கோவில் 1798 - கேரளா திருச்சூர் எறியாடு சுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1798

இகபர சுகம் தரும் கேரளா திருச்சூர் எறியாடு சுப்பிரமணிய சுவாமி கோவில்

11.05.2026 திங்கள்


அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

எறியாடு 680666 [Eriyad]

[எரியாட்/எரியாடு]

திருச்சூர் மாவட்டம் [Thrissur]

கேரளா மாநிலம் [Kerala]


இருப்பிடம்: திருச்சூர் 42 கிமீ, கொடுங்களூர் 4 கிமீ, இரிஞ்சாலக்குடா 19 கிமீ, ஆலுவா 32 கிமீ, ஏர்ணாகுளம் 39 கிமீ, கொச்சி விமான நிலையம் 34 கிமீ, குருவாயூர் 50 கிமீ


மூலவர்: சுப்பிரமணிய சுவாமி

உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி


தல மகிமை:

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் எறியாடு கிராமத்தில் இகபர சுகம் தரும் எறியாடு சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.


திருச்சூர் பேருந்து நிலையத்திலிருந்து 42 கிமீ தொலைவு அல்லது கொடுங்களூர் பேருந்து நிலையத்திலிருந்து 4 கிமீ தொலைவு அல்லது இரிஞ்சாலக்குடா பேருந்து நிலையத்திலிருந்து 19 கிமீ தொலைவு அல்லது ஆலுவா பேருந்து நிலையத்திலிருந்து 32 கிமீ தொலைவு அல்லது ஏர்ணாகுளம் பேருந்து நிலையத்திலிருந்து 39 கிமீ தொலைவு அல்லது கொச்சி விமான நிலையத்திலிருந்து 34 கிமீ தொலைவு அல்லது குருவாயூர் பேருந்து நிலையத்திலிருந்து 50 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் திருச்சூர் எறியாடு சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி ஒரு கையில் வேலேந்தியும், மற்றொரு கை இடுப்பில் ஒயிலாக ஊன்றியபடி நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து அருளாட்சி செய்கின்றார்.


திருச்சூர் எறியாடு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழா முக்கியத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றது. கந்த சஷ்டி திருவிழா சிறப்புப் பூஜைகளுடன் விமரிசையாக நடைபெறுகின்றது. மேலும் முருகப்பெருமானின் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட அனைத்துத் திருவிழாக்களும் இத்திருக்கோவிலில் சிறப்பு வழிபாடுகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை போன்ற திருநாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.


தல வரலாறு:

கேரள மாநிலம் திருச்சூர் எறியாடு சுப்பிரமணிய சுவாமி கோவில் இப்பகுதியில் பிரசித்திப் பெற்ற திருக்கோவிலாகும்.


தல அமைப்பு:

திருச்சூர் எறியாடு சுப்பிரமணிய சுவாமி கோவில் பொலிவுடன் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி ஒரு கையில் வேலுடனும், மற்றொரு கையை இடுப்பில் ஒயிலாக ஏந்திய படியும் நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் இத்திருக்கோவிலில் கணபதி, உற்சவர், ஐயப்பன், சிவபெருமான், பகவதி உள்ளிட்ட எல்லா தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.

.

திருவிழா:

தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

இகபர சுகம் பெற, பிணிகள் தீர, நினைத்தது நிறைவேற, வினைகள் போக்க, சந்தான பாக்கியம் கிட்ட, உடல் ஆரோக்கியம் வேண்டி, மன அமைதி உண்டாக, நல்லன அருள, கவலைகள் மறைய, வியாபாரம் விருத்தியடைய, ஆனந்தம் பொங்க, தோஷங்கள் விலக

நேர்த்திக்கடன்:

காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


பிணிகள் தீர்க்கும் திருச்சூர் எறியாடு சுப்பிரமணிய சுவாமியை மனமுருக பிரார்த்திப்போம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

🙏🏻🙏🏻


படம் 1 - 1798 இகபர சுகம் தரும் கேரளா திருச்சூர் எறியாடு சுப்பிரமணிய சுவாமி


படம் 2 - 1798 பிணிகள் தீர்க்கும் திருச்சூர் எறியாடு சுப்பிரமணிய சுவாமி




Comments