கோவில் 1799 - கேரளா திருச்சூர் பாடியூர் வைக்கம் சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1799
ஞானம் மேம்பட அருளும் கேரளா திருச்சூர் பாடியூர் வைக்கம் சுப்பிரமணிய சுவாமி கோவில்
12.05.2026 செவ்வாய்
அருள்மிகு வைக்கம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
பாடியூர் 680688 [Padiyur/ Padiyoor]
[படியூர்]
திருச்சூர் மாவட்டம் [Thrissur]
கேரளா மாநிலம் [Kerala]
இருப்பிடம்: திருச்சூர் 31 கிமீ, இரிஞ்சாலக்குடா 8 கிமீ, கொடுங்களூர் 10 கிமீ, கொச்சி விமான நிலையம் 42 கிமீ, குருவாயூர் 43 கிமீ, ஏர்ணாகுளம் 45 கிமீ
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி
தல மகிமை:
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் பாடியூர் கிராமத்தில் ஞானம் மேம்பட அருளும் பாடியூர் வைக்கம் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.
திருச்சூர் பேருந்து நிலையத்திலிருந்து 31 கிமீ தொலைவு அல்லது இரிஞ்சாலக்குடா பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவு அல்லது கொடுங்களூர் பேருந்து நிலையத்திலிருந்து 10 கிமீ தொலைவு அல்லது கொச்சி விமான நிலையத்திலிருந்து 42 கிமீ தொலைவு அல்லது குருவாயூர் பேருந்து நிலையத்திலிருந்து 43 கிமீ தொலைவு அல்லது ஏர்ணாகுளம் பேருந்து நிலையத்திலிருந்து 45 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் திருச்சூர் பாடியூர் வைக்கம் சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்.
திருச்சூர் பாடியூர் வைக்கம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசம் முக்கியத் திருவிழாவாக காவடியாட்டம், சிறப்புப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றது. கந்த சஷ்டி திருவிழா மற்றும் திருவோணம் விமரிசையாக நடைபெறுகின்றது. மேலும் முருகப்பெருமானின் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட அனைத்துத் திருவிழாக்களும் இத்திருக்கோவிலில் சிறப்பு வழிபாடுகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை போன்ற திருநாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கேரள மாநிலம் திருச்சூர் பாடியூர் வைக்கம் சுப்பிரமணிய சுவாமி கோவில் கொடுங்கள்ளூர் பகுதியில் முக்கியமான முருகன் திருக்கோவிலாகும்.
தல அமைப்பு:
திருச்சூர் பாடியூர் வைக்கம் சுப்பிரமணிய சுவாமி கோவில் அழகிய முறையில் கட்டப்பட்டுள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் இத்திருக்கோவிலில் கணபதி, உற்சவர், ஐயப்பன், நாகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
.
திருவிழா:
தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை, திருவோணம்
பிரார்த்தனை:
ஞானம் மேம்பட, நல்லன அருள, வேண்டியது கிட்ட, வினைகள் அகல, பிணிகள் தீர, குழந்தைப் பேறு உண்டாக, குடும்ப வாழ்வு சிறக்க, செல்வம் பெருக, நோய்கள் நீங்க, தொல்லைகள் அகல, நேர்மறை எண்ணங்கள் உண்டாக, மன மகிழ்ச்சி வேண்டி, தோஷங்கள் போக்க
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
நல்லன அருளும் திருச்சூர் பாடியூர் வைக்கம் சுப்பிரமணிய சுவாமி தாள் பணிந்து வேண்டுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
🙏🏻🙏🏻
படம் 1 = 1799 ஞானம் மேம்பட அருளும் கேரளா திருச்சூர் பாடியூர் வைக்கம் சுப்பிரமணிய சுவாமி கோவில்
Comments
Post a Comment