கோவில் 1793 - கேரளா திருச்சூர் மண்ணூத்தி சுப்பிரமணியர் கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1793

விருப்பங்களை நிறைவேற்றும் கேரளா திருச்சூர் மண்ணூத்தி சுப்பிரமணியர் கோவில்

6.05.2026 புதன்


அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோவில்

சந்தோஷ் நகர்

மண்ணூத்தி 680651 [Mannuthy]

திருச்சூர் மாவட்டம் [Thrissur]

கேரளா மாநிலம் [Kerala]


இருப்பிடம்: திருச்சூர் 8 கிமீ, ஷோரனூர் 34 கிமீ, குருவாயூர் 36 கிமீ, கொடுங்களூர் 42 கிமீ, கொச்சி விமான நிலையம் 48 கிமீ, பாலக்காடு 63 கிமீ, ஏர்ணாகுளம் 73 கிமீ


மூலவர்: சுப்பிரமணியர்

உற்சவர்: சுப்பிரமணியர்


தல மகிமை:

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் மண்ணூத்தி நகரில் விருப்பங்களை நிறைவேற்றும் மண்ணூத்தி சுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ளது.


திருச்சூர் பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவு அல்லது ஷோரனூர் பேருந்து நிலையத்திலிருந்து 34 கிமீ தொலைவு அல்லது குருவாயூர் பேருந்து நிலையத்திலிருந்து 36 கிமீ தொலைவு அல்லது கொடுங்களூர் பேருந்து நிலையத்திலிருந்து 42 கிமீ தொலைவு அல்லது கொச்சி விமான நிலையத்திலிருந்து 48 கிமீ தொலைவு அல்லது பாலக்காடு பேருந்து நிலையத்திலிருந்து 63 கிமீ தொலைவு அல்லது ஏர்ணாகுளம் பேருந்து நிலையத்திலிருந்து 73 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் திருச்சூர் மண்ணூத்தி சுப்பிரமணியர் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணியர் கையில் வேலுடன் பொலிவாக வீற்றிருந்து அருளாட்சி செய்கின்றார்.


திருச்சூர் மண்ணூத்தி சுப்பிரமணியர் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. பக்தர்கள் காவடி ஏந்தி வருவர். மேலும் முருகப்பெருமானின் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட அனைத்துத் திருவிழாக்களும் இத்திருக்கோவிலில் சிறப்புப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.


தல வரலாறு:

கேரள மாநிலம் திருச்சூர் மண்ணூத்தி சுப்பிரமணியர் கோவில் இப்பகுதியில் பழமையான, பிரசித்திப் பெற்ற திருக்கோவிலாகும்.


தல அமைப்பு:

திருச்சூர் மண்ணூத்தி சுப்பிரமணியர் கோவில் கேரள கட்டிடக் கலை அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணியர் கையில் வேலுடன் பொலிவாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் இத்திருக்கோவிலில் கணபதி, உற்சவர், ஐயப்பன், சிவபெருமான், பகவதி உள்ளிட்ட அனைத்துத் தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

விருப்பங்கள் நிறைவேற, வினைகள் நீக்க, பிணிகள் தீர, குழந்தை பாக்கியம் வேண்டி, குடும்ப வாழ்வு சிறக்க, உடல் ஆரோக்கியம் உண்டாக, நல்லன அருள, துன்பங்கள் குறைய, மன அமைதி கிட்ட, தொழில், வியாபாரம் சிறக்க, தோஷங்கள் அகல

நேர்த்திக்கடன்:

காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 5.30-9 மாலை 5.30-7


வினைகளை நீக்கியருளும் திருச்சூர் மண்ணூத்தி பாலசுப்பிரமணியரின் திருவடிகளை சென்னி மேல் வைத்து வேண்டிடுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

🙏🏻🙏🏻


படம் 1 - 1793 விருப்பங்களை நிறைவேற்றும் கேரளா திருச்சூர் மண்ணூத்தி சுப்பிரமணியர்


படம் 2 - 1793 வினைகளை நீக்கியருளும் திருச்சூர் மண்ணூத்தி பாலசுப்பிரமணியர்


Comments