 1800 மன மகிழ்ச்சி தந்தருளும் கள்ளக்குறிச்சி உ. கீரனூர் சுப்பிரமணிய சுவாமி

Comments